K U M U D A M   N E W S

ஆன்மிகம்

கபாலீஸ்வரர் கோயில் கோலாகலமாக தொடங்கிய தேரோட்டம்.. அரோகரா கோஷங்களுடன் தேரை இழுத்த பக்தர்கள்!

சென்னையில் பங்குனி பெருவிழாவை முன்னிட்டு பிரசித்தி பெற்ற மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் தேரோட்டம் தொடங்கியது. திரளான பக்தர்கள் கூடி அரோகரா கோஷங்களுடன் தேரை வட்டம் பிடித்து இழுத்தனர்.

முத்துமாரியம்மன் கோயில் திருவிழா.. உடல் முழுவதும் சேற்றை பூசிக் கொண்டு நூதன முறையில் நேர்த்தி கடன்

கொன்னையூர் முத்துமாரியம்மன் கோயிலில் உடல் முழுவதும் சேற்றை பூசிக் கொண்டு நூதன முறையில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

96 அடி உயரம். 350 டன் எடை.. கோலாகலமாக தொடங்கியது திருவாரூர் ஆழித் தேரோட்டம்..!

உலகப் புகழ் பெற்ற 96 அடி உயரமும், 350 டன் எடையளவும் கொண்ட திருவாரூர் ஆழித்தேரோட்டம் கோலாகலமாக தொடங்கியது. இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டதால் 2000 காவலர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

பங்குனி திருவிழா.. இந்து பக்தர்களுக்கு குடிதண்ணீர் வழங்கிய இஸ்லாமியர்கள்

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி முத்தாலம்மன் கோயில் வண்டி மாகாளி ஊர்வல வைபத்தில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு இஸ்லாமியர்கள் குடி தண்ணீர் வழங்கிய நெகிழ்ச்சியான சம்பவம் நடைபெற்றது.

பங்குனி உத்திரத்தின் சிறப்புகள்.. இறைவனின் அருள் பொழியும் புனித நாள்!

தமிழ் மாதங்களில் இறுதி மாதமான பங்குனியில் வரும் உத்திரா நட்சத்திரம் மிகுந்த சிறப்பு வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. அன்றைய தினமே பங்குனி உத்திர திருவிழாவாக அனைத்து கோவில்களிலும் வெகு சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

காசி விஸ்வநாதர் ஆலயம்: குழப்பத்தில் இருக்கும் கும்பாபிஷேகம்.. விமர்சையாக நடைபெற்ற பூஜை

தென்காசி காசி விஸ்வநாதர் ஆலயத்தில் நடைபெற்ற வாஸ்து சாந்தி பூஜையில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

திருப்பதி போக முடியலையா? திருப்பதி சென்ற பலன் தரும் கிடைக்கும் `கேரள திருப்பதி-க்கு போங்க!

கேரள திருப்பதி என்று அழைக்கப்படும் திருவேங்கிடம் வெங்கடாஜலபதி திருக்கோவில் பிரசித்தி பெற்ற ஆன்மீக தலமாக உள்ளது. இக்கோவிலை 'கேரள திருப்பதி' என்று சிறப்புப் பெயர்க்கொண்டு பக்தர்கள் அழைக்கின்றனர்.

Lord Ganesha: விநாயகருக்கு அருகம்புல் சாற்றுவதற்கு இதுதான் காரணமா?

விநாயகனே வினை தீர்ப்பவனே என்று பாடல் வரிகள் ஒலிப்பதை நாம் பல இடங்களில் பார்த்திருப்போம். ஒரு நல்ல நிகழ்ச்சியின் தொடக்கத்தில், விநாயகரை வணங்க செல்பவர்கள், கையில் அருகம்புல் மாலையுடன் சென்று வழிபாடு செய்வர். எந்த காரியத்திலும் தொடக்கமாக விளங்கக் கூடியவர் விநாயகர் தான். ஆனால், அருகம்புல் மாலை சாற்றுகிறார்கள் என்று பலருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அருகம்புல் மாலை பற்றி நாமும் அறிந்துகொள்வோம்.

தனுசு ராசிக்காரங்களே ரொம்ப கவனமா இருங்க..! ஜோதிடர் ஷெல்வீ துல்லிய கணிப்பு

தனுசு ராசிக்காரர்கள் வரவு செலவுகளில் நிதானத்துடன் செயல்பட வேண்டும் என்று  ஜோதிடர் ஷெல்வீ தெரிவித்துள்ளார்.

விமர்சையாக நடைபெற்ற பூக்குழி திருவிழா.. திரளான பக்தர்கள் சாமி தரிசனம்

தென்காசி மாவட்டம் விகே புதூர் அருகே பிரசித்தி பெற்ற அம்மன் உச்சிமாகாளி அம்மன் கோயிலில் விமர்ச்சையாக நடைபெற்ற பூக்குழி திருவிழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

பங்குனி ஆறாட்டு திருவிழா.. சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறப்பு!

பங்குனி ஆறாட்டு திருவிழாவுக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை இன்று மாலை திறக்கப்பட்ட நிலையில், ஏராளமான பக்தர்கள் சாமிதரிசனம் செய்தனர்.  நாளை கொடியேற்றத்துடன் தொடங்கப்படும் திருவிழா 10 நாட்கள் நடைபெற உள்ளது.

காணக்கிடைக்காத அதிசயம்.. சிவபக்தர்களின் கவனத்திற்கு!

நெல்லை மாவட்டம் நெல்லையப்பர் திருக்கோவில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் வெகு விமர்சையாக தொடங்கியது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.

