ராஜஸ்தான் மாநிலம் சுரு மாவட்டத்தில் உள்ள கிராமம் ஒன்றில், சாமி ஊர்வலத்தின் போது கோயிலுக்குள் நுழைய முயன்ற பட்டியலின இளைஞர்கள் சிலர் தாக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சதாசர் கிராமத்தில் கடந்த 21 ஆம் தேதி நடந்த இந்தச் சம்பவத்தைக் கண்டித்து, நேற்று உள்ளூர் காவல் நிலையம் முன்பு ஏராளமானோர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
காவல்துறையிடம் புகார்
கனாராம் மேக்வால் என்பவர் அளித்த புகாரின்படி, சாமி ஊர்வலத்தில், மேக்வால் மற்றும் அவருடன் சில பட்டியலின இளைஞர்களும் கோயிலுக்குள் வழிபாட்டிற்காகச் செல்ல முயன்றுள்ளனர். அப்போது, சூர்தாஸ் சுவாமி, சங்கர்லால், ஹிம்மத் குமார் மற்றும் அனில் உள்ளிட்ட சிலர் அவர்களைத் தடுத்து நிறுத்தியதாகப் புகாரில் குறிப்பிடப்பட்டுள்ளது.
"தாங்கள் பட்டியலினத்தை சேர்ந்தவர்கள் என்பதால் கோயிலுக்குள் நுழைய அனுமதிக்க மறுத்ததோடு, அனைவரும் கடுமையான தாக்குதலுக்கு உள்ளானோம்" என்று புகாரில் மேக்வால் குற்றம் சாட்டியுள்ளார்.
இதுகுறித்து துணை காவல் கண்காணிப்பாளர் சத்யநாராயண் கோதாரா கூறியதாவது, "கோயில் நுழைவாயிலில் கூட்டம் அதிகமாக இருந்ததால், மேக்வால் மற்றும் அவரது நண்பர்கள் காத்திருக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டதாகவும், அப்போது இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாகவும்" தெரிவித்தார்.
மேலும், பட்டியலின இளைஞர்களை தாக்கிவிட்டு தலைமறைவாக உள்ள நான்கு பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு, அவர்களைத் தேடி வருவதாகவும் அவர் கூறினார். இச்சம்பவத்துக்கு பல்வேறு தரப்பினர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.