K U M U D A M   N E W S

உலகம்

ட்ரம்ப் தலையீட்டால் இஸ்ரேல் - ஈரான் போர் முடிவுக்கு வருமா?

அமெரிக்காவுடனான வர்த்தகத்தைப் பயன்படுத்தி, இந்தியா - பாகிஸ்தான் இடையே அமைதியை ஏற்படுத்தியது போல், இஸ்ரேல் - ஈரான் இடையேயும் அமைதியை ஏற்படுத்துவேன். என்னுடைய தலையீட்டால் இஸ்ரேல்-ஈரான் போர் முடிவுக்கு வரும். பதற்றத்தை நிறுத்த பேச்சுவார்த்தைகள் நடத்து வருகிறது என ட்ரூத் சோஷியல் சமூக வலைதள பக்கத்தில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் பதிவிட்டுள்ளார்.

அமெரிக்க தூதரகம் அருகே ஈரான் ஏவுகணை தாக்குதல் – தூதரகம் தற்காலிகமாக மூடல்

இஸ்ரேலின் டெல் அவீவ் நகரில் உள்ள அமெரிக்க தூதரகம் அருகே ஈரான் ஏவுகணை தாக்குதல் நடத்திய தாக்குதலில் தூதரகம் சேதமடைந்துள்ளதால் தற்காலிகமாக மூடப்படுவதாகவும், யாருக்கும் காயம் ஏற்படவில்லை எனவும் இஸ்ரேலுக்கான அமெரிக்க தூதர் மைக் ஹக்கபி தெரிவித்துள்ளார்.

இஸ்ரேல் – ஈரான் பகை என்ன? யார் பலம் வாய்ந்தவர்கள்? வெல்லப்போவது யார்?

ஈரான் இஸ்ரேல் இடையேயான மோதல் மத்திய கிழக்கில் போர் பதற்றத்தை அதிகரித்துள்ள நிலையில், இந்த இரு நாடுகளுக்கும் இடையேயான பகை என்ன? இவர்களில் யார் பலம் மிக்கவர்கள்? போர் மூண்டால் வெல்லப்போவது யார்?

உலகளவில் அதிகரித்த இஸ்லாமியர்கள்..! குறைந்த கிறிஸ்துவர்கள்..! இந்துக்கள் எவ்வளவு தெரியுமா? வெளியான சர்வே ரிப்போர்ட்..!

உலக மக்கள் தொகையில் அதிகளவில் இருந்த கிறிஸ்தவர்கள் எண்ணிக்கையானது பெரிய அளவில் வீழ்ச்சி அடைந்துள்ளதாகவும், இஸ்லாமியர்களின் எண்ணிக்கையானது முன்பைவிட அதிகரித்துள்ளதாகவும் சர்வே ரிப்போர்ட் ஒன்று வெளியாகியுள்ளது.

வெடிகுண்டு மிரட்டல்.. அவசரமாக தரையிறக்கப்பட்ட ஏர் இந்தியா விமானம்!

ஏர் இந்தியா விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட நிலையில், புக்கெட்டில் அவசர தரையிறக்கப்பட்டு பயணிகள் பாதுகாப்பாக மீட்கப்பட்டு சோதனை நடைபெற்றது. சோதனைக்கு பிறகு வெடிகுண்டு மிரட்டல் புரளி என்று தகவல் வெளியானது.

100 டிரோன்கள் மூலம் ஈரான் தாக்குதல்: 'ரைசிங் லயன்' ஆபரேஷனுக்கு பதிலடி!

இஸ்ரேல் நடத்திய "ஆப்ரேஷன் ரைசிங் லயன்" என்ற ரகசிய தாக்குதலுக்கு பதிலடியாக, ஈரான் தனது பதில்தாக்குதலை தொடங்கியுள்ளது. இதற்காக, ஈரான் சுமார் 100 ட்ரோன்களை பயன்படுத்தி இஸ்ரேல் மீது நேரடி தாக்குதல் நடத்தியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பெண் செய்தியாளர் மீது துப்பாக்கி சூடு.. என்ன நடக்கிறது லாஸ் ஏஞ்சல்ஸில்?

சட்டவிரோதமாக குடியேறியவர்களை குறி வைத்து அதிபர் டிரம்ப் மேற்கொள்ளும் நடவடிக்கைகளை கண்டித்து நடைபெறும் போராட்டத்தினை செய்தி சேகரிக்க சென்ற பெண் நிருபர் மீது ரப்பர் தோட்டாவினால் சூப்பாக்கி சுடு நடத்தப்பட்டுள்ளது. தேசிய இராணுவத்தை லாஸ் ஏஞ்சல்ஸிலிருந்து வெளியேற்ற கலிபோர்னியா மாகாணத்தின் ஆளுநர் கவின் நியூசம் டிரம்புக்கு வேண்டுக்கோள் விடுத்துள்ளார்.

