K U M U D A M   N E W S

இந்தியா

மும்பையில் பிரதமர் மோடி - பிரிட்டிஷ் பிரதமர் ஸ்டார்மர் சந்திப்பு.. வரலாற்றுச் சிறப்புமிக்க வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்து!

பிரதமர் மோடியும் பிரிட்டிஷ் பிரதமர் கெய்ர் ஸ்டார்மரும் மும்பையில் சந்தித்து, வர்த்தகம், பாதுகாப்பு, கல்வி குறித்தும், இரு தலைவர்களும் விரிவான பொருளாதார மற்றும் வர்த்தக ஒப்பந்தத்தில் (CETA) கையெழுத்திட்டதுடன், 9 இங்கிலாந்து பல்கலைக்கழகங்கள் இந்தியாவில் வளாகங்களைத் திறக்க ஒப்புக்கொண்டது முக்கிய முன்னேற்றமாகும் என மோடி தெரிவித்தார்.

கேரளாவில் அதிர்ச்சி.. கழுத்தில் கத்தியுடன் மருத்துவமனைக்குச் சென்ற நபர்!

கேரளாவில் நடந்த ஒரு சண்டையின்போது கத்தியால் குத்தப்பட்ட நபர், அந்தக் கத்தி கழுத்திலேயே குத்திய நிலையில் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தலைமை நீதிபதி மீது காலணி வீச முயற்சி: கடவுள் சொல்லித்தான் செய்தேன்- வழக்கறிஞர் ராகேஷ் கிஷோர்

உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி மீது காலணியை வீச முயன்ற வழக்கறிஞர் ராகேஷ் கிஷோர், தனது செயலுக்காக வருத்தப்படவில்லை என்று தெரிவித்துள்ளார்.

பீகார் சட்டப்பேரவைத் தேர்தல்.. 2 கட்டங்களாக நடைபெறும் என அறிவிப்பு!

பீகார் மாநிலச் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான தேதியை இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் இன்று அறிவித்தார்.

மேற்கு வங்கத்தில் பரபரப்பு: வெள்ள நிவாரணப் பணியின்போது பாஜக தலைவர்கள் மீது தாக்குதல்!

மேற்கு வங்கத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இடங்களில் ஆய்வு மேற்கொண்ட பாஜக எம்பி மாற்றும் எம்எல்ஏ-கள் மீது கல்வீச்சு தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உ.பி.யில் கொடூரம்: வரதட்சணை கேட்டு கர்ப்பிணி அடித்துக் கொலை!

உத்தரப் பிரதேசத்தில் வரதட்சணை கொடுமையால் 21 வயது கர்ப்பிணி அடித்து கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உ.பி.யில் அதிர்ச்சி சம்பவம்.. குடிபோதையில் ஒரு வயது மகனை கொலை செய்த கொடூர தந்தை!

உத்தரப் பிரதேசத்தில் குடிபோதையில் இருந்த நபர் தனது ஒரு வயது மகனை கொடூரமாக கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நடுவானில் ஏர் இந்தியா விமானத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு.. பயணிகள் கடும் அவதி!

அமிர்தசரஸில் இருந்து பிரிட்டன் பர்மிங்காம் புறப்பட்ட ஏர் இந்தியா விமானத்தில் நடுவானில் பறந்து கொண்டிருந்த போது தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Viral Video: போட்டோ எடுத்தவுடன் கொடுத்த பிஸ்கட்டை பறித்த பாஜக பெண் தொண்டர்!

ராஜஸ்தானில் பாஜக பெண் தொண்டர் ஒருவர் மருத்துவமனையில் உள்ள நோயாளிக்குப் பிஸ்கட் கொடுத்து, புகைப்படம் எடுத்த பிறகு அதை திரும்பப் பெறுவது போன்ற வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

ம.பி. துர்கா சிலை கரைப்பு விபத்து.. 10 குழந்தைகள் உட்பட 13 பேர் உயிரிழப்பு!

மத்தியப் பிரதேசத்தில் துர்கா தேவி சிலை கரைப்பு ஊர்வலத்தின்போது நடந்த விபத்துகளில் 13 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விஜயதசமி: நாட்டு மக்களுக்குப் பிரதமர் நரேந்திர மோடி எக்ஸ் தளத்தில் (X) வாழ்த்து!

தீமைக்கு எதிராக நன்மை வென்ற புனித நாளாகக் கொண்டாடப்படும் விஜயதசமியை முன்னிட்டு, பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இடுக்கியில் சோகம்.. ஹோட்டல் கழிவுத்தொட்டியை சுத்தம் செய்தபோது மூச்சுத்திணறி 3 தமிழக தொழிலாளர்கள் பலி!

கேரள மாநிலம் இடுக்கியில் ஒரு ஹோட்டலின் கழிவுத் தொட்டியைச் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்த தமிழ்நாட்டைச் சேர்ந்த மூன்று தொழிலாளர்கள் விஷவாயு தாக்கி மூச்சுத்திணறி உயிரிழந்தனர். மீட்புக் குழுவினர் புல்டோசர் மூலம் தொட்டியை இடித்து உடல்களை மீட்டனர்.

இந்தியாவின் மிகப் பணக்காரப் பெண்மணி... ஹுருன் தரவரிசையில் ரோஷ்னி நாடார் 3-வது இடம் பெற்று சாதனை!

