பீகாரில் ஆகஸ்ட் முதல் 125 யூனிட் இலவசம்- நிதிஷ்குமார் அதிரடி அறிவிப்பு
பீகார் மாநிலத்தில் 125 யூனிட் வரை மின்சாரம் இலவசமாக வழங்கப்படும் என அம்மாநில முதலமைச்சர் நிதிஷ்குமார் அறிவித்துள்ளார்.
பீகார் மாநிலத்தில் 125 யூனிட் வரை மின்சாரம் இலவசமாக வழங்கப்படும் என அம்மாநில முதலமைச்சர் நிதிஷ்குமார் அறிவித்துள்ளார்.
சத்தீஸ்கர் மாநிலத்தில் கடந்த ஒன்றரை ஆண்டுகளில் பதிவான 1,301 இணைய மோசடி வழக்குகளில் ரூ.107 கோடி பாதிக்கப்பட்டவர்கள் இழந்துள்ளதாக அம்மாநில துணை முதலமைச்சர் விஜய் சர்மா தெரிவித்துள்ளார்.
5 வயதுக்குள் ஆதார் பெற்ற குழந்தைகள், கைரேகை மற்றும் கருவிழிப் பதிவை புதுப்பிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. பயோமெட்ரிக் விபரங்களை புதுப்பிக்கவில்லை எனில் ஆதார் செயலிழக்கப்படும் என ஆதார் ஆணையம் தெரிவித்துள்ளது.
ஜார்கண்டில் உள்ள ஒரு காளி கோயில் நகைகளை திருடிய இளைஞன், அங்கே அசந்து தூங்கியுள்ளார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகிறது.
மகாராஷ்டிராவில் ஓடும் பேருந்தில் பிறந்த பச்சிளம் குழந்தையை, ஜன்னல் வழியே வீசிக் கொன்ற தம்பதியை போலீசார் கைது செய்துள்ளனர்.
உத்தரப்பிரதேசத்தில் போதைப் பழக்கத்திற்கு அடிமையான மகனை தந்தை துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஒடிசாவில் பேராசிரியர் பாலியல் தொல்லையால் மாணவி தீக்குளித்த விவகாரத்தில் நடவடிக்கை எடுக்காதது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உலகின் மிக வயதான மாரத்தான் வீரர் பவுஜா சிங் சாலை விபத்தில் உயிரிழந்தார்.
மும்பை விமான நிலையத்தில் ஓடுபாதையில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த விமானம் மீது சரக்கு லாரி மோதிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
புதுச்சேரி மாடல் அழகி தற்கொலை செய்தது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மத்தியப் பிரதேசத்தின் இந்தூரில் தனது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாகக் கூறி ஒரு இளைஞர் ஹெல்மெட்டில் கேமராவுடன் வலம் வருகிறார்.
தெலுங்கானாவில் இன்சூரென்ஸ் பணத்திற்காகக் மாமியாரை கார் ஏற்றி கொலை செய்த மருமகனை போலீசார் கைது செய்துள்ளனர்.
பீகார் மாநிலத்தில் நடைப்பெற்று வரும் சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தத்தில், நேபாளம், வங்கதேசம், மியான்மர் நாட்டை சேர்ந்தவர்கள் தங்கள் பெயரில் ஆதார், இருப்பிடச் சான்றிதழ்கள் மற்றும் ரேஷன் கார்டுகள் போன்றவற்றை பெற்றதுடன் வாக்காளர்களாக இருப்பதும் கண்டறியப்பட்டுள்ளது.
கர்நாடகாவில் செல்ஃபி எடுத்தபோது மனைவி தனது கணவரை ஆற்றில் தள்ளிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கொல்கத்தாவில் ஐஐஎம் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
மத்திய பிரதேசத்தில் உள்ள கிராமத்தில் நடந்த பஞ்சாயத்து கூட்டத்தில் நொறுக்கு தீனிக்காக ரூ.85 ஆயிரம் செலவிடப்பட்டதாக வெளியான கணக்கு பட்டியல் இணையத்தில் வைரலாகிறது.
உலகம் முழுவதும் பேசுப்பொருளாகிய ஏர் இந்தியா விமான விபத்து தொடர்பாக 15 பக்கம் கொண்ட முதல் விசாரணை அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
கேரளாவில் வளர்ப்பு பூனை கீறியதால் காயமடைந்த 11 வயது சிறுமி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
மலையாள படம் ஏற்படுத்திய தாக்கத்தின் அடிப்படையில், மாணாக்கர்கள் அமரும் இருக்கைகளின் வரிசை அமைப்பினை மாற்றி கல்வியாளர்கள் மத்தியில் பாராட்டினை பெற்றுள்ளது கேரளாவிலுள்ள சில பள்ளிகள்.
பெங்களூருவில் தெரு நாய்களுக்கு தினம்தோறும் உணவளிக்கும் வகையில் புதிய திட்டத்தை மாநகராட்சி அமல்படுத்தியுள்ளது.
ராட்வீலர், பிட்புல்ஸ் உள்ளிட்ட நாய் இனங்களை வளர்ப்பதற்கு தடை விதிக்கும் மசோதாவிற்கு கோவா அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.
25 வயதான இந்தியாவின் இளம் டென்னிஸ் வீராங்கனையான ராதிகா யாதவினை, அவரது தந்தை சுட்டுக்கொன்றுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுத்தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மகாராஷ்டிராவில் உள்ள தனியார் பள்ளியில், மாணவிகளின் ஆடைகளை களைந்து மாதவிடாய் சோதனையினை பள்ளி நிர்வாகம் மேற்கொண்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில் பள்ளியின் முதல்வர், ஆசிரியர்கள் உட்பட 8 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
சட்டவிரோத சூதாட்ட செயலி விளம்பரத்தில் நடித்த பிரகாஷ் ராஜ், விஜய் தேவரகொண்டா, ராணா டகுபதி உள்ளிட்ட 29 நடிகர்கள் மீது அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது.
நாடு முழுவதும் அனைத்து லெவல் கிராசிங்கிலும் சிசிடிவி அமைக்க வேண்டும் இன்டர்லாக் செய்யப்படாத லெவல் கிராசிங்கில், தினசரி இருமுறை சோதனைகள் மேற்கொள்ள வேண்டும் உள்ளிட்ட 11 முக்கிய நடவடிக்கைகளை மேற்கொள்ள ரயில்வே அமைச்சர் அறிவுறுத்தியுள்ளார்.