சென்னை நீலாங்கரையில் உள்ள விஜய் வீட்டில், பாதுகாப்பு அரண்களை தாண்டி, மதுராந்தகம் பகுதியை சேர்ந்த அருண் என்ற இளைஞர் நுழைந்த நிலையில் பிடிபட்டார். விஜய் வீட்டின் பின்பக்க கதவு வழியாக உள்ளே நுழைந்த இளைஞர் பின்னர் வீட்டினுள் நுழைந்துள்ளார்.
விஜய் வீட்டில் நுழைந்த இளைஞர்
வீட்டில் மொட்டை மாடியில் நீண்ட நேரம் இருந்ததாக கூறப்படுகிறது. அப்போது அவரை கண்ட காவலாளிகள் அவரை பிடித்து கொண்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனிடையே விஜய்யை கண்ட இளைஞர் அவரை கட்டிப்பிடித்ததாகவும், இதனால் விஜய் அதிர்ச்சி அடைந்ததாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
மேலும் விஜய் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்த இளைஞர் சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர் என்றும் கூறப்படுகிறது. இதனால் இளைஞரை காவலாளிகள் போலீசில் ஒப்படைத்தனர். பின்னர் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை
இதனால் தவெக தலைவர் விஜய் வீட்டில் பாதுகாப்பு குறைபாடு உள்ளதா என்ற கேள்வி எழுந்துள்ளது. இதன்காரணமாக வெடிகுண்டு கண்டுபிடிப்பு மற்றும் செயலிழப்பு குழுவினர் மூலம் வீட்டை சோதனை செய்ய Y பிரிவு பாதுகாப்புப்படையினர் பரிந்துரை செய்துள்ளனர்.
அதன் அடிப்படையில் வெடிகுண்டு நிபுணர்கள் குழுவினர் விஜய் வீட்டில் சோதனை செய்து வருகின்றனர். Y பிரிவு பாதுகாப்பையும் மீறி விஜய் வீட்டில் இளைஞர் நுழைந்தது எப்படி என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.