மத்திய கிழக்கில் போர் தொடங்கி நான்காவது வாரத்தை எட்டியுள்ள நிலையில், அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே பேச்சுவார்த்தை தொடங்கியுள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது சமூக வலைதளப் பக்கத்தில், ஈரானுடன் கடந்த இரண்டு நாட்களாக மிகவும் ஆக்கப்பூர்வமான மற்றும் விரிவான ஆலோசனைகள் நடைபெற்று வருவதாகக் குறிப்பிட்டுள்ளார். மத்திய கிழக்கில் நிலவும் மோதல்களுக்கு ஒரு நிரந்தரத் தீர்வைக் காணும் நோக்கில் இந்தப் பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்படுவதாகவும், இந்த வாரம் முழுவதும் ஆலோசனைகள் தொடரும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
திட்டமிட்ட தாக்குதல்கள் ஒத்திவைப்பு
தற்போது நடைபெற்று வரும் பேச்சுவார்த்தைகளின் சுமுகமான போக்கைக் கருத்தில் கொண்டு, ஈரானின் மின் நிலையங்கள் மற்றும் எரிசக்தி உள்கட்டமைப்புகள் மீது நடத்தத் திட்டமிடப்பட்டிருந்த ராணுவத் தாக்குதல்களை ஐந்து நாட்களுக்குத் தள்ளிவைக்க அதிபர் டிரம்ப் உத்தரவிட்டுள்ளார். இந்தத் தற்காலிகத் தாக்குதல் நிறுத்தம் என்பது தற்போது நடைபெற்று வரும் பேச்சுவார்த்தைகளின் வெற்றியைப் பொறுத்தே அமையும் என்றும் அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.
தொடரும் இழுபறி
அமெரிக்க தரப்பிலிருந்து இந்த அறிவிப்பு வெளியாகியுள்ள போதிலும், ஈரான் தரப்பிலிருந்து இதுவரை எவ்வித அதிகாரப்பூர்வ உறுதிப்படுத்தலும் வழங்கப்படவில்லை. இந்தப் பேச்சுவார்த்தையில் ஈரான் எந்த நிபந்தனைகளை ஏற்றுக்கொண்டது என்பது குறித்தும் இதுவரை தகவல்கள் இல்லை. எனவே, பேச்சுவார்த்தையில் எட்டப்படும் முடிவுகளே அடுத்தகட்டப் போர்ச் சூழலைத் தீர்மானிக்கும் எனத் தெரிகிறது.

LIVE 24 X 7