K U M U D A M   N E W S

இந்தியா

ஹனிமூன் ஜோடி காணாமல் போன வழக்கில் அடுத்தடுத்து திருப்பம்.. மனைவி எங்கே?

இந்தூரைச் சேர்ந்த புதுமணத் தம்பதியினர், மேகாலயாவிற்கு தேனிலவிற்காக சென்றிருந்த நிலையில் மர்மமான முறையில் கணவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். அவரது மனைவி குறித்த தகவல் தற்போது வரை கிடைக்காத நிலையில் இருவீட்டார் குடும்பத்தினர் சிபிஐ விசாரணைக் கோரியுள்ளனர்.

ஈஃபிள் கோபுரத்தை மிஞ்சிய செனாப் பாலம்.. முழு தகவல்

உலகின் மிக உயரமான செனாப் ரயில் பாலத்தை பிரதமர் மோடி இன்று திறந்து வைத்தார். ஈஃபிள் கோபுரத்தை விட உயரமான இந்த பாலம், ரூ.43,780 கோடி செலவில் கட்டப்பட்டுள்ளது.

நாளுக்கு நாள் அதிகரிக்கும் கொரோனா தொற்று.. சுகாதாரத்துறை எச்சரிக்கை!

இந்தியாவில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் உயர்ந்து வரும் நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 498 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. தொடர்ந்து, இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,866-லிருந்து 5,364-ஆக உயர்ந்துள்ளது.

தாயின் ஒப்புதலுடன் 13 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை.. சிக்கிய பாஜக பிரமுகர்

ஹரித்வாரில் பாஜகவினை சேர்ந்த பெண், அவரது சொந்த மகளை தனது ஆண் நண்பருக்கு இரையாக்கியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 13 வயது சிறுமி அளித்த புகாரின் பேரில் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

எம்.பி. மஹூவா மொய்த்ரா ரகசிய திருமணம்.. கணவர் யார் தெரியுமா?

நாடாளுமன்றத்தில் திரிணாமூல் காங்கிரஸ் முகமாக விளங்கும் எம்.பி. மஹூவா மொய்த்ரா ஜெர்மனியில் ரகசியமாக பினாக்கி மிஸ்ராவினை திருமணம் செய்து கொண்டுள்ளார். இதுத்தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

RCB வெற்றிக் கொண்டாட்டத்தில் 11 பேர் உயிரிழப்பு.. பிரதமர் மோடி இரங்கல்!

பெங்களூரு அணியின் வெற்றிக் கொண்டாட்டத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். இதனிடையே உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு மாநில அரசு நிவாரணம் அறிவித்துள்ளது.

RCB வெற்றி விழா: 35 ஆயிரம் சீட்டுக்கு 3 லட்சம் பேர்.. கூட்ட நெரிசல் குறித்து முதல்வர் சித்தராமையா விளக்கம்

பெங்களூரு சின்னசாமி மைதானத்திற்கு வெளியே கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என்று கர்நாடக அரசு அறிவித்துள்ளது.

59 கிலோ தங்கம் திருட்டு.. கொள்ளையர்கள் விட்டுச் சென்ற மாந்திரீக பொம்மையால் பரபரப்பு

கர்நாடகா மாநிலத்தில், மக்கள் மத்தியில் நன்மதிப்பை பெற்ற கனரா வங்கியில் 59 கிலோ தங்கம் மற்றும் ரூ.5.20 லட்சம் கொள்ளையடிக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

எண்ட மோனே ஹேப்பியோ? அங்கன்வாடியில் இனி முட்டை பிரியாணி!

3 வயது சிறுவன் வைத்த கோரிக்கையினை ஏற்று கேரளாவிலுள்ள அங்கன்வாடிகளில் இனி முட்டை பிரியாணி வழங்கப்படும் அம்மாநில சுகாதார, பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ள வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

சமையல் எண்ணெய் மீதான இறக்குமதி வரி குறைப்பு- கொந்தளிக்கும் விவசாயிகள்

கச்சா சமையல் எண்ணெய் மீதான இறக்குமதி வரியை 11 சதவீதம் மத்திய அரசு குறைத்துள்ளது எண்ணெய் வித்துக்களை உற்பத்தி செய்யும் இந்திய விவசாயிகளுக்கு பாதிப்புகளை ஏற்படுத்தும் என தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தாய், தந்தைக்குப் பதிலாக ‘பெற்றோர்’ - திருநங்கை தம்பதி தொடர்ந்த வழக்கில் கேரள உயர்நீதிமன்றம் உத்தரவு

திருநங்கை தம்பதியரின் குழந்தையின் பிறப்புச் சான்றிதழ் தொடர்பான வழக்கில் தாய், தந்தைக்குப் பதிலாக ‘பெற்றோர்’ சொன்னால் போதுமானது என கேரள உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சர்கள் குழு கூட்டம்

டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் நாளை(ஜூன்4) மத்திய அமைச்சர்கள் குழு கூட்டம் நடைபெற உள்ளது.

வணிக சிலிண்டர் விலை ரூ.25 குறைவு

சிலிண்டர்களின் விலையை மாதத்தின் முதல் தேதியில் எண்ணெய் நிறுவனங்கள் மாற்றி அமைத்து வருகிறது.

Surf Excel: கறை நல்லது.. ஒரே ஆண்டில் 10 ஆயிரம் கோடி டர்ன் ஓவர்!

