Vettaiyan: வேட்டையன் படத்தில் அமிதாப் பச்சன் கேரக்டர்... Wow! செம மாஸ்ஸாக வெளியான கிளிம்ப்ஸ் வீடியோ!

சூப்பர் ஸ்டார் ரஜினியின் வேட்டையன் படத்தில் இருந்து அமிதாப் பச்சனின் கேரக்டர் கிளிப்ஸ் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.

Sep 20, 2024 - 01:14
 0
Vettaiyan: வேட்டையன் படத்தில் அமிதாப் பச்சன் கேரக்டர்... Wow! செம மாஸ்ஸாக வெளியான கிளிம்ப்ஸ் வீடியோ!
ரஜினிகாந்த் - அமிதாப் பச்சன்

சென்னை: தசெ ஞானவேல் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இயக்கியுள்ள திரைப்படம் வேட்டையன். லைகா தயாரிப்பில் அனிருத் இசையமைத்துள்ள இந்தப் படம், அக்டோபர் 10ம் தேதி ரிலீஸாகிறது. வேட்டையன் படத்தின் இசை வெளியீட்டு விழா நாளை (செப்.20) சென்னை நேரு ஸ்டேடியத்தில் நடைபெறுகிறது. இதில் ரஜினி, இயக்குநர் தசெ ஞானவேல், அனிருத், லைகா சுபாஸ்கரன், ரித்திகா சிங், மஞ்சு வாரியர், துஷரா விஜயன் ஆகியோர் பங்கேற்கவுள்ளதாக சொல்லப்படுகிறது. 

வேட்டையன் இசை வெளியீட்டு விழாவுக்கு முன்னர் ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்து வருகிறது படக்குழு. அதன்படி வேட்டையன் படத்தில் நடித்துள்ள ஃபஹத் பாசில், ராணா, மஞ்சு வாரியர், துஷார விஜயன், ரித்திகா சிங் ஆகியோரின் கிளிம்ப்ஸ் வீடியோக்கள் அடுத்தடுத்து வெளியாகின. முதலில் ரித்திகா சிங், அடுத்து துஷாரா விஜயன், மஞ்சு வாரியர், ராணா, ஃபஹத் பாசில் ஆகியோரின் கேரக்டர்கள் அறிவிக்கப்பட்டன. இறுதியாக ரஜினி, அமிதாப் பச்சன் இருவரது கேரக்டரை மட்டும் படக்குழு அறிவிக்காமல் இருந்தது. 

இந்நிலையில், தற்போது அமிதாப் பச்சனின் கேரக்டரையும் அவரது கிளிம்ப்ஸ் வீடியோவையும் படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி வேட்டையன் படத்தில் சத்யதேவ் என்ற கேரக்டரில் நடித்துள்ளார் பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன். ஷூட்டிங் ஸ்பாட்டில் அமிதாப் பச்சன் ரஜினி இருவரும் ஒன்றாக நடித்த காட்சிகளை எடிட் செய்து கிளிம்ப்ஸ் வீடியோவாக வெளியிட்டுள்ளது படக்குழு. ரஜினிகாந்த், அமிதாப் பச்சன் இருவரும் பல வருடங்களுக்குப் பின்னர் வேட்டையன் படத்தில் ஒன்றாக இணைந்து நடித்துள்ளனர். 

நாளை நடைபெறவுள்ள வேட்டையன் இசை வெளியீட்டு விழாவில், அமிதாப் பச்சன் கலந்துகொள்வது சந்தேகமே எனத் தெரிகிறது. அதேபோல், ஃபஹத் பாசில், ராணா ஆகியோர் பங்கேற்பார்களா எனவும் தெரியவில்லை. அக்டோபர் 10ம் தேதி சிங்கிளாக ரிலீஸாகும் வேட்டையன் பாக்ஸ் ஆபிஸில் மாஸ் காட்டுமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். இந்நிலையில், அமிதாப் பச்சனை தொடர்ந்து ரஜினியின் கேரக்டரும் தற்போது அறிவிக்கப்படுமா என ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர்.  

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow