400 வருட பாரம்பரிய சர்க்கரை காவடி.. முருகனை தரிசிக்க பாதயாத்திரை செல்லும் பக்தர்கள்
400 வருடம் பாரம்பரியமிக்க சர்க்கரை காவடிகள் நத்தம் வந்தடைந்த நிலையில் காவடி சிந்து பாடப்பட்டு பழனியை நோக்கி புறப்பட்டது.
400 வருடம் பாரம்பரியமிக்க சர்க்கரை காவடிகள் நத்தம் வந்தடைந்த நிலையில் காவடி சிந்து பாடப்பட்டு பழனியை நோக்கி புறப்பட்டது.
திருப்பரங்குன்றத்தில் தைப்பூச தெப்பத் திருவிழாவினை முன்னிட்டு நடைபெற்ற வைரத்தேரோட்டத்தில் பக்தர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
பழனியில் தைப்பூச திருவிழா கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கிய நிலையில் முருகன் கோயிலில் திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
தங்க சூரிய பிரபை வாகனத்தில் எழுந்தருளி மாடவீதிகளில் உலா வந்த வரதராஜ பெருமாளை வழிநெடுகிலும் ஏராளமான பக்தர்கள் கற்பூர ஆரத்தி காண்பித்து சாமி தரிசனம் செய்தனர்.
திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் தெப்ப திருவிழா இன்று நூற்றுக்கணக்கான பக்தர்கள் முன்னிலையில் கொடியேற்றத்துடன் தொடங்கியது.
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ராஜகோபுரத்தில் இருந்த 9 கும்ப கலசங்களும் புதுப்பிக்கப்பட்டு சிறப்பு பூஜைகளுடன் மீண்டும் கோபுரத்தில் வைக்கப்பட்டது.
திருப்பதி ஏழுமலையான் கோயிலில், வரும் பிப்ரவரி 4 ஆம் தேதி ரத சப்தமி முதல் பக்தர்களுக்கு இலவச சாப்பாட்டுடன், பூண்டு, வெங்காயம் இல்லாத மசால் வடை வழங்கப்படும் என தேவஸ்தானம் சார்பில் அறிவிப்பு வெளியாகியுள்ளது.
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தொடர் விடுமுறை விடப்பட்டுள்ளதாலும், ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதாலும் அதிகாலை முதல் பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் 4 மணி நேரத்துக்கு மேலாக காத்திருந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
ஆங்கில புத்தாண்டையொட்டி மதுரை மீனாட்சியம்மன் கோவில் மற்றும் திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் அதிகாலை முதல் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு அண்ணாமலையார் திருக்கோயிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் 3 மணி நேரத்திற்கு மேலாக காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.
திருத்தணி சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் ஒரு கோடியே 25 லட்சம் ரூபாய் உண்டியல் காணிக்கை பிரிந்துள்ளதாக கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
கேரள மாநிலம் சபரிமலையில் ஒரே நாளில் லட்சகணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் மேற்கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
பர்வத மலையேறும் பக்தர்களுக்கு புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாக புதுப்பாளையம் வனசரகம் அறிவித்துள்ளது.
கார்த்திகை மாத பிரதோஷம் மற்றும் அமாவாசையை முன்னிட்டு சதுரகிரி மலையேறி சுவாமி தரிசனம் செய்ய பக்தர்களுக்கு அனுமதி வழங்கியது குறித்து சரியான தகவல் வெளியிடவில்லை என பக்தர்கள் குற்றச்சாட்டு வைத்துள்ளனர்.
சிங்கப்பெருமாள் கோவிலில் அருள்மிகு பாடலாத்ரி நரசிம்ம பெருமாள் கோயிலில் மகா கும்பாபிஷேகம் அதிவிமரிசையாக நடைபெற்றது.
கார்த்திகை மாதத்தை முன்னிட்டு காஞ்சிபுரம் கச்சபேஸ்வரர் திருக்கோயிலில் இரண்டாம் வார ஞாயிற்றுக்கிழமையான இன்று (நவ. 24), கடைஞாயிறு விழா மிகக் கோலாகலமாக நடைபெற்று வருகிறது.
ஐயப்ப பக்தர்களின் வசதிக்காக போக்குவரத்து சேவை ஏற்படுத்தப்பட்டுள்ளது.
நவகிரகங்களின் தலைவனான சூரிய பகவான் விருச்சிக ராசியில் நவம்பர் 16 முதல் டிச 15 வரை சஞ்சரிக்க உள்ளார். இந்த கார்த்திகை மாதத்தில் உருவாகக்கூடிய யோக பலன்கள் 12 ராசி மீது தாக்கத்தை ஏற்படுத்தும். அதனால் தொழில், ஆரோக்கியம், உறவுகள் மீது எப்படி தாக்கம் இருக்கும். இதுகுறித்து விளக்குகிறார் பிரபல ஜோதிடர் ஷெல்வி.
மதுரை மாவட்டம் மேலூர் அருகே பிரசித்திப் பெற்ற அழகர்கோவில் ஶ்ரீகள்ளழகர் திருக்கோவியில் தைலக்காப்பு உற்சவம் மிகக் கோலாகலமாக நடைபெற்றது.
கரூர் வெண்ணமலை அருள்மிகு ஸ்ரீ பாலசுப்பிரமணிய சுவாமி ஆலயத்தில் ஐப்பசி மாத திருக்கல்யாண நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.
பழமுதிர் சோலைமலை முருகன் கோயிலில் சூரனை வதம் செய்யும் நிகழ்வை காண திரளான பக்தர்கள் கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் சுவாமி தரிசனம் செய்தனர்.
திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி கோயிலில் வேல் வாங்கும் விழா பக்தர்களின் அரோகரா கோஷம் முழங்க வெகு விமரிசையாக நடைபெற்றது.
பழமுதிர் சோலை முருகன் கோயிலில் கந்த சஷ்டி விழா மிகக் கோலாகலமாக நடைபெற்று வருகிறது.
திருவண்ணாமலை அருள்மிகு அருணாச்சலேஸ்வரர் திருக்கோயிலில் வருகிற 8-ஆம் தேதி நடைபெறவுள்ள மகாரதத்தின் வெள்ளோட்டத்தை முன்னிட்டு தேருக்கு வர்ணம் பூசம் பணி தீவிரமடைந்துள்ளது.
திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் கந்த சஷ்டி விழா பக்தர்களின் அரோகரா கோஷம் விண்ணை பிளக்க காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் கோலாகலமாகத் தொடங்கியது.