தெலங்கானாவில் (செப்.16) அன்று வனர்பதி மாவட்டத்தில் உள்ள 400 ஆண்டுகள் பழமையான கோயிலில் சித்தார்த் - அதிதிராவ் திருமணம் இருவருக்கும் திருமணம் நடைபெற்றது. இவர்களது திருமணம் மிகவும் எளிமையாக, பெற்றோர்கள், உறவினர்கள் முன்னிலையில் திருமணம் நடைபெற்றது.
சித்தார்த்
இந்திய திரையுலகின் பிரபலமான நடிகர் சித்தார். தமிழ், தெலுங்கு, இந்தி என பல மொழிகளில் நடித்து ரசிகர்கள் மத்தி்யில் மிகவும் பிரபலமானவர்.நடிகர், தயாரிப்பாளர், பாடகர் என பன்முகம் கொண்ட சித்தார்த்திற்கு தற்போது 45 வயதாகிறது. மணிரத்னத்தின் உதவி இயக்குனராக திரைத்துறையில் நுழைந்த சித்தார்த் பாய்ஸ் படம் மூலமாக கதாநாயகன் ஆனார், கடந்த 2003ம் ஆண்டு மேக்னா என்ற பெண்ணை திருமணம் செய்தார். பின்னர், 2007ம் ஆண்டு இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்தனர்.
அதிதி ராவ்
மணிரத்னம் இயக்கிய காற்று வெளியிடை, செக்கச் சிவந்த வானம் மற்றும் ஹே சினாமிகா போன்ற படங்களில் நடித்தவர் அதிதி ராவ் ஹைதாரி. அதோடு, தெலுங்கு, மலையாளம், ஹிந்தி, மராத்தி, ஆங்கிலம் என பல மொழிகளிலும் பரவலாக நடித்து வருகிறார். தமிழ், தெலுங்கு, இந்தி என பல படங்களில் நடித்துள்ள சித்தார்த் மகாசமுத்திரம் என்ற தெலுங்கு படத்தில் அதிதிராவுடன் இணைந்து நடித்தார். அப்போது இருவருக்கும் இடையே உருவான நட்பு காதலாக மாறியது 37 வயதான அதிதி ராவ் ஏராளமான இந்தி படங்களில் நடித்துள்ளார்.
இதனால் தான் திருமணம் செய்தேன்
நடிகை அதிதி ராவ் அளித்துள்ள ஒரு பேட்டியில், சித்தார்த்தை திருமணம் செய்ய கொள்ள நான் ஒரு நொடி கூட யோசிக்கவில்லை. உடனே அதற்கு தயாராகி விட்டேன். அந்தளவுக்கு அவர் ஒரு நல்ல மனிதர். செயற்கை தனம் எதுவுமே கிடையாது. எப்பொழுதுமே ஒரே மாதிரியாக இருக்கக்கூடிய அன்பான மனிதர். எனக்கு நெருக்கமானவர்கள் என்றால் அவர்களை எனது வீட்டுக்கு வர வைத்து உபசரிப்பார். அவரது இந்த செயல் எனக்கு ரொம்பவே பிடித்திருந்தது. நான் சித்தார்த்தை திருமணம் செய்து கொள்வதற்கு அவரது இது போன்ற நல்ல செயல்பாடுகள்தான் காரணம். மேலும் நாங்கள் திருமணம் செய்து கொண்ட போது எனக்கு சரியான பட வாய்ப்புகள் இல்லை. அந்த இடைவெளியில் திருமணம் செய்து கொண்டு இப்போது மீண்டும் அவரவர் பாதையில் நடிக்க தொடங்கி விட்டோம் என்று கூறியிருக்கிறார்.
சினிமா
சித்தார்த்தை திருமணம் செய்ய இதுதான் காரணம் : அதிதி ராவ்
நான் சித்தார்த்தை திருமணம் செய்து கொள்வதற்கு அவரது இது போன்ற நல்ல செயல்பாடுகள்தான் காரணம் என்று நடிகை அதிதி ராவ் தெரிவித்துள்ளார்.