K U M U D A M   N E W S

ஆன்மிகம்

ஆடி மாத சங்கடஹர சதுர்த்தி; நினைத்த காரியங்களை நிறைவேற்றும் விநாயகப் பெருமான்

Aadi Month Sangadahara Chaturthi 2024 Benefits in Tamil : விநாயகருக்கு மிகவும் விருப்பமான சங்கடஹர சதுர்த்தி அன்று மேற்கொள்ள வேண்டிய விரதங்கள், பூஜைகள் மற்றும் அதனால் கிடைக்கப்பெறும் நன்மைகள் குறித்து கீழே காணலாம்.

சிவன் சக்தியோடு ஐக்கியமான ஆடி மாதம்.. வேப்ப மரம் பூமியில் உருவான புராண கதை தெரியுமா?

மதுரை: தமிழ் மாதங்களில் நான்காவது மாதம் ஆடி மாதம். சூரியன் நான்காவது ராசியான கடக ராசியில் பயணம் செய்யும் மாதம். இந்த மாதத்தில் அம்மன் கோவில்களில் பண்டிகைகள் களைகட்டும். ஆடி அமாவாசை தொடங்கி ஆடி பூரம், ஆடி பெருக்கு, ஆடி தபசு என ஆடி மாதத்தில் திருவிழாக்கள் களை கட்டும். அம்மன் கோவில்களில் வேப்ப இலைகள் தோராணங்கள் நிறைந்திருக்கும்.ஆடி என்பது எப்படி வந்தது என்று புராண கதை ஒன்று சொல்கிறார்கள்.

சனி பெயர்ச்சி பலன் 2024: ஏழரை சனி.. அஷ்டம சனியா? டோண்ட் ஒர்ரி... தோஷம் நீங்க பரிகாரம் இருக்கு!

சென்னை: சனி பகவான் கும்ப ராசியில் தற்போது வக்ர நிலையில் பயணம் செய்கிறார். நவம்பர் மாதம் முதல் நேர் கதியில் பயணம் செய்வார். சனிபகவானின் சஞ்சாரம் சில ராசிக்காரர்களுக்கு சந்தோஷத்தை தரப்போகிறது சிலருக்கு சங்கடத்தை தரப்போகிறது. சனி வக்ர பெயர்ச்சியால் யாரெல்லாம் பரிகாரம் செய்ய வேண்டும் என்று பார்க்கலாம்.

ஆடி அமாவாசை.. ஆடி பூரம்.. குரு பூர்ணிமா.. ஆடி மாதத்தில் என்னென்ன விஷேசங்கள்

மதுரை: பெண்மை எனும் சக்திக்கு பெருமை சேர்க்கும் மாதம் ஆடி மாதம். ஆடி மாதம் சூறை காற்றோடு அம்மனின் அருட்காற்று அரவணைக்கும் மாதம்தான் ஆடி மாதம். ஆடி முதல் நாள் தொடங்கி கடைசி நாள் வரையும் கொண்டாட்டங்களுக்குக் குறைவிருக்காது. தமிழ் மாதங்களில் நான்காவது மாதம் ஆடி மாதம். இந்த மாதத்தில் ஆடி அமாவாசை தொடங்கி ஆடி பூரம், ஆடி பெருக்கு, ஆடி தபசு என ஆடி மாதத்தில் திருவிழாக்கள் களை கட்டும். ஆடி மாதம் ஜூலை 17ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 16 வரை உள்ளது.

குபேர பகவானுக்கு திருக்கல்யாணம்..தரிசனம் செய்ய குடும்பத்தோடு ரத்தினமங்கலம் வாங்க

ரத்தினமங்கலம் குபேரபகவானுக்கு நாளை 30ஆம் தேதி ஞாயிறுக்கிழமை திருக்கல்யாணம் நடைபெற உள்ளது. ஸ்ரீலட்சுமி குபேர தியான மண்டபத்தில் திருக்கல்யாணம் நடத்த, கோயிலை நிர்வகிக்கும் ராஜலட்சுமி குபேரா டிரஸ்ட் மூலம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தஞ்சை பெரியகோவிலில் வாராஹி அம்மனுக்கு ஆஷாட நவராத்திரி.. எந்த நாட்களில் என்ன அலங்காரம்

தஞ்சை பெரியகோவிலில் வாராஹிஅம்மன் தனி சன்னதியில் எழுந்தருளி அருள்பாலித்து வருகிறார். ஆண்டுதோறும் வாராஹி அம்மனுக்கு 11 நாட்கள் ஆஷாட நவராத்திரி விழா கொண்டாடப்படும். அதன்படி இந்த ஆண்டிற்கான ஆஷாட நவராத்திரி விழா வரும் ஜூலை 5ஆம் தேதி காலை கணபதி ஹோமத்துடன் தொடங்கி ஜூலை 15ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

சனி வக்ர பெயர்ச்சி.. கவனமாக இருக்க வேண்டிய ராசிக்காரர்கள்.. பரிகாரம் என்ன?

நவ கிரகங்களில் சனி பகவான் ஒரு ராசியில் இரண்டரை ஆண்டு காலம் பயணம் செய்வார். ஆண்டுக்கு ஒருமுறை 4 மாத காலம் வக்ரமடைவார். கும்ப ராசியில் சஞ்சரிக்க கூடிய சனி பகவான் ஜூன் 29 ஆம் தேதி இரவு மணிக்கு வக்ர கதியில் பயணம் செய்ய உள்ளார். சனி வக்ர பெயர்ச்சியால் மேஷம் முதல் மீனம் வரை எந்தெந்த ராசியினர் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என்பதே தெரிந்து கொள்வோம்.

குரு பெயர்ச்சி பலன் 2024: உதயமான குரு.. ரோகிணியில் பயணம்.. கோடீஸ்வர யோகம் யாருக்கு?

சென்னை: குரு பகவான் ரிஷப ராசியில் உதயமாகியுள்ளார். சூரியனின் கார்த்திகை நட்சத்திரத்தில் பயணம் செய்த குருபகவான் இந்த மாதம் முதல் சந்திரனின் ரோகிணி நட்சத்திரத்தில் பயணம் செய்கிறார். ஆகஸ்ட் மாதம் வரைக்கும் சில ராசிக்காரர்கள் வாழ்க்கையில் அற்புதமான மாற்றங்கள் ஏற்படப்போகிறது. மேஷம் முதல் மீனம் வரை எந்த ராசிக்காரர்களுக்கு திடீர் அதிர்ஷ்டம் கிடைக்கப்போகிறது என்று பார்க்கலாம்.