கறை நல்லது என தொலைக்காட்சிகளில் வரும் துணி சலவை பவுடர் சர்ப் எக்செல் விளம்பரமானது பலரின் விருப்பத்திற்குரிய விளம்பரங்களில் ஒன்றாகும். விளம்பரத்தில் மட்டுமல்ல, நிஜத்திலும் பலரின் விருப்பத் தேர்வாக Surf Excel இருந்துள்ளது என்பது ஹிந்துஸ்தான் யூனிலீவர் லிமிடெட் நிறுவனம் வெளியிட்ட நிதி அறிக்கையின் வாயிலாக தற்போது தெரிய வந்துள்ளது.

குஜராத்தில் இருந்து மீட்பு குழுவினர் வருகை... கண்டெயினரை மீட்கும் பணி தீவிரம்!

வானியக்குடி கடலில் மிதக்கும் கண்டெயினரை மீட்கும் பணிகள் தீவிரமடைந்துள்ள நிலையில், குஜராத்தில் இருந்து மீட்பு குழுவினர் வருகை புரிந்துள்ளனர்.

2 லட்சத்திற்கு குறைவாக இருந்தால்.. தங்க நகைகடன் குறித்து சூப்பர் அறிவிப்பு!

பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட கருத்துகள் அடிப்படையில், நகைக் கடன்களுக்கான கட்டுப்பாடுகளை தளர்த்த கோரி ரிசர்வ் வங்கிக்கு மத்திய அரசு பரிந்துரை செய்துள்ளது.

பூஞ்ச் மக்கள் மறுவாழ்வு.. பிரதமர் மோடிக்கு ராகுல் காந்தி கடிதம்!

"பாகிஸ்தான் தாக்குதலால் பாதிக்கப்பட்ட பூஞ்ச், ஜம்மு காஷ்மீருக்கு மறுவாழ்வு தொகுப்பு வழங்க வேண்டும் பிரதமர் மோடிக்கு மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கடிதம் எழுதியுள்ளார்.

ஐடி நிறுவனத்தில் வேலை பார்க்கும் நாய்.. CHO பதவி வகிக்கும் ரெட்ரீவர்!

ஐதராபாத்தை தலைமையகமாகக் கொண்ட ஒரு ஸ்டார்ட்அப் நிறுவனம், டென்வர் என்ற கோல்டன் ரெட்ரீவரை அதன் தலைமை மகிழ்ச்சி அதிகாரியாக (CHO) நியமித்ததற்காக வைரலாகி வருகிறது.

விவசாயிகளுக்கு குட் நியூஸ்.. 14 பயிர்களுக்கான MSP விலை உயர்வு

மத்திய அரசு, 2025-26 சந்தைப் பருவத்திற்கான 14 காரிஃப் பயிர்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையை (MSP) அதிகரித்துள்ளது. முந்தைய ஆண்டு விலைகளுடன் ஒப்பிடும்போது இந்த MSP உயர்வு, விவசாயிகளுக்கு லாபகரமான விலை கிடைப்பதை உறுதி செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது என அரசின் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மணிப்பூரில் அமைகிறதா புதிய அரசு? தயார் நிலையில் 44 எம்.எல்.ஏ.க்கள்

மணிப்பூரில் புதிய அரசாங்கத்தை அமைப்பதற்கு 44 சட்டப்பேரவை உறுப்பினர்கள் தயாராக இருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. தற்போது மணிப்பூர் மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமலில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

“எப்போதும் மன்னிப்பு கேட்க மாட்டேன்"- கமல்ஹாசன்

அன்பு எப்போதும் மன்னிப்பு கேட்காது என கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

கோயிலுக்குள் 5 வயது சிறுமியிடம் பாலியல் வன்புணர்வில் ஈடுபட்ட நபர் கைது!

உத்தரபிரதேச மாநிலம் ஆக்ராவில், வீட்டிற்கு வெளியே விளையாடிக் கொண்டிருந்த 5 வயது சிறுமியை, பக்கத்து வீட்டுக்காரர் ஒருவர் கோயிலுக்குள் அழைத்துச் சென்று பாலியல் வன்புணர்வு செய்துள்ள சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

நடுரோட்டில் பெண்ணுடன் உடலுறவு- தலைமறைவாக இருந்த பாஜக பிரமுகர் கைது!

நடுரோட்டில் ஒரு பெண்ணுடன் நபர் ஒருவர் உடலுறவு மேற்கொள்ளும் காட்சிகள் சமூகவலைத்தளங்களில் வைரலாகிய நிலையில், தலைமறைவாக இருந்த மனோகர்லால் தாக்கட் போலீசாரால் கடந்த ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார்.

பொறுமையா வருமான வரி தாக்கல் பண்ணுங்க.. கால அவகாசம் நீட்டிப்பு!

வருமான வரி தாக்கல் செய்ய வரும் ஜூலை 15 ஆம் தேதி கடைசி நாளாக இருந்த நிலையில், கூடுதலாக 45 நாட்கள் அவகாசம் அளித்து செப்டம்பர் 15 ஆம் தேதி வரை மத்திய நிதியமைச்சகம் நீட்டித்து உத்தரவிட்டுள்ளது.

14 நாள் தனிமைப்படுத்தப்பட்ட இந்திய விண்வெளி வீரர்.. நாசா கொடுத்த முக்கிய அப்டேட்..!

சர்வதேச விண்வெளி நிலையம் செல்லும் முதல் இந்திய வீரர் ஷுபான்ஷு சுக்லா, 14 நாள் தனிமைக்கு அனுப்பப்பட்டுள்ளார். விண்வெளி செல்லும் 3 வீரர்களையும், நாசா குழுவினர் உடல்நிலையை தகுதிப்படுத்தும் குவாரண்டைனுக்கு அனுப்பிவைத்து வாழ்த்து தெரிவித்தனர்.