அமெரிக்காவில் 'சிகாடா' (Cicada) என்று அழைக்கப்படும் புதிய வகை உருமாறிய கொரோனா வைரஸ் அதிவேகமாகப் பரவி வருவது உலக நாடுகளிடையே மீண்டும் கவனத்தை ஈர்த்துள்ளது. பிஏ.3.2 (BA.3.2) எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த வைரஸ், மற்ற வகைகளை விட விரைவாக உருமாறும் தன்மையைக் கொண்டுள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
அமெரிக்க நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் (CDC) வெளியிட்டுள்ள தகவலின்படி, அந்நாட்டின் 25 மாகாணங்களில் இந்த புதிய வகை வைரஸ் பரவல் உறுதி செய்யப்பட்டுள்ளது. 2024-ஆம் ஆண்டின் இறுதியில் தென்னாப்பிரிக்காவில் முதன்முதலில் கண்டறியப்பட்ட இந்தத் தொற்று, 2025-ஆம் ஆண்டில் உலகளவில் பரவத் தொடங்கி தற்போது அமெரிக்கா உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட நாடுகளில் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.
அசுர வேக உருமாற்றம்
இந்த பிஏ.3.2 வைரஸானது, 2021-இல் உலகை அச்சுறுத்திய 'ஒமைக்ரான்' வைரஸின் தொடர்ச்சியாகக் கருதப்படுகிறது. இதன் புரத அமைப்பில் (Spike Protein) மட்டும் சுமார் 70 முதல் 75 வகையான உருமாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. இத்தகைய வேகமான உருமாற்றப் பண்பினால், தற்போது புழக்கத்தில் உள்ள கொரோனா தடுப்பூசிகள் இந்த புதிய வைரஸுக்கு எதிராக எதிர்பார்த்த அளவிற்குக் கூடுதல் பலனைத் தரவில்லை என மருத்துவ வல்லுநர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
நிபுணர்களின் கருத்து
தற்போது இந்தத் தொற்றினால் பொதுமக்கள் அதிகம் பாதிக்கப்பட்டு வந்தாலும், உடனடியான பெரிய அளவிலான உயிரிழப்பு அச்சுறுத்தல்கள் எதுவும் இல்லை என்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். இருப்பினும், வைரஸ் தொடர்ந்து உருமாறி வருவதால் தற்காப்பு நடவடிக்கைகளில் தொய்வு ஏற்படக்கூடாது என எச்சரிக்கப்பட்டுள்ளது. 2019-இல் சீனாவில் தொடங்கி உலகையே உலுக்கிய கொரோனா பெருந்தொற்றின் பல்வேறு அலைகளைத் தொடர்ந்து, இந்த புதிய வகை வைரஸின் நகர்வுகளை உலக சுகாதார அமைப்பும் உன்னிப்பாகக் கவனித்து வருகிறது.

LIVE 24 X 7