17 வயது டிக்டாக் பிரபலம் சுட்டுக்கொலை: அதிர்ச்சியில் ரசிகர்கள்

17 வயதே ஆன பாகிஸ்தானை சேர்ந்த டிக்டாக் பிரபலம் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

வங்கதேச கரன்சியில் அதிரடி மாற்றம்: முஜிபுர் ரகுமானுக்குப் பதிலாக கோயில்கள்!

முஜிபுர் ரகுமான் தொடர்பான பாரம்பரிய அடையாளங்களை சிதைக்கும் வகையில் முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசாங்கம் செயல்பட்டு வருவதாக குற்றச்சாட்டு எழுந்து வரும் நிலையில், அதற்கு வலுசேர்க்கும் வகையில் வங்காளதேச கரன்சியில் இடம்பெற்றிருந்த முஜிபுர் ரகுமானின் உருவப்படங்கள் நீக்கப்பட்டுள்ளன.

உளவாளி ஜோதிக்கும் முதல்வர் மருமகனுக்கும் தொடர்பா? பாஜக வைத்த பகீர் குற்றச்சாட்டு..! உண்மை என்ன?

பாகிஸ்தானுக்கு உளவு பார்த்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள யூடியூபர் ஜோதி மல்ஹோத்ராவுக்கும், கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் மருமகனுக்கும் தொடர்பு இருப்பதாக பாஜக வைத்துள்ள குற்றச்சாட்டு கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பெருவெள்ளத்தில் மூழ்கிய நைஜீரிய நகரம்... 88 பேர் உயிரிழப்பு!

நைஜீரியாவில் கடும் மழையால் ஏற்பட்ட பெருவெள்ளத்தில் 88 பேர் நாடு முழுவதும் உயிரிழந்துள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் நூற்றுக்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளதாகவும், மற்றும் ஆயிரக்கணக்கானோர் தங்கள் வீடுகளை இழந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

31-வது முறையாக எவரெஸ்ட் சிகரம்.. புதிய சாதனை படைத்தார் காமி ரீட்டா

நேபாளத்தைச் சேர்ந்த புகழ்பெற்ற மலையேறும் வழிகாட்டியான காமி ரீட்டா ஷெர்பா, எவரெஸ்ட் சிகரத்தை 31-வது முறையாக வெற்றிகரமாக ஏறி, தனது சொந்த சாதனையை தானே முறியடித்துள்ளார். இந்த சாதனை மூலம் உலக மலையேற்ற வரலாற்றில் ஒரு புதிய மைல்கல்லை பதிவு செய்துள்ளார்.

காஸாவின் குழந்தைகள் கூட எதிரிகள்தான் - இஸ்ரேல் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பேச்சு

காஸாவின் குழந்தைகள்கூட எதிரிகள்தான், காஸாவில் ஒரு குழந்தை கூட இருக்கக்கூடாது என்று இஸ்ரேல் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மோஷே ஃபெயிக்லின் சர்ச்சைக்குரிய விதத்தில் பேசியிருப்பது, உலக நாடுகளுக்கிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவில் தயாரான ஐஃபோன்களுக்கு 25% வரி – டிரம்ப் அரசின் அதிரடி முடிவு!

இந்தியாவில் மட்டுமல்ல, அமெரிக்காவுக்கு வெளியே எங்கு ஐஃபோன்கள் தயாரிக்கப்பட்டாலும் 25 சதவீத வரி விதிக்கப்படும் எனவும் ஆப்பிள் நிறுவனத்துக்கு டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ஹார்வர்ட்டிற்கு எதிராக டிரம்ப் நடவடிக்கை.. வெளிநாட்டு மாணவர்கள் சேர்ந்து படிக்கத் தடை!

உலகின் முன்னணி கல்வி நிறுவனமான ஹார்வர்ட் பல்கலைகழகத்தில் வெளிநாட்டு மாணவர்கள் சேர அமெரிக்க அதிபர் ட்ரம்ப் உத்தரவிட்டுள்ளார். டிரம்ப் அரசின் முடிவு சட்டவிரோதமானது என ஹார்வர்டு பல்கலைக்கழகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

திருடப்போன இடத்தில் விபரீதம்.. உடலை வெட்டி சமைத்த மாஸ்டர் செஃப்

பிரான்ஸில் 69 வயதான பீட்சா சமையல்காரர் திருட சென்ற இடத்தில், ஒருவரை கொலை செய்த நிலையில் அவரது உடல் பாகங்களை வெட்டி சமைத்ததாக விசாரணையில் ஒப்புக்கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Heart lamp: புக்கர் பரிசை வென்ற 2-வது கன்னட எழுத்தாளர்.. குவியும் பாராட்டு

நடப்பாண்டு புக்கர் பரிசுக்கான இறுதிப் பரிந்துரை பட்டியலில் 6 புத்தகங்கள் இடம் பிடித்த நிலையில், பானு முஷ்டாக் (Banu Mushtaq) கன்னட மொழியில் எழுதி, அதனை தீபா பாஸ்தி ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த ஹார்ட் லாம்ப் (Heartlamp) என்கிற புத