மழைக்கால சூடான பானங்கள்; சளி, காய்ச்சல் எல்லாம் பறந்து போகும்!

மழைக்காலங்களில் ஏற்படக்கூடிய உடல் உபாதைகளில் இருந்து நம்மை பாதுகாக்கும் சில அற்புதமான பானங்கள் குறித்து இக்கட்டுரையில் காணலாம்.

Aug 8, 2024 - 07:41
Aug 8, 2024 - 07:41
 0
மஞ்சள் - ஓமம் பால்:
2 / 4

2. மஞ்சள் - ஓமம் பால்:

ஆயுர்வேதம் என்று வந்துவிட்டாலே அதுல மஞ்சள் ஒரு அடிப்படையான மற்றும் முக்கியப் பொருளாகவே இருக்கு. நம்ம உடலில் வரும் பல பிரச்சனைகளுக்கு மஞ்சள் ஒரு சிறந்த தீர்வாக இருந்து வருது. சின்னதாக காயம் ஏற்பட்டா அதுல மஞ்சளை அரைத்து போடுறதுல இருந்து, சளி, காய்ச்சல் வரை மஞ்சள் இன்றியமையாத ஒரு பொருளாகவே இருக்கு. மிகவும் எளிதாகக் கிடைக்ககூடிய மருத்துவ பொருள் என்றால் அது மஞ்சள்தான். இதுல வைட்டமின் சி, வைட்டமின் பி6, மேங்கனீஸ், இரும்புச்சத்து உள்ளிட்ட பல நன்மைகள் கொட்டிக்கிடக்குது. ஒரு டம்ளர் பால் எடுத்து அதுல அரை டீ ஸ்பூன் மஞ்சளை சேர்த்து நல்லா காய்ச்சி எடுத்துக்கோங்க. இதுகூட சிறிதளவு ஓமம் சேர்த்துக்கிட்டா ரொம்பவே நல்லது. இந்த மஞ்சள் பாலை தினமும் இரவு தூங்குறதுக்கு முன்னாடி குடிச்சீங்கனா உடலில் உள்ள எல்லா பிரச்சனைகளும் பறந்து போகும். 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow