K U M U D A M   N E W S

இந்தியா

பாலியல் குற்றத்திற்கு இதுதான் தண்டனை..! ராஜஸ்தான் ஆளுநர் கருத்தால் பரபரப்பு

பாலியல் வன்கொடுமைகளில் ஈடுபடும் குற்றவாளிகளுக்கு ஆண்மை நீக்கம் செய்யப்பட வேண்டும் என்று ராஜஸ்தான் மாநில ஆளுநர் ஹரிபாவ் பாகடே கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பெண் குழந்தை பெற்றால் ரூ.50,000- ஆண் குழந்தைக்கு பசு மாடு: எம்.பி அதிரடி அறிவிப்பு

தனது தொகுதியில் 3-வது குழந்தையாக பெண் குழந்தை பெற்றால் ரூ.50,000, ஆண் குழந்தை பெற்றால் பசு மாடு வழங்கப்படும் என ஆந்திர எம்.பி அளித்த வாக்குறுதி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

குடியரசு துணைத் தலைவரை நேரில் சந்தித்த பிரதமர்.. விஷயம் இதுதான்!

நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கரை, பிரதமர் நரேந்திர மோடி நேரில் சந்தித்தார்.

மகிளா சம்ரிதி யோஜனா: பெண்களுக்கு மாதம் ரூ.2500- வெளியானது சூப்பர் அப்டேட்!

டெல்லியில் ஆட்சிக்கு வந்துள்ள பாஜகவின் தேர்தல் வாக்குறுதியில் முக்கியமானதாக கருதப்பட்டது மகளிருக்கு ரூ.2500 உதவித்தொகை வழங்கும் “மகிளா சம்ரிதி யோஜனா” திட்டமாகும். இத்திட்டம் எப்போது தொடங்கும் என எதிர்க்கட்சியான ஆம் ஆத்மி கேள்வி எழுப்பியிருந்த நிலையில் மகளிர் தினத்தை முன்னிட்டு இன்று திட்டத்திற்கான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு முக்கிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

கன்பார்ம் டிக்கெட் இருந்தால் தான் இனி ரயில் நிலையத்திற்குள் அனுமதி: ரயில்வே துறை அதிரடி!

பல ரயில் நிலையங்களில், நுழைவு பாதையினை தவிர்த்து சில குறுக்கு வழிகளிலும் ரயில் நிலையத்திற்குள் பயணிகள் வருகைத் தருகின்றனர். இதனை முறையாக கண்டறிந்து அனைத்து குறுக்குப்பாதைகளும் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தோண்டு.. தோண்டு.. ’சாவா’ பட எஃபெக்டால் தங்கத்தை தேடி நடுராத்திரி குவிந்த ஊர் மக்கள்

’சாவா’ திரைப்படத்தை பார்த்து அசிர்கார் கோட்டையில் இரவு 7 மணி முதல் நள்ளிரவு 3 மணி வரை தலையில் ஹெட்லைட், சல்லடையுடன் குடும்பம் குடும்பமாக மக்கள் தங்க புதயலை தேடி உள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

சர்வதேச மகளிர் தினம் 2025: பாலின சமத்துவ உலகத்தை உருவாக்க ஒன்றாக செயல்படுவோம்.. தலைவர்கள் வாழ்த்து

'சர்வதேச மகளிர் தினத்தை’ ஒட்டி பெண்களுக்கு பல கட்சி தலைவர்களும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.

Karnataka budget 2025: சினிமா டிக்கெட் விலை அதிரடி குறைப்பு.. பட்ஜெட்டின் ஹைலைட்ஸ் என்ன?

கர்நாடக மாநிலத்திற்கான 2025-26 நிதியாண்டிற்கான பட்ஜெட்டினை தாக்கல் செய்தார் அம்மாநில முதல்வர் சித்தராமையா. நிதியமைச்சராக 16 வது முறையாக கர்நாடக மாநில பட்ஜெட்டினை தாக்கல் செய்து சாதனை புரிந்துள்ளார் சித்தராமையா.

சம்பளத்துடன் கூடிய ஒரு நாள் மாதவிடாய் விடுப்பு: சர்ப்ரைஸ் கொடுத்த L&T சேர்மன்

விடுமுறை அறிவிப்பானது L&T-யின் முதன்மை நிறுவனத்தில் உள்ள ஊழியர்களுக்கு மட்டுமே பொருந்தும். L&T- கீழ் இயங்கும் சேவைகள் அல்லது தொழில்நுட்பம் சார்ந்த துணை நிறுவனங்களுக்கு நீட்டிக்கப்படாது

தாலி..குங்குமம் இல்ல? அப்புறம் எப்படி கணவர் அன்பா இருப்பாரு? நீதிபதியின் சர்ச்சை கருத்து

நீதிபதிகளின் தவறான கருத்துக்கள் குறித்து புகார்களை எழுப்ப எந்த வழியும் இல்லாதது ஏமாற்றமளிக்கிறது என்று வழக்கறிஞர் கூறினார்.

ஆப்சண்ட் ஆனதுக்கு 200 ரூபாயா..! ராகுலுக்கு செக் வைத்த நீதிமன்றம்

சாவர்க்கர் குறித்து மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி அவதூறு கருத்து தெரிவித்ததாக தொடரப்பட்ட வழக்கில் ராகுல் காந்திக்கு 200 ரூபாய் அபராதம் விதித்து லக்னோ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பார்படாஸ் நாட்டின் உயரிய விருதை பெற்ற மோடி.. எதற்காக தெரியுமா?

கொரோனா தொற்று காலத்தில் பிரதமர் மோடியின் வியூக தலைமைத்துவம் மற்றும் மதிப்புமிக்க உதவியை அங்கீகரிக்கும் வகையில் அவருக்கு பார்படாஸ் நாட்டின் உயரிய விருது வழங்கப்பட்டுள்ளது.

குருவியாக மாறிய 'வாகா' நடிகை உடல் முழுக்க கடத்தல் தங்கம் சிக்கிய 14.8 கிலோ தங்கம்..?

பிரபல கன்னட நடிகை ரன்யா ராவ், துபாயில் இருந்து தங்கம் கடத்தி வந்ததாக பெங்களூரு விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் இருந்து 14.8 கிலோ தங்கக் கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அயோத்தி ராமர் கோயிலை குண்டு வீசி தகர்க்க திட்டம்.. வசமாக சிக்கிய இளைஞர்

அயோத்தி ராமர் கோயிலை குண்டு வீசி தகர்க்க பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ திட்டமிட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

புனேவில் மீண்டும் நடந்த கொடூர நிகழ்வு.. இதற்கு என்னதான் தீர்வு.. புலம்பும் மக்கள்

புனேவில் இளம்பெண் ஒருவரை மர்ம நபர்கள் கத்தி முனையில் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நடிகை ராஷ்மிகாவுக்கு பாடம் கற்பிக்க வேண்டாமா? காங்கிரஸ் எம்.எல்.ஏ ஆவேசம்

கன்னடத்தை புறக்கணித்த நடிகை ராஷ்மிகாவுக்கு பாடம் கற்பிக்க வேண்டாமா? என்று கார்நாடக மாநில காங்கிரஸ் எம்.எல்.ஏ ரவிக்குமார் ஆவேசமாக கேள்வி எழுப்பியுள்ளார்.

ரமலான் நோன்பு தொடக்கம்.. நன்றியுணர்வு-பக்தியை பிரதிபலிக்கிறது.. மோடி வாழ்த்து

நாடு முழுவதும் ரமலான் நோன்பு தொடங்கப்பட்ட நிலையில் இந்த புனித மாதம் நன்றியுணர்வு மற்றும் பக்தியை பிரதிபலிப்பதாக பிரதமர் நரேந்திர மோடி பதிவு வெளியிட்டுள்ளார்.

வாட்ஸ் அப் ஆடியோவில் கணவன் சொன்ன அந்த மூன்று வார்த்தை.. போலீஸை நாடிய மனைவி

கேரள மாநிலம் காசர் கோட்டில் வாட்ஸ் அப் ஆடியோ மூலம் முத்தலாக் கூறிய கணவர் மீது மனைவி காவல் நிலையத்தில் புகாரளித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சென்னை விமான நிலையத்தில் மலிவு விலை கஃபே.. விலையை கேட்டால் அசந்து போவீங்க!

சென்னை விமான நிலையத்தில் உணவு பொருட்கள் மலிவு விலையில் கிடைக்கும் வகையில் ‘உடான் யாத்ரீ கஃபே’ திறக்கப்பட்டுள்ளதால் பயணிகள் உற்சாகத்தில் உள்ளனர். 

'வெட்கமாக இல்லையா..' காங்கிரஸை சாடிய பிரீத்தி ஜிந்தா

நடிகை பிரீத்தி ஜிந்தா தனது சமூக வலைதள கணக்கை பாஜகவிற்கு கொடுத்து, தான் அளிக்க வேண்டிய 18 கோடி ரூபாய் கடனை தள்ளுபடி செய்ய வைத்ததாக கேரள காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

அசாமில் 9,000 பெண்கள் பிஹூ நடனம்... பிரதமருக்கு உற்சாக வரவேற்பு

அசாமில் தேயிலைத் தோட்டத் தொழில் தொடங்கி 200 ஆண்டுகள் நிறைவு விழாவில் கலந்து கொண்ட பிரதமர் மோடிக்கு 9 ஆயிரம் பெண்கள் நடனமாடி உற்சாக வரவேற்பு அளித்தனர். மேலும், அசாம் 2.0-வை பிரதமர் நரேந்திர மோடி இன்று தொடங்கி வைக்கிறார்.

மகா கும்பமேளா 2025.. திரிவேணி சங்கமத்தில் புனித நீராடிய நடிகை கத்ரீனா 

உத்திரப்பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் நடைபெற்று வரும் மகா கும்பமேளா நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகை கத்ரீனா கைஃப், திரிவேணி சங்கமத்தில் புனித நீராடினார்.

விவசாயிகளுக்கு குட் நியூஸ்.. பிஎம். கிஸான் திட்டத்தில் 2000 ரூபாய் உதவித் தொகை..!

பிரதமர் மோடி  19 ஆவது முறையாக 10 கோடி விவசாயிகளுக்கு 2000 ரூபாய் உதவித் தொகையை வழங்குகிறார். 2019ல் தொடங்கிய கிசான் சம்மான் நிதி திட்டத்தில் இதுவரை 3.46 லட்சம் கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.

இளம்பெண்ணுடன் சிக்கிய GHMC ஆபிஸர்... வெளுத்து வாங்கிய மனைவி! பாத்ரூமில் நடந்த பகீர் சம்பவம்?

இளம்பெண்ணுடன் கையும் களவுமாக மாட்டிய ஐதராபாத் மாநகராட்சி இணை ஆணையரை, அவரது மனைவியின் குடும்பத்தினர் வெளுத்து வாங்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

யூடியூபுக்கு புதிய Rules? influencers மீது பாயப்போகும் நடவடிக்கை? ’இனி இதையெல்லாம் பண்ணகூடாது!

யூடியூபில் influencers எனக் கூறிக்கொண்டு பல சர்ச்சைகளில் சிக்கிவரும் யூ டியூபர்கள் குறித்து உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. உச்சநீதிமன்றம் கூறிய கருத்து என்ன? யூடியூப் கிரியேட்டர்களுக்கு புதிய விதிமுறைகள் வரப்போகிறதா? பார்க்கலாம் இந்த தொகுப்பில்...