ஆன்மிகம்

மேஷம் முதல் மீனம்: வரவிருக்கும் நாட்கள் எப்படி? ஷெல்வியின் ராசி பலன் கணிப்பு!

மேஷம் முதல் மீனம் ராசி வரையிலான ராசிப்பலன்களை (19.8.2025 வரை) குமுதம் வாசகர்களுக்காக கணித்து வழங்கியுள்ளார் யதார்த்த ஜோதிடர் ஷெல்வீ.

மேஷம் முதல் மீனம்: வரவிருக்கும் நாட்கள் எப்படி? ஷெல்வியின் ராசி பலன் கணிப்பு!
Weekly Horoscope by Shelvi for Till 19 August 2025
horoscope predicted by astrologer shelvi: மேஷம் முதல் மீனம் ராசி வரையிலான ராசிப்பலன்களை (19.8.2025 வரை) குமுதம் வாசகர்களுக்காக கணித்து வழங்கியுள்ளார் யதார்த்த ஜோதிடர் ஷெல்வீ. அதன் விவரம் பின்வருமாறு-

மேஷம்:

உயர்வுகள் கிட்டுவது உத்தரவாதமாகும் காலகட்டம். அலுவலகத்தில் பெருமை அதிகரிக்கும். திட்டங்களில் கவனம் இருந்தால் நன்மைகள் நிலைக்கும். குடும்பத்தில் விட்டுக்கொடுத்தல் முக்கியம். வேண்டாத செலவுகளைத் தவிருங்கள். ஆடை, ஆபரணம் சேரும். செய்யும் தொழிலில் முன்னேற்றம் உறுதியாகும். அரசு, அரசியல் சார்ந்தோர் பிறருக்கு ஜாமீன் தருவதைத் தவிருங்கள். கலைஞர்கள் படைப்பு ரகசியங்களைப் பிறரிடம் பகிரவேண்டாம். அடிவயிறு, தலைவலி, சுளுக்கு உபாதைகள் வரலாம். பயணத்தில் நிதானம் முக்கியம். பார்வதி வழிபாடு பரமசந்தோஷம் தரும்!

ரிஷபம்:

பொறுப்பு உணர்வுடன் செயல்படவேண்டிய காலகட்டம். அலுவலகத்தில் நேரம் தவறாமை முக்கியம். பிறர் தவறை பேசவேண்டாம். குடும்பத்தில் உங்கள் செல்வாக்கு உயரும். வாழ்க்கைத்துணை உடல்நலம் சீராகும். தேவையற்ற வாக்குவாதம் தவிருங்கள். குடும்பத்தில் மூன்றாம் நபரை அனுமதிக்க வேண்டாம். சஞ்சலம், சபலம் தவிருங்கள். செய்யும் தொழிலில் புதிய முதலீடுகள் வேண்டாம். அரசு, அரசியலில் நாவடக்கமே நல்லது. ரத்த அழுத்தம், முதுகெலும்பு உபாதைகள் வரலாம். பயணத்தில் படபடப்பு கூடாது. பைரவர் வழிபாடு பசுமை சேர்க்கும்!

மிதுனம்:

உழைக்கத் தயங்காதவர்களுக்கு உன்னதமான காலகட்டம். பணிகளில் பதற்றம் கூடாது. திட்டமிடல் மிக முக்கியம். குடும்பத்தில் குழப்பங்கள் நீங்கும். புதிய நபர்களிடம் நெருக்கம் வேண்டாம். ஆடை, ஆபரணம் சேரும். கடன்களை நேரடியாகப் பைசல் செய்யுங்கள். செய்யும் தொழிலில் முடங்காத முயற்சிகள் முக்கியம். அரசு, அரசியலில் அமைதியாக இருந்தால் எதிர்காலத்தில் ஏற்றம் ஏற்படும். கலைஞர்கள் வெளிநாடு செல்ல யோகம் உண்டு. பயணத்தில் உடைமை பத்திரம். பற்கள், எலும்பு உபாதை வரலாம். பெருமாள் வழிபாடு, பெருமை சேர்க்கும்!

