திருப்பதியில் இனி லட்டுடன் புத்தகமும் பிரசாதமாக வழங்கப்படும் - தேவஸ்தானம் அறிவிப்பு!
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இனி பக்தர்களுக்கு லட்டுடன் புத்தகமும் பிரசாதமாக வழங்கப்படும் என தேவஸ்தானம் அறிவித்துள்ளது. சுவாமி தரிசனத்திற்குக் காத்திருக்கும் பக்தர்களுக்கு இது பயனுள்ளதாக இருக்கும் எனவும், புத்தகம் அச்சிடுவதற்கான செலவை ஏற்க நன்கொடையாளர்கள் முன் வந்துள்ளனர் எனவும் தேவஸ்தானம் தகவல் தெரிவித்துள்ளது.