கன்னியாகுமரி பத்திரகாளியம்மன் தூக்க நேர்ச்சை திருவிழா..  பக்தர்கள் சாமி தரிசனம்

கன்னியாகுமரி மாவட்டம் பிரசித்தி பெற்ற கொல்லங்கோடு பத்திரகாளியம்மன் கோயில் தூக்கநேர்ச்சை விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

ஸ்ரீ முத்துமாரியம்மன் கோவில் பங்குனி திருவிழா.. குதிரை ஆட்டத்துடன் தேரோட்டம்!

அரிமளம் அருகே உள்ள ஓனாங்குடியில் ஸ்ரீ முத்துமாரியம்மன் கோவில் பங்குனி திருவிழாவை முன்னிட்டு குதிரை ஆட்டத்துடன் வெகு விமர்சையாக தேரோட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்து சாமி தரிசனம் செய்தனர்.

ஸ்ரீ நர்த்தன விநாயகர் ஆலய கும்பாபிஷேகம்.. பக்தர்கள் சாமி தரிசனம்

திருவாரூர் மாவட்டம் ஸ்ரீ நர்த்தன விநாயகர் ஆலய  ராஜகோபுர  கும்பாபிஷேக விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

மேலூர் முத்துமாரியம்மன் கோயில் திருவிழா.. நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள்

மதுரை மாவட்டம் மேலூர் மில்கேட் முத்துமாரியம்மன் கோயில் பங்குனி உற்சவ விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பால் குடம் எடுத்தும் அழகு குத்தியும் நேர்த்திக்கடன் செலுத்தி வழிபாடு நடத்தினர்.

உலக நன்மைக்காக திருவிளக்கு பூஜை.. ஏராளமானோர் பங்கேற்பு!

மேலூரில் முத்துமாரியம்மன் கோவிலில், உலக நன்மை மற்றும் மழை வேண்டி நடைபெற்ற பூஜையில் திரளான பெண்கள் கலந்துக் கொண்டு பூஜை செய்து வழிபாடு செய்தனர்.

கோடிக்கணக்கில் காணிக்கை செலுத்திய பக்தர்கள்.. கோயில் நிர்வாகம் தகவல்

பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலில்  3 கோடியே 74 லட்சத்து 95 ஆயிரத்து 627 ரூபாயை  பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியுள்ளதாக கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

புற்றடி மாரியம்மன் தீமிதி திருவிழா.. திரளான பக்தர்கள் பங்கேற்பு

திருவாரூர் மாவட்டம்  அருள்மிகு புற்றடி மாரியம்மன் ஆலய பங்குனி தீமிதி திருவிழாவில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு தீயில் இறங்கி தங்களது வேண்டுதலை நிறைவேற்றினர்.

பண்ணாரி மாரியம்மன் கோயில் 'குண்டம்' திருவிழா இன்று தொடக்கம்!

லட்சக்கணக்கான பக்தர்கள்  தீ மிதித்து நேர்த்திக் கடன் செலுத்தும் பண்ணாரி மாரியம்மன் கோயில் குண்டம் திருவிழா இன்று பூச்சாட்டுதல் நிகழ்ச்சியுடன் தொடங்குகிறது.

காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயில் வருடாந்திர மாசி மாத பிரம்மோற்சவம் கோலாகலம்!

சக்தி தலங்களில் ஒட்டியான பீட ஸ்தலமாக விளங்கும் முதன்மை ஸ்தலமான உலக பிரசித்தி பெற்ற காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவிலில் ஆண்டுதோறும் வருடாந்திர மாசி மாத பிரம்மோற்சவம் நிறைவடைந்து விடையாற்றி உற்சவம்  நடைபெற்றது.

தொகுதி மறுவரையறை: தமிழகத்தில் தொகுதிகள் குறைந்தால் போராடுவோம் - ஜான் பாண்டியன்

தொகுதி வரையறு காரணமாக தமிழகத்தில் தொகுதிகள் எண்ணிக்கை குறைந்தால் எதிர்த்து தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் போராடும் என்று தமிழக முன்னேற்ற கழக தலைவர் ஜான் பாண்டியன் தெரிவித்துள்ளார்.

திருவாரூர் தியாகராஜசுவாமி கோயிலில் நால்வர் வீதியுலா .. பக்தர்கள் சாமி தரிசனம்,.!

திருவாரூர் தியாகராஜசுவாமி ஆலயத்தில் நடைப்பெற்று வரும் பங்குனி உத்திரபெருவிழாவில் பக்தோற்சவத்தை ஒட்டி நால்வர் வீதியுலா நடைபெற்றது.

அருள்மிகு ஸ்ரீ கல்யாண வெங்கட்ரமண ஸ்வாமி ஆலயத்தில் புஷ்ப யாகம்.. பக்தர்கள் சாமி தரிசனம்..!

கரூர் தான்தோன்றி மலை அருள்மிகு ஸ்ரீ கல்யாண வெங்கட்ரமண ஸ்வாமி ஆலயத்தில் உற்சவர் சுவாமிகளுக்கு புஷ்ப யாகம் நடைபெற்றது.

ஸ்ரீவில்லிபுத்தூர் பூக்குழி திருவிழா கொடியேற்றம்.. ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்..!

ஸ்ரீவில்லிபுத்தூரில்  பிரசித்தி பெற்ற பழமை வாய்ந்த பெரிய மாரியம்மன் கோவில் பூக்குழி திருவிழாவை முன்னிட்டு முதல்நாள் நிகழ்ச்சியான இன்று கொடியேற்ற வைபவம் நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.