K U M U D A M   N E W S

உலகம்

ட்ரம்பின் முடிவால் USAID நிதி நிறுத்தம்: 1.4 கோடி மக்கள் உயிரிழக்கும் அபாயம்.. ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்!

USAID அமைப்பால் வெளிநாடுகளுக்கு அளிக்கப்பட்ட நிதியுதவியை ட்ரம்ப் அரசு நிறுத்தியதால், உலகளவில் சுமார் 1.4 கோடிக்கும் அதிகமான விளிம்புநிலை மக்கள் உயிரிழக்க நேரிடும் என ஆய்வில் தகவல் வெளியாகியுள்ளது.

வீரர்களாக மாறிய AI.. சீனாவில் ரோபோக்களுக்காக கால்பந்து போட்டி..!

சீனாவில் முதல்முறையாக ரோபோக்கள் மட்டுமே விளையாடும் கால்பந்து போட்டி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. AI மூலம் ரோபோக்கள் இயக்கப்பட்டு, வீரர்கள் ரோபோக்களாக இருந்தாலும், நடுவராக மனிதரே செயல்பட்ட இந்தப்போட்டியை 500க்கும் மேற்பட்டோர் கண்டு ரசித்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

எலான் மஸ்க் நல்ல பையன்தான் - டொனால்ட் ட்ரம்ப் பாராட்டு

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், டெஸ்லா மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் தலைமை நிர்வாக அதிகாரியான எலான் மஸ்க் மிகவும் நல்லவர் அவர் ஒரு அற்புதமான மனிதர் என்று நான் நினைக்கிறேன் என்று பாராட்டு தெரிவித்துள்ளார். மேலும், டிரம்ப் நிர்வாகத்தின் "மசோதா"வுக்கு எதிராக எலான் மஸ்க் குரல் கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

கனவா? நிஜமா?.. 6 மாதங்களாக வயிற்றுக்குள் கரண்டியுடன் வாழ்ந்த நபர்..!

சீனாவில் யான் என்ற நபர் மதுபோதையில் 15 செ.மீ நீளமுள்ள கரண்டியை விழுங்கியுள்ளார். 6 மாதங்களாக அது ஒரு கனவு என நினைத்து வந்த நிலையில், வயிற்று வலி ஏற்படவே மருத்துவமனை சென்றதால் உண்மை தெரிந்துள்ளது.

சுபான்ஷு சுக்லா – சர்வதேச விண்வெளி நிலையத்தில் கால்பதித்த முதல் இந்தியர்!

அமெரிக்காவில் செயல்படும் மனித விண்வெளிப் பயண சேவைகள் நிறுவனமான ஆக்ஸியம் ஸ்பேஸ் நிறுவனம், ஆக்ஸியம்-4 திட்டத்தின்கீழ் ஃபால்கான்-9 ராக்கெட்டை விண்ணில் ஏவப்பட்டது.

நியூயார்க் மேயர் தேர்தல்.. இந்திய வம்சாவளி வேட்பாளரை கடுமையாக சாடிய டிரம்ப்!

நியூயார்க் மேயர் பதவிக்காக போட்டியிடும் இந்திய வம்சாவளி வேட்பாளரை அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கடுமையாக சாடியுள்ளார்.

நாளை விண்வெளிக்கு செல்கிறார் இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா

இந்திய விண்வெளி வரலாற்றில் ஒரு முக்கியமான வரலாற்று நிகழ்வாக, இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா, நாளை நண்பகல் சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு புறப்படுவார் என்று நாசா தெரிவித்துள்ளது.

காசாவில் பயங்கர தாக்குதல்: ஒரே நாளில் 79 பாலஸ்தீனர்கள் உயிரிழப்பு!

காசாவில் இஸ்ரேல் நடத்திய கடும் விமான தாக்குதலில் வெறும் ஒரு நாளிலேயே 79 பாலஸ்தீனர்கள் உயிரிழந்துள்ளதாகவும், இதுவரை 56,000-க்கும் அதிகமான பாலஸ்தீனர்கள் உயிரிழந்துள்ளதாக பாலஸ்தீன சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

52 ஆண்டுகள் குடலில் இருந்த பிரஷ்.. 12 வயதில் விழுங்கிய பிரஷ் 64 வயதில் கண்டுபிடிப்பு!

சீனாவின் ஹெனான் மாகாணத்தைச் சேர்ந்த 64 வயதுடைய லீ என்ற முதியவர், சில வாரங்களுக்கு முன் கடுமையான வயிற்று வலியால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அப்போது அவருக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. அப்போது அவரது வயிற்றில் இருந்த பொருளை பார்த்து மருத்துவர்களே அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.

முடிவுக்கு வந்த இஸ்ரேல்-ஈரான் போர்.. அதிபர் டிரம்ப் அறிவிப்பு!

இஸ்ரேல் உடனான போரை நிறுத்துவதாக ஈரான் அதிகாரப்பூர்வமாக அறிவித்த நிலையில், தற்போது, இஸ்ரேலும் போர் நிறுத்த ஒப்பந்தத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளது. இரு நாடுகளும் போர் நிறுத்த ஒப்பந்தத்தை எட்டியுள்ளதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தகக்து.

போர் நிறுத்தம் இல்லை.. ஈரான் அரசு விளக்கம்

இஸ்ரேல் - ஈரான் போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டிருப்பதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்த நிலையில், அதற்கு ஈரான் மறுப்பு தெரிவித்துள்ளது.

சிரியாவில் துயர சம்பவம்.. தேவாலயத்தில் குண்டுவெடிப்பு..!

சிரியாவில் தேவாலயத்திற்குள் மக்களோடு மக்களாக இருந்த மர்ம நபர் தற்கொலை குண்டுவெடிப்பை நிகழ்த்தியுள்ளார்.

ஈரானின் அதிரடி முடிவு.. பெட்ரோல், டீசல் விலை உயர வாய்ப்பு?

அமெரிக்காவின் தாக்குதலை தொடர்ந்து, ஹார்முஸ் நீரிணையை மூட ஈரான் முடிவு செய்துள்ளது. இந்த நீரிணை வழியே பல்வேறு நாடுகளுக்கு கப்பலில் கச்சா எண்ணெய் கொண்டு செல்லப்படுகிறது. இதனால் பெட்ரோல், டீசல் விலை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

ஈரான் அணுசக்தி நிலையங்கள் மீது தாக்குதல் நடத்திய அமெரிக்கா!

இஸ்ரேல் - ஈரான் போர் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், இஸ்ரேலுக்கு, அமெரிக்க தொடர்ந்து ஆதரவு தெரிவித்து வரும் நிலையில், ஈரானின் 3 முக்கிய அணுசக்தி நிலையங்கள் அமெரிக்கா தாக்குதல் நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அது என்ன கிளஸ்டர் குண்டு? 100 நாடுகளில் தடை செய்தது எதற்காக?

100 நாடுகளால் தடை செய்யப்பட்ட கிளஸ்டர் குண்டுகளை கொண்டு இஸ்ரேல் மீது ஈரான் தாக்குதல் நடத்தியுள்ள சம்பவம் உலக நாடுகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஈரானுக்கு எதிரான ராணுவ தாக்குதல்.. 2 வாரங்களுக்குள் முடிவெடுக்கப்டும் - வெள்ளை மாளிகை அறிவிப்பு

ஈரானுக்கு எதிரான ராணுவ தாக்குதல் தொடர்பாக அதிபர் டெனால்ட் ட்ரம்ப் 2 வாரங்களுக்குள் முடிவெடுப்பார் என அமெரிக்க வெள்ளை மாளிகை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

ஈரான் சரணடைய வேண்டும் .. அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரிக்கை..!

ஈரானில் உள்ள ஃபோர்டோ யுரேனியம் செறிவூட்டும் மையத்தை தாக்கும் ஒப்பந்தத்திற்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் ஒப்புதல் அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

உக்ரைன் குடியிருப்புப் பகுதியில் ரஷ்யா தாக்குதல்.. 14 பேர் உயிரிழப்பு..!

