தூத்துக்குடி மாவட்டம் வேடநத்தம் கிராமத்தில் பள்ளி மாணவி படுகொலை செய்யப்பட்ட வழக்கில், 8 நாட்களுக்கு பிறகு முக்கியக் குற்றவாளியைக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
மாணவி கொடூர கொலை
கடந்த வாரம் தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் அடுத்த வேடநத்தம் கிராமத்தைச் சேர்ந்த 12-ஆம் வகுப்பு மாணவி ஒருவர் மர்மமான முறையில் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டார். இந்தச் சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், குற்றவாளிகளை உடனடியாகக் கைது செய்யக் கோரி மாணவியின் குடும்பத்தினர் மற்றும் கிராம மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இதற்கிடையில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டதாக காவல்துறை உறுதி செய்தது.
குற்றவாளி தர்ம முனீஸ்வரன் பிடிபட்டார்
தொடர்ந்து, காவல்துறையினர் அமைத்த தனிப்படையினர் தீவிர தேடுதல் வேட்டை நடத்தியதில், ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடியைச் சேர்ந்த 'மாவீரன்' என்கிற தர்ம முனீஸ்வரன் (30) என்பவரைப் பிடித்துள்ளனர். முதற்கட்ட விசாரணையில், இவர் மீது ஏற்கனவே பல்வேறு மாவட்டங்களில் குற்ற வழக்குகள் நிலுவையில் இருப்பது தெரியவந்துள்ளது. இவருக்கும் இந்தக் கொலைக்கும் உள்ள தொடர்பு மற்றும் கொலையின் பின்னணி குறித்துக் காவல்துறையினர் ரகசிய இடத்தில் வைத்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

LIVE 24 X 7