K U M U D A M   N E W S
Promotional Banner

Breaking news

sanitary workers protest: தூய்மைப் பணியாளர்களை அப்புறப்படுத்த உயர்நீதிமன்றம் உத்தரவு!

ரிப்பன் மாளிகை முன்பு தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் தூய்மை பணியாளர்களை அப்புறப்படுத்தி, நடவடிக்கை எடுக்க மாநகர காவல்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அன்புமணி தலைமையிலான பொதுக்குழுவிற்கு தடையில்லை- சென்னை உயர்நீதிமன்றம்

பொதுக்குழுவுக்கு தடை விதிக்க கோரிய மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி தீர்ப்பளித்தார். மேலும் பாமக உட்கட்சி விவகாரம் தொடர்பாக உரிமையியல் நீதிமன்றத்தை அணுகலாம் என தீர்ப்பில் நீதிபதி குறிப்பிட்டுள்ளார்.

ஆக. 21-ல் மதுரையில் தவெக மாநாடு நடைபெறும் - விஜய் அதிகாரபூர்வ அறிவிப்பு

காவல் துறையின் அறிவுறுத்தலை ஏற்று மாநாடு ஆக.21ல் நடத்தப்படும் என விஜய் அறிவிப்பு

Vice President Election: குடியரசுத் துணைத் தலைவர் பதவிக்கான தேர்தல் தேதி அறிவிப்பு!

கடந்த ஜூலை 21 ஆம் தேதி குடியரசுத் துணைத் தலைவராக பதவி வகித்து வந்த ஜெகதீப் தன்கர் திடீரென்று தனது ராஜினாமா முடிவினை அறிவித்தார். இந்நிலையில், குடியரசுத் துணைத் தலைவருக்கான தேர்தல் தேதியினை இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.

கொட்டித் தீர்க்கும் கனமழை.. மூணாறு- தேனி சாலையில் அடுத்தடுத்து நிலச்சரிவு!

கேரளாவில் பெய்துவரும் கனமழையால் இடுக்கியில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால், மூணாறு - தேனி சாலையில் கடுமையான போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. சாலையை சீர் செய்யும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

வாக்கிங் சென்றபோது தலைசுற்றல்.. மருத்துவமனையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அனுமதி!

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நடைப்பயிற்சி மேற்கொண்ட போது ஏற்பட்ட தலைசுற்றல் காரணமாக தனியார் மருத்துவமனையில் பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர்: தொடங்கியதும் முடங்கியது!

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் இன்று தொடங்கிய சில நிமிடங்களிலேயே மக்களவை மதியம் 12 மணி வரை ஒத்திவைக்கப்படுவதாக சபாநாயகர் அறிவித்துள்ளார்.

முன்னாள் முதல்வர் கருணாநிதியின் மூத்த மகன் மு.க.முத்து காலமானார்!

தமிழக முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் மூத்த மகன் மு.க.முத்து உடல்நலக்குறை காரணமாக சென்னையில் இன்று காலமானார்.

காமராஜர் விவகாரம்: சர்ச்சைக்குரிய விவாதங்கள் நடப்பது சரியல்ல -முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

கலகமூட்டிக் குளிர்காய நினைக்கும் தீயவர்களின் எண்ணத்துக்கு இடம் கொடுக்காதீர் என காமராஜர் விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விளக்கம் அளித்துள்ளார்.

பழம்பெரும் நடிகை சரோஜா தேவி காலமானார்.. சோகத்தில் திரையுலகம்

மூத்த பழம்பெரும் நடிகை சரோஜா தேவி (87) உடல்நலக்குறைவால் இன்று காலமானார்.

ஆளுநர் மாளிகைக்கு வெடிகுண்டு மிரட்டல்

கிண்டி போலீசார் வெடிகுண்டு தடுப்பு நிபுணர்கள், மோப்பநாய் பிரிவினர் உதவியுடன் ஆளுநர் மாளிகைக்கு உள்ளே சென்று சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

என்ன சொல்லப்போகிறார் விஜய்? தொடங்கியது தவெக செயற்குழு கூட்டம்!

செயற்குழு கூட்டத்தில் பங்கேற்க வந்த தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவர் விஜய், கட்சியின் கொள்கை தலைவர்களின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

சிவகாசியில் பட்டாசு ஆலை விபத்து.. 5 பேர் உயிரிழப்பு!

சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் நடந்த வெடி விபத்தில் ஒரு பெண் தொழிலாளி உட்பட 5 பேர் உயிரிழந்த நிலையில், 3 பேர் படுகாயமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

திருப்புவனத்தில் இளைஞர் உயிரிழந்த விவகாரம் – 5 காவலர்களுக்கு நீதிமன்ற காவல்

திருப்புவனத்தில் இளைஞர் அஜித்குமார் உயிரிழந்த சம்பவத்தில், ஐந்து காவலர்கள் மீது கொலை வழக்குப்பு பதிவு செய்யப்பட்ட நிலையில் கைது செய்யப்பட்டவர்களை 15 நாள் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

பேனர் விழுந்து முதியவர் காயம் – தவெகவினருக்கு விஜய் போட்ட அதிரடி உத்தரவு

சென்னை வில்லிவாக்கத்தில் தவெக பேனர் சரிந்து முதியவர் காயமடைந்தார்.இந்த வழக்கில் தவெகவினர் 3 பேர் கைது செய்யப்பட்டு ஜாமினில் விடுவிக்கப்பட்டுள்ளனர். மேலும் காயமடைந்த 70 வயது முதியவர் மோகனுக்கு மூளையில் ரத்தக்கசிவு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

ஜி7 உச்சி மாநாடு: கனடா சென்றடைந்தார் பிரதமர் மோடி

ஆல்பர்ட்டாவின், கனனாஸ்கிஸில் நடைபெறும் 51வது ஜி7 உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி கலந்து கொள்ள உள்ளார்.

மதிமுக அலுவலத்தில் தாக்குதல்.. மர்ம நபரை பிடித்து போலீசார் விசாரணை

தீயணைப்புத்துறை வீரர் என்று கூறி மதிமுக அலுவலகத்திற்குள் சென்று பொருட்களை சேதப்படுத்திய மர்ம நபரை பிடித்து எழும்பூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

லண்டனில் இருந்து புறப்பட்ட விமானத்தில் நடுவானில் கோளாறு...360 பயணிகளின் திக்.. திக்.. நிமிடங்கள்

லண்டனில் இருந்து சென்னைக்கு 360 பயணிகளுடன் வந்த விமானம் நடு வானில் பறந்து போது திடீரென ஏற்பட்ட இயந்திர கோளாறு காரணமாக, விமானம் லண்டனுக்கு அவசரமாக திரும்பிச் சென்று தரையிறங்கியது.

மீண்டும் ஒரு கோர விபத்து.. ஹெலிகாப்டரில் சென்ற 7 பேர் பலி

உத்தராகண்ட் மாநிலத்தின் குப்தகாசியில் இருந்து கேதார்நாத்துக்கு சென்ற ஹெலிகாப்டர் வனப்பகுதியில் விபத்துக்குள்ளான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கைது செய்யப்படுகிறாரா MLA ஜெகன்மூர்த்தி? கூலிப்படை வைத்து ஆட்கடத்தல்?

காதல் விவகாரத்தில் பெண் வீட்டாருக்கு ஆதரவாக கூலிப்படையை வைத்து இளைஞரை கடத்தியதாக கே.வி.குப்பம் சட்டமன்ற உறுப்பினர் ஜெகன்மூர்த்தியை கைது செய்ய போலீசார் வருகை தந்துள்ளனர்.

ஆண்பாவம் திரைப்பட புகழ் கொல்லங்குடி கருப்பாயி காலமானார்!

ஆண்பாவம் திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமாகி தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் நீங்கா இடம் பிடித்த கொல்லங்குடி கருப்பாயி தனது 99-வது வயதில் வயது மூப்பு காரணமாக உயிரிழந்துவிட்டார் என தகவல் வெளியாகியுள்ளது.

11 ஆம் வகுப்பு மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை: கைதான பள்ளி மாணவர்கள்

காஞ்சிபுரம் அருகே 11 ஆம் வகுப்பு மாணவியை 3 மாணவர்கள் உள்ளிட்ட 4 பேர் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

எடப்பாடி பழனிசாமி வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்

சென்னையில் சூறைக்காற்றுடன் பரவலாக மழை.!

அம்பத்தூர், ஆவடி, அயப்பாக்கம், திருமுல்லைவாயில் உள்ளிட்ட பகுதிகளில் பலத்த காற்றுடன் மிதமான மழை பெய்து வருகிறது

பாஜக MLA டாக்டர் சரஸ்வதியின் மகள் காய்ச்சல் காரணமாக உயிரிழப்பு!

மொடக்குறிச்சி தொகுதி சட்டமன்ற உறுப்பினர், டாக்டர் சி.சரஸ்வதியின் மகள் கருணாம்பிகை காய்ச்சல் காரணமாக உயிரிழந்துள்ளார்.