இஸ்ரேல், அமெரிக்காவின் கூட்டுத்தாக்குதலை தொடர்ந்து, ஈரான் வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்கள் மற்றும் விமான நிலையத்தை ஏவுகணை மற்றும் ட்ரான்களை விட்டு தாக்கு வருகிறது. இந்த நிலையில், துபாய் சர்வதேச விமான நிலையம் அருகே இன்று ஈரானின் இரண்டு ட்ரோன்கள் மோதித் தாக்கின. இந்தச் சம்பவத்தில் இந்தியர் ஒருவர் உட்பட மொத்தம் நான்கு பேர் காயமடைந்தனர்.
பாதிப்பு விவரம்
இந்தத் தாக்குதல் குறித்து துபாய் அரசு ஊடக அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "இந்தச் சம்பவத்தில் கானா நாட்டைச் சேர்ந்த இருவர் மற்றும் வங்கதேசத்தைச் சேர்ந்த ஒருவருக்கு லேசான காயங்களும், இந்தியர் ஒருவருக்கு காயம் ஏற்பட்டுள்ளது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், காயமடைந்தவர்களுக்குத் தேவையான சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
விமான போக்குவரத்து பாதிப்பில்லை
உலகிலேயே சர்வதேசப் பயணிகளால் அதிகம் பயன்படுத்தப்படும் பரபரப்பான விமான நிலையமாகத் துபாய் சர்வதேச விமான நிலையம் விளங்குகிறது. எமிரேட்ஸ் (Emirates) விமான நிறுவனத்தின் தலைமையகமான இங்கு, இந்தத் தாக்குதலுக்குப் பிறகும் விமானச் சேவைகள் எந்தவிதத் தடையும் இன்றித் தொடர்ந்து நடைபெற்று வருவதாக அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
போர் பதற்றங்களுக்கு மத்தியிலும் விமானச் சேவைகளைச் சீராக நடத்த அதிகாரிகள் தொடர்ந்து முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

LIVE 24 X 7