உலகம்

வெனிசுலா அதிபர் நிகோலஸ் மதுரோ சிறைபிடிப்பு: அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவிப்பு!

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், வெனிசுலா நாட்டின் அதிபர் நிகோலஸ் மதுரோவைக் கைது செய்துள்ளதாக அறிவித்துள்ளார்.

வெனிசுலா அதிபர் நிகோலஸ் மதுரோ சிறைபிடிப்பு: அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவிப்பு!
Venezuelan president Maduro captured after US strikes on country
வெனிசுலா தலைநகர் உட்பட அந்நாட்டின் முக்கிய நகரங்களில் அமெரிக்கப் படைகள் வான்வழித் தாக்குதல்களை நடத்தியதைத் தொடர்ந்து, அதிபர் நிகோலஸ் மதுரோ மற்றும் அவரது மனைவியை அமெரிக்கப் படைகள் கைது செய்து, அவர்களை நாட்டிலிருந்து வெளியேற்றியுள்ளதாக டிரம்ப் தனது ட்ரூத் சோசியல் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளார்.

போதைப்பொருள் கடத்தல்

வெனிசுலாவில் இருந்து போதைப்பொருள் கடத்தப்படுவதாக அதிபர் டிரம்ப் தொடர்ந்து குற்றஞ்சாட்டி வந்த நிலையில், வெனிசுவேலா மீது அமெரிக்கப் படை தாக்குதல் நடத்தியது. இந்தச் சூழலில், வெனிசுலாவில் உள்ள அமெரிக்கர்கள் பாதுகாப்பாக இருக்கும்படி அமெரிக்க வெளியுறவு அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.

டிரம்ப் எச்சரிக்கை

போதைப்பொருள் பயங்கரவாதத்தை எதிர்ப்பதாகக் கூறி, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கடந்த சில மாதங்களாகவே வெனிசுலா அரசுக்கு எதிராக இராணுவ நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தார். மேலும், போதைப்பொருள் கடத்தல் மற்றும் பயங்கரவாத அமைப்புகளுடன் வெனிசுலா இணைந்து செயல்படுவதாகக் குற்றஞ்சாட்டிய டிரம்ப், கிறிஸ்துமஸ் தினத்தன்றே, "மதுரோ எல்லை மீறினால், அதுவே அவரது கடைசி விளையாட்டாக இருக்கும்" என்று கடுமையான எச்சரிக்கையும் விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.