கடகம்:

அமைதியாக இருந்தால், ஆதாயம் அதிகரிக்கும். அலுவலகத்தில் திட்டமிடல் அவசியம். முக்கியமான கோப்புகளை பத்திரமாக வையுங்கள். குடும்பத்தில் குதூகலத்திற்குக் குறைவிருக்காது. உறவினர் சேர்க்கை உண்டு. சுபசெலவுகள் அதிகரிக்கும். வழக்குகளில் நேரடி கவனம் தேவை. செய்யும் தொழிலில் உழைப்புக்கு ஏற்ப உயர்வு உண்டு. அரசு அரசியலில் மேலிடத்து ஆதரவு உண்டு. கலைஞர்கள் தகுதிக்கு ஏற்ப வாய்ப்புகளைப் பெறுவீர்கள். நரம்பு, எலும்பு உபாதைகள் வரலாம். வாகனத்தில் வேகம் வேண்டாம். தட்சிணா மூர்த்தி வழிபாடு தழைக்கச் செய்யும்!

சிம்மம்:

நன்மைகள் வரத்தொடங்கும் காலகட்டம். பணியிடத்தில் திறமை பேசப்படும். அனுபவம் மிக்கவர்களை அலட்சியப்படுத்த வேண்டாம். குடும்பத்தில் நிம்மதி இடம்பிடிக்கும். உறவுகளால் அனுகூலம் உண்டு. ரத்த பந்தங்களால் பெருமை சேரும். சுபகாரியத்தில் அவசரம் வேண்டாம். செய்யும் தொழிலில் சீரான போக்கு நிலவும். அரசு, அரசியலில் பொறுமை நல்லது. கலைஞர்களுக்கு வாய்ப்புகள் நிச்சயம் வரும். அல்சர், அலர்ஜி அவஸ்தை தரலாம். வாகனத்தில் வித்தைகாட்டல் கூடாது. அனுமன் வழிபாடு ஆனந்தம் சேர்க்கும்!

கன்னி:

சிந்தித்துச் செயல்பட்டால், சீரான நன்மை கிட்டும் காலகட்டம். பணியிடப் பிரச்னைகள் படிப்படியாகத் தீரும். பொறுப்புகளில் முழுமையான கவனம் முக்கியம். குடும்பத்தில் வீண் தர்க்கம் வேண்டாம். பழைய நண்பர்களை சந்திப்பீர்கள். தம்பதியரிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். பணத்தைக் கவனமாகக் கையாளுங்கள். வாரிசுகளால் பெருமை உண்டு. செய்யும் தொழிலில் வளர்ச்சி அதிகரிக்கும். அரசு, அரசியலில் ஆதரவு நிலைக்கும். கலைஞர்களுக்கு சோம்பல் கூடாது. வாகனத்தில் வேகம் வேண்டாம். கழிவுறுப்பு, பாதத்தில் பிரச்னை வரலாம். இஷ்ட மகான் வழிபாடு வாழ்வை மணக்கச் செய்யும்!

விருச்சிகம்:

அவசரம் கூடாத காலகட்டம். பணியிடத்தில் பொறுப்புகளில் நேரடி கவனம் முக்கியம். மேலதிகாரிகளிடம் வாக்குவாதம் வேண்டாம். இல்லத்தில் இன் சொல்லே இனிமை சேர்க்கும். வரவும் செலவும் சமமாக இருக்கும். புதிய நபர்களிடம் ரகசியம் பேச வேண்டாம். விலை உயர்ந்த பொருட்கள் பத்திரம். செய்யும் தொழிலில் தொய்வு நிலை மாறும். அரசு, அரசியலில் உள்ளோர் முகஸ்துதி நபர்களை விலக்குங்கள். கலை, படைப்புத் துறையினர் கனவுகள் நனவாகும். தலைவலி, சளித் தொல்லை சங்கடம் தரலாம். பயணத்தால் ஆதாயம் உண்டு. நரசிம்மர் வழிபாடு நலம் சேர்க்கும்!

துலாம்:

தன்னம்பிக்கை அதிகரிக்கும் காலகட்டம். அலுவலகத்தில் மேலதிகாரிகள் ஆதரவு உண்டு. அதேசமயம் எதிலும் அலட்சியம், அவசரம் வேண்டாம். வீட்டில் விட்டுக்கொடுத்தல் நல்லது. புதிய உறவுகளால் ஆதாயம் உண்டு. வரவை சேமிக்கப் பழகுங்கள். எதிர்பார்த்த சுபகாரியங்கள் கைகூடும். வர்த்தக ஒப்பந்தத்தில் கவனம் அவசியம். அரசு, அரசியலில் பொறுமையே பெருமை தரும். கலைஞர்களுக்கு வாய்ப்புகள் வரத் தொடங்கும். உஷ்ண உபாதைகள் வரலாம். பயணப்பாதையில் நிதானம் முக்கியம். துர்க்கை வழிபாடு, துளிர்க்கச் செய்யும்!