HCL டெக்னாலஜிஸ் தலைவரான ரோஷ்னி நாடார் மல்ஹோத்ரா, ரூ.2.84 லட்சம் கோடி சொத்து மதிப்புடன் ஹுருன் இந்தியாவின் பணக்காரப் பெண்மணி பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளார். ஒட்டுமொத்தப் பட்டியலில் முதல் முறையாக டாப்-3-க்குள் ஒரு பெண் இடம் பெற்றிருப்பது இதுவே முதல் முறை ஆகும்.

கழிவுநீர்த் தொட்டிக்குள் இறங்கிய தொழிலாளர்கள்.. கேரளாவில் தமிழர்களுக்கு நிகழ்ந்த சோகம்!

கேரளாவில் உள்ள ஒரு உணவகத்தில் கழிவுநீர்த் தொட்டியைச் சுத்தம் செய்வதற்காக இறங்கிய தமிழகத்தைச் சேர்ந்த மூன்று தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.

இந்தியாவில் முதல்முறை: கேரள நீதிமன்றங்களில் AI தொழில்நுட்பம் அறிமுகம்!

இந்தியாவில் முதல் முறையாக, கேரள நீதிமன்றங்களில் செயற்கை நுண்ணறிவு (AI) அடிப்படையிலான பேச்சு-எழுத்து (Speech-to-text) கருவியைப் பயன்படுத்த உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

'Saven Thursday Harendra': தலைமையாசிரியர் கையெழுத்திட்ட காசோலையில் எழுத்துப் பிழை.. சமூக வலைதளங்களில் கேலி!

இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள ஒரு அரசுப் பள்ளித் தலைமையாசிரியர் கையெழுத்திட்ட காசோலையில் அதிகப்படியான எழுத்துப் பிழைகள் இருந்ததால் அது சமூக ஊடகங்களில் கேலிப்பொருளாகி வைரலாகி வருகிறது.

பிரேக் அப் செய்த காதலி.. விரக்தியில் இன்ஸ்டாகிராமில் 'போஸ்ட்' போட்ட இளைஞர் அடித்து கொலை!

தனது காதலியை வேறு யாரும் திருமணம் செய்யக்கூடாது என்று இன்ஸ்டாகிராமில் பதிவு வெளியிட்ட இளைஞர் கொடூரமாக கொலைசெய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

'கரூரில் நடந்த துரதிஷ்டவசமான சம்பவம்.. மிகுந்த வருத்தமளிக்கிறது'- பிரதமர் மோடி இரங்கல்!

கரூரில் விஜய் பிரசார கூட்டத்தில் சிக்கி பலர் உயிரிழந்த நிலையில், பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

உள்நாட்டுத் தொழில்நுட்பத்தில் பிஎஸ்என்எல் 4ஜி: பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்!

பிஎஸ்என்எல் (BSNL)-ன் 4ஜி நெட்வொர்க் சேவையை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைத்தார்.

மணிப்பூர், ஹரியானாவில் அடுத்தடுத்து நிலநடுக்கம்: அதிகாலை அதிர்வால் மக்கள் பீதி!

மணிப்பூரில் நேற்று மாலை 3.2 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதைத் தொடர்ந்து, இன்று அதிகாலையில் ஹரியானா உள்ளிட்ட பகுதிகளிலும் நில அதிர்வுகள் உணரப்பட்டதால், அப்பகுதி மக்கள் கடும் பீதியில் உள்ளனர்.

பூட்டான் இறக்குமதி கார் பறிமுதல்: கேரள உயர்நீதிமன்றத்தில் நடிகர் துல்கர் சல்மான் மனு!

பூட்டானில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட தனது காரைச் சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்ததற்கு எதிராக, நடிகர் துல்கர் சல்மான் கேரள உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

29 ஸ்பூன்கள், 19 டூத் பிரஷ்களை விழுங்கிய இளைஞர்.. அறுவை சிகிச்சை மூலம் அகற்றம்!

உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவரின் வயிற்றில் இருந்து ஸ்பூன்கள் மற்றும் டூத் பிரஷ்களை மருத்துவர்கள் அறுவை சிகிச்சை மூலம் அகற்றியுள்ளனர்.

கல்வி அதிகாரியை பெல்ட்டால் தாக்கிய தலைமை ஆசிரியர்- உத்தரபிரதேசத்தில் பரபரப்பு

பள்ளி தலைமை ஆசிரியர், கல்வி அதிகாரியை பெல்ட்டால் தாக்கிய வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

லடாக்கிற்கு தனி மாநில அந்தஸ்து: போராட்டத்தில் வன்முறை; பாஜக அலுவலகத்துக்குத் தீ!

லடாக்கிற்குத் தனி மாநில அந்தஸ்து வழங்கக் கோரி அங்குள்ள மக்கள் நடத்தி வரும் முழு அடைப்புப் போராட்டத்தில், பாஜக அலுவலகத்திற்குத் தீ வைத்து வன்முறையில் ஈடுபட்டனர்.

சிரிக்கும் எமோஜியால் ஏற்பட்ட மோதல்.. ராஜஸ்தானில் இளைஞர் படுகொலை!

ஃபேஸ்புக் பதிவால் ஏற்பட்ட மோதலில் 20 வயது இளைஞர் ஒருவர் குத்தி படுகொலை செய்யப்பட்டார்.