சிறுமிகள் மற்றும் இளம் பெண்களைக் கடத்தி, செல்வாக்கு மிக்கவர்களுக்குப் போகப் பொருளாக விநியோகித்து வந்த அமெரிக்கத் தொழிலதிபர் ஜெப்ரி எப்ஸ்டீன் தொடர்பான லட்சக்கணக்கான கோப்புகள் தற்போது வெளியாகி உலகையே உலுக்கி வருகின்றன.
இதற்கெனத் தனித் தீவு ஒன்றையே வைத்திருந்த எப்ஸ்டீன், கடந்த 2019-ம் ஆண்டு ஜூலை மாதம் பாலியல் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டு, அதே ஆண்டு ஆகஸ்ட் மாதம் நியூயார்க் சிறையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார். அவர் சேகரித்து வைத்திருந்த வீடியோக்கள் மற்றும் ஆவணங்கள் நீதிமன்ற உத்தரவின்படி தற்போது பகுதி பகுதியாக வெளியிடப்பட்டு வருகின்றன.
குற்றவியல் நெட்வொர்க் மற்றும் உயர்மட்டத் தொடர்புகள்
அமெரிக்க நீதித்துறை சமீபத்தில் வெளியிட்ட இந்த 'எப்ஸ்டீன் கோப்புகளில்', டொனால்டு டிரம்ப், பில் கேட்ஸ், எலான் மஸ்க், பிரிட்டன் முன்னாள் இளவரசர் ஆண்ட்ரு உள்ளிட்ட பல சர்வதேசப் பிரபலங்களின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன. இந்த ஆவணங்களை ஆய்வு செய்த ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையால் நியமிக்கப்பட்ட நிபுணர் குழு, இது ஒரு சாதாரணக் குற்றமல்ல என்றும், ஒரு "உலகளாவிய குற்றவியல் நெட்வொர்க்" மூலமாகத் திட்டமிட்டு நடத்தப்பட்ட செயல் என்றும் தெரிவித்துள்ளது. குறிப்பாக, பாலியல் அடிமைத்தனம் மற்றும் கடத்தல் போன்ற இக்கொடுமைகள் சட்டப்படி 'மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்கள்' (Crimes against humanity) என்ற நிலையை எட்டியுள்ளதாக நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் விசாரணை கோரிக்கை
இதுவரை வெளியான ஆவணங்களின் மூலம் 1,200-க்கும் மேற்பட்ட பாதிக்கப்பட்டவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அமெரிக்க அரசு வெளியிட்ட ஆவணங்களில் பல முக்கியப் பெயர்கள் முறையாக மறைக்கப்படாததால் (Redaction failure), பாதிக்கப்பட்டவர்களின் ரகசியத் தகவல்கள் கசிந்துள்ளதை ஐநா குழு வன்மையாகக் கண்டித்துள்ளது. இவ்வளவு பெரிய அளவிலான குற்றங்கள் பல ஆண்டுகளாக எப்படி அதிகார வர்க்கத்தின் பார்வையில் படாமல் தொடர்ந்தன என்பது குறித்து விரிவான விசாரணை தேவை என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
எவ்வளவு செல்வாக்கு மிக்கவர்களாக இருந்தாலும் யாரும் சட்டத்திற்கு மேலானவர்கள் அல்ல என்பதைச் சுட்டிக்காட்டியுள்ள நிபுணர் குழு, எப்ஸ்டீனுடன் தொடர்பிலிருந்த அனைவரும் பாரபட்சமின்றி விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டும் எனத் தெரிவித்துள்ளது. உண்மைகளை முழுமையாக வெளியிடாதது மற்றும் விசாரணையில் காட்டப்படும் தயக்கம், பாதிக்கப்பட்ட பெண்களுக்கு மேலும் மன உளைச்சலைத் தருவதாகவும் அக்குழு கவலை தெரிவித்துள்ளது.

LIVE 24 X 7