அது என்ன கிளஸ்டர் குண்டு? 100 நாடுகளில் தடை செய்தது எதற்காக?
100 நாடுகளால் தடை செய்யப்பட்ட கிளஸ்டர் குண்டுகளை கொண்டு இஸ்ரேல் மீது ஈரான் தாக்குதல் நடத்தியுள்ள சம்பவம் உலக நாடுகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
100 நாடுகளால் தடை செய்யப்பட்ட கிளஸ்டர் குண்டுகளை கொண்டு இஸ்ரேல் மீது ஈரான் தாக்குதல் நடத்தியுள்ள சம்பவம் உலக நாடுகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஈரானுக்கு எதிரான ராணுவ தாக்குதல் தொடர்பாக அதிபர் டெனால்ட் ட்ரம்ப் 2 வாரங்களுக்குள் முடிவெடுப்பார் என அமெரிக்க வெள்ளை மாளிகை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
ஈரானில் உள்ள ஃபோர்டோ யுரேனியம் செறிவூட்டும் மையத்தை தாக்கும் ஒப்பந்தத்திற்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் ஒப்புதல் அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
உக்ரைன் மீது ரஷ்யா மீண்டும் வான்வழி தாக்குதல் நடத்தியதில், உக்ரனை சேர்ந்த 14 அப்பாவி மக்கள் கொல்லப்பட்டனர். உக்ரைன் தலைநகர் கீவ்-ல் வானுயர கட்டடத்தின் மீது இரவு நேரத்தில் நடத்தப்பட்ட ட்ரோன் தாக்குதலில் 44-க்கும் மேற்பட்டோர் காயம் என முதற்கட்ட விசாரணையில் தகவல் வெளியாகியுள்ளது.
இஸ்ரேல் - ஈரான் இடையே 7 ஆவது நாளாக தொடரும் மோதலால் இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் இதுவரை 585 பேர் உயிரிழந்தனர். ஆயிரத்து 326 பேர் காயமடைந்துள்ளனர்.
அமெரிக்க அதிபர் டிரம்ப் மீண்டும் திட்டவட்டமாக இந்தியா - பாகிஸ்தான் போரை தாமே நிறுத்தினேன் என்று கூறினார். இந்திய பிரதமர் நரேந்திர மோடி நேற்று தொலைப்பேசி வாயிலாக பேசியபோது மறுத்த நிலையில் அமெரிக்க அதிபர் டிரம்ப் மீண்டும் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
இந்தியா - பாகிஸ்தான் இடையேயான போர் நிறுத்தத்தில் அமெரிக்கா எந்தப் பங்கும் வகிக்கவில்லை என அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப்பிடம் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
ஈரான் - இஸ்ரேல் இடையே மோதல் நீடித்து வரும் நிலையில், இஸ்ரேலுடன் இணைந்து ஈரானை தாக்க அமெரிக்கா திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இஸ்ரேலுக்கு ஆதரவாக கூட்டறிக்கை வெளியிட்ட ஜி7 நாடுகள், ஈரானின் தாக்குதலில் இருந்து தற்காத்துகொள்ள இஸ்ரேலுக்கு உரிமை உள்ளதாக திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
இங்கிலாந்து உளவுத் துறையின் MI6-க்கு தலைவராக முதல்முறையாக பிளேஸ் மெட்ரெவேலி என்ற பெண்மணி நியமிக்கப்பட்டுள்ளார். பிரிட்டன் அரசு உளவுத்துறைக்கு ஒரு பெண் தலைவரை நியமிக்கப்படுவது வரலாற்றுச் சாதனையாக பார்க்கப்படுகிறது.
போர் பதற்றம் காரணமாக ஈரானில் இருந்து வெளியேறிய இந்தியர்கள் தரைமார்க்கமாக ஆர்மீனியா சென்றடைந்த நிலையில், அவர்களை பாதுகாப்பாக தாயகம் அழைத்து வர மத்திய அரசு ஏற்பாடு செய்துள்ளது.
அமெரிக்காவுடனான வர்த்தகத்தைப் பயன்படுத்தி, இந்தியா - பாகிஸ்தான் இடையே அமைதியை ஏற்படுத்தியது போல், இஸ்ரேல் - ஈரான் இடையேயும் அமைதியை ஏற்படுத்துவேன். என்னுடைய தலையீட்டால் இஸ்ரேல்-ஈரான் போர் முடிவுக்கு வரும். பதற்றத்தை நிறுத்த பேச்சுவார்த்தைகள் நடத்து வருகிறது என ட்ரூத் சோஷியல் சமூக வலைதள பக்கத்தில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் பதிவிட்டுள்ளார்.
இஸ்ரேலின் டெல் அவீவ் நகரில் உள்ள அமெரிக்க தூதரகம் அருகே ஈரான் ஏவுகணை தாக்குதல் நடத்திய தாக்குதலில் தூதரகம் சேதமடைந்துள்ளதால் தற்காலிகமாக மூடப்படுவதாகவும், யாருக்கும் காயம் ஏற்படவில்லை எனவும் இஸ்ரேலுக்கான அமெரிக்க தூதர் மைக் ஹக்கபி தெரிவித்துள்ளார்.
