மதுரை திருப்பரங்குன்றம் மலை உச்சியில் அமைந்துள்ள தூண் இருக்கும் இடம் தர்காவிற்குச் சொந்தமானது என்று வக்பு வாரியம் உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. இந்த வழக்கில் இன்று மூன்றாவது நாளாகக் காரசாரமான விவாதம் நடைபெற்றது.
வழக்கறிஞர் வெளியேற்றம் மற்றும் நடவடிக்கை
திருப்பரங்குன்றம் விவகாரம் தொடர்பாக இன்று காலை வழக்கு விசாரணைக்கு வந்தபோது, ஒரு வழக்கறிஞர் இடையீட்டு மனு தாக்கல் செய்ய முயன்றார். திருப்பரங்குன்றம் விவகாரத்தில் இடையீட்டு மனு தாக்கல் செய்ய அனுமதிக்க முடியாது என்று தெரிவித்த நீதிபதிகள், இடையீட்டு மனு தாக்கல் செய்ய முயன்ற வழக்கறிஞரை சி.ஐ.எஸ்.எஃப் (CISF) வீரர்களை வைத்து வெளியேற்ற உத்தரவிட்டனர். மேலும், சம்பந்தப்பட்ட வழக்கறிஞர் மீது பார் கவுன்சில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
வக்பு வாரியத்தின் முக்கிய வாதங்கள்
இதையடுத்து, திருப்பரங்குன்றம் வழக்கில் மூன்றாவது நாளாக வாதம் தொடங்கியது. வக்பு வாரியம் சார்பில் முன்வைக்கப்பட்ட வாதங்களில், மலை உச்சியில் பல ஆண்டுகளுக்கு முன்னதாகவே தர்கா உள்ளது என்றும், அதன் அருகில் தொழுகை நடப்பது வழக்கமாகவே இருந்து வருகிறது என்றும் தெரிவிக்கப்பட்டது. நெல்லித்தோப்பு மற்றும் அது சார்ந்த பாதைகள், அவ்விடத்திற்குச் செல்லும் படிக்கட்டுகள் ஆகியவை தர்காவுக்குச் சொந்தமான நிலங்கள் என உத்தரவில் கூறப்பட்டுள்ளது. இதையெல்லாம் தனி நீதிபதி சுவாமிநாதன் கவனத்தில் கொள்ளவில்லை என்றும் வக்பு சார்பில் பதிலளிக்கப்பட்டது.
மேலும், திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தர்கா அமைந்துள்ள ஒரே பாறையில், தர்கா குதிரைச்சுனை உள்ளது என்றும், அதனையடுத்து உள்ள தூண் அமைந்திருக்கும் இடமும் தர்காவுக்குச் சொந்தமானது என்றும் வக்பு வாரியம் சார்பில் வாதம் முன்வைக்கப்பட்டது.

LIVE 24 X 7