உக்ரைன் மீது ரஷ்யா மீண்டும் வான்வழி தாக்குதல் நடத்தியதில், உக்ரனை சேர்ந்த 14 அப்பாவி மக்கள் கொல்லப்பட்டனர். உக்ரைன் தலைநகர் கீவ்-ல் வானுயர கட்டடத்தின் மீது இரவு நேரத்தில் நடத்தப்பட்ட ட்ரோன் தாக்குதலில் 44-க்கும் மேற்பட்டோர் காயம் என முதற்கட்ட விசாரணையில் தகவல் வெளியாகியுள்ளது.

இஸ்ரேல் - ஈரான் இடையே 7 வது நாளாக தொடரும் மோதல்.. இரு நாடுகளிலும் அதிகரிக்கும் உயிரிழப்புகள்!

இஸ்ரேல் - ஈரான் இடையே 7 ஆவது நாளாக தொடரும் மோதலால் இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் இதுவரை 585 பேர் உயிரிழந்தனர். ஆயிரத்து 326 பேர் காயமடைந்துள்ளனர்.

இந்தியா - பாகிஸ்தான் போரை தாமே நிறுத்தினேன் - அமெரிக்க அதிபர் டிரம்ப் மீண்டும் திட்டவட்டம்!

அமெரிக்க அதிபர் டிரம்ப் மீண்டும் திட்டவட்டமாக இந்தியா - பாகிஸ்தான் போரை தாமே நிறுத்தினேன் என்று கூறினார். இந்திய பிரதமர் நரேந்திர மோடி நேற்று தொலைப்பேசி வாயிலாக பேசியபோது மறுத்த நிலையில் அமெரிக்க அதிபர் டிரம்ப் மீண்டும் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

போர் நிறுத்தத்தில் அமெரிக்காவுக்கு எந்தப் பங்கும் இல்லை.. அதிபரிடம் தெரிவித்த பிரதமர்!

இந்தியா - பாகிஸ்தான் இடையேயான போர் நிறுத்தத்தில் அமெரிக்கா எந்தப் பங்கும் வகிக்கவில்லை என அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப்பிடம் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

இஸ்ரேலுடன் இணைந்து ஈரானை தாக்க அமெரிக்கா தயாராகிறதா? பின்னணி என்ன?

ஈரான் - இஸ்ரேல் இடையே மோதல் நீடித்து வரும் நிலையில், இஸ்ரேலுடன் இணைந்து ஈரானை தாக்க அமெரிக்கா திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தன்னைத்தானே பாதுகாத்துக் கொள்ள உரிமை உண்டு.. இஸ்ரேலுக்கு ஜி7 நாடுகள் ஆதரவு!

இஸ்ரேலுக்கு ஆதரவாக கூட்டறிக்கை வெளியிட்ட ஜி7 நாடுகள், ஈரானின் தாக்குதலில் இருந்து தற்காத்துகொள்ள இஸ்ரேலுக்கு உரிமை உள்ளதாக திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

பிரிட்டன் உளவுத்துறை MI6 அமைப்பு... முதல்முறையாக பெண் தலைவர் நியமனம்..!

இங்கிலாந்து உளவுத் துறையின் MI6-க்கு தலைவராக முதல்முறையாக பிளேஸ் மெட்ரெவேலி என்ற பெண்மணி நியமிக்கப்பட்டுள்ளார். பிரிட்டன் அரசு உளவுத்துறைக்கு ஒரு பெண் தலைவரை நியமிக்கப்படுவது வரலாற்றுச் சாதனையாக பார்க்கப்படுகிறது.

போர் பதற்றம் எதிரொலி: ஈரானிலிருந்து இந்தியர்களை அழைத்து வர மத்திய அரசு ஏற்பாடு!

போர் பதற்றம் காரணமாக ஈரானில் இருந்து வெளியேறிய இந்தியர்கள் தரைமார்க்கமாக ஆர்மீனியா சென்றடைந்த நிலையில், அவர்களை பாதுகாப்பாக தாயகம் அழைத்து வர மத்திய அரசு ஏற்பாடு செய்துள்ளது.