ஈரான் இஸ்ரேல் இடையேயான மோதல் மத்திய கிழக்கில் போர் பதற்றத்தை அதிகரித்துள்ள நிலையில், இந்த இரு நாடுகளுக்கும் இடையேயான பகை என்ன? இவர்களில் யார் பலம் மிக்கவர்கள்? போர் மூண்டால் வெல்லப்போவது யார்?
உலக மக்கள் தொகையில் அதிகளவில் இருந்த கிறிஸ்தவர்கள் எண்ணிக்கையானது பெரிய அளவில் வீழ்ச்சி அடைந்துள்ளதாகவும், இஸ்லாமியர்களின் எண்ணிக்கையானது முன்பைவிட அதிகரித்துள்ளதாகவும் சர்வே ரிப்போர்ட் ஒன்று வெளியாகியுள்ளது.
ஏர் இந்தியா விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட நிலையில், புக்கெட்டில் அவசர தரையிறக்கப்பட்டு பயணிகள் பாதுகாப்பாக மீட்கப்பட்டு சோதனை நடைபெற்றது. சோதனைக்கு பிறகு வெடிகுண்டு மிரட்டல் புரளி என்று தகவல் வெளியானது.
இஸ்ரேல் நடத்திய "ஆப்ரேஷன் ரைசிங் லயன்" என்ற ரகசிய தாக்குதலுக்கு பதிலடியாக, ஈரான் தனது பதில்தாக்குதலை தொடங்கியுள்ளது. இதற்காக, ஈரான் சுமார் 100 ட்ரோன்களை பயன்படுத்தி இஸ்ரேல் மீது நேரடி தாக்குதல் நடத்தியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சட்டவிரோதமாக குடியேறியவர்களை குறி வைத்து அதிபர் டிரம்ப் மேற்கொள்ளும் நடவடிக்கைகளை கண்டித்து நடைபெறும் போராட்டத்தினை செய்தி சேகரிக்க சென்ற பெண் நிருபர் மீது ரப்பர் தோட்டாவினால் சூப்பாக்கி சுடு நடத்தப்பட்டுள்ளது. தேசிய இராணுவத்தை லாஸ் ஏஞ்சல்ஸிலிருந்து வெளியேற்ற கலிபோர்னியா மாகாணத்தின் ஆளுநர் கவின் நியூசம் டிரம்புக்கு வேண்டுக்கோள் விடுத்துள்ளார்.
17 வயதே ஆன பாகிஸ்தானை சேர்ந்த டிக்டாக் பிரபலம் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
முஜிபுர் ரகுமான் தொடர்பான பாரம்பரிய அடையாளங்களை சிதைக்கும் வகையில் முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசாங்கம் செயல்பட்டு வருவதாக குற்றச்சாட்டு எழுந்து வரும் நிலையில், அதற்கு வலுசேர்க்கும் வகையில் வங்காளதேச கரன்சியில் இடம்பெற்றிருந்த முஜிபுர் ரகுமானின் உருவப்படங்கள் நீக்கப்பட்டுள்ளன.
பாகிஸ்தானுக்கு உளவு பார்த்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள யூடியூபர் ஜோதி மல்ஹோத்ராவுக்கும், கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் மருமகனுக்கும் தொடர்பு இருப்பதாக பாஜக வைத்துள்ள குற்றச்சாட்டு கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நைஜீரியாவில் கடும் மழையால் ஏற்பட்ட பெருவெள்ளத்தில் 88 பேர் நாடு முழுவதும் உயிரிழந்துள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் நூற்றுக்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளதாகவும், மற்றும் ஆயிரக்கணக்கானோர் தங்கள் வீடுகளை இழந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
நேபாளத்தைச் சேர்ந்த புகழ்பெற்ற மலையேறும் வழிகாட்டியான காமி ரீட்டா ஷெர்பா, எவரெஸ்ட் சிகரத்தை 31-வது முறையாக வெற்றிகரமாக ஏறி, தனது சொந்த சாதனையை தானே முறியடித்துள்ளார். இந்த சாதனை மூலம் உலக மலையேற்ற வரலாற்றில் ஒரு புதிய மைல்கல்லை பதிவு செய்துள்ளார்.
காஸாவின் குழந்தைகள்கூட எதிரிகள்தான், காஸாவில் ஒரு குழந்தை கூட இருக்கக்கூடாது என்று இஸ்ரேல் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மோஷே ஃபெயிக்லின் சர்ச்சைக்குரிய விதத்தில் பேசியிருப்பது, உலக நாடுகளுக்கிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவில் மட்டுமல்ல, அமெரிக்காவுக்கு வெளியே எங்கு ஐஃபோன்கள் தயாரிக்கப்பட்டாலும் 25 சதவீத வரி விதிக்கப்படும் எனவும் ஆப்பிள் நிறுவனத்துக்கு டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.