தனுசு:

முயற்சித்தால் மேன்மைகள் உருவாகும் காலகட்டம். பணியிடத்தில் பொறுப்பும் அலைச்சலும் அதிகரித்தாலும் ஆதாயமும் உண்டு. பிறரால் ஏற்பட்டிருந்த பழி நீங்கும். வீட்டில் சுமுகமான போக்கு நிலவும். அசையும் அசையா சொத்து சேர்க்கை உண்டு. எதிர்பாலரிடம் கவனமாகப் பழகுங்கள். கடன்களில் நிதானம் முக்கியம். செய்யும் தொழிலில் புதிய முதலீடு வேண்டாம். அரசு, அரசியலில் உள்ளோர்க்கு ஏற்றம் ஏற்படும். கலைஞர்கள் முயற்சியால் முன்னேறி வரலாம். காது, மூக்கு தொண்டை உபாதைகள் வரலாம். வாகனப் பழுதை உடன் சீர் செய்யுங்கள். சிவன் வழிபாடு சிறக்கச் செய்யும்!

மகரம்:

மனம்போல மாற்றங்கள் ஏற்படக்கூடிய காலகட்டம். பணிகளில் திறமை பளிச்சிடும். உடனிருப்போர் ஆதரவு கிட்டும். வெளியூர், வெளிநாடு செல்ல வாய்ப்பு உண்டு. செய்யும் தொழிலில் லாபம் சீராகும். தாய்வழி உறவுகளால் ஆதரவு உண்டு. குடும்ப ரகசியங்களை யாரிடமும் பகிர வேண்டாம். வீடு, நிலம் வாங்கும் யோகம் உண்டு. வார்த்தைகளில் நிதானம் தேவை. செய்யும் தொழில் வளர்ச்சி பெறும். அரசு, அரசியலில் ஆதரவு தொடரும். கலைஞர்களுக்கு, முயற்சிகளால் பெருமை சேரும். தூக்கமின்மை, மன அழுத்தம் உபாதை தரலாம். பயணத்தில் கவனச்சிதறல் கூடாது. கணபதி வழிபாடு கஷ்டங்கள் போக்கும்!

கும்பம்:

தைரியமும் தன்னம்பிக்கையும் அதிகரிக்கும் காலகட்டம். அலுவலகத்தில் மேலதிகாரிகள் ஆதரவு கிட்டும். எதிர்பாராத இடமாற்றம் ஏற்படலாம். இல்லத்தில் இனியவை இடம்பிடிக்கும். பணவரவு சீராகும். தம்பதியரிடையே சுணக்கம் விலகும். வாரிசுகளால் பெருமை சேரும். வீடு, வாகன யோகம் உண்டு. செய்யும் தொழிலில் லாபம் அதிகரிக்கும். அரசு, அரசியலில் பதவி, பொறுப்பு மாற்றம் ஏற்படலாம். கலைஞர்களின் முன்னேற்றத் தடைகள் நீங்கும். வயிறு, நரம்பு உபாதை வரலாம். இரவுப் பயணத்தை இயன்றவரை தவிருங்கள். அனுமன் வழிபாடு ஆனந்தம் தரும்!

மீனம்:

முடங்காத முயற்சிகள் பலன் தரும் காலகட்டம். பணியிடத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். புலம்பலைத் தவிர்த்தால் உங்கள் பெருமை உயரும். வீட்டில் விசேஷங்கள் வரத்தொடங்கும். தரல், பெறலில் அலட்சியம் கூடாது. வழக்குகளில் விட்டுக்கொடுங்கள். உறவுகளிடம் வீண் ரோஷம் வேண்டாம். தொழில்சார்ந்த ஒப்பந்தங்களில் கையெழுத்திடும் சமயங்களில் கவன மாக இருங்கள். அரசு, அரசியலில் வாக்குறுதிகளில் அவசரம் வேண்டாம். கலைஞர்கள் சோம்பலை அறவே விரட்டுங்கள். கண்கள், கழுத்து, சுளுக்கு உபாதை வரலாம். வாகனப் பழுதில் அலட்சியம் கூடாது. வாராஹி வழிபாடு வளமை சேர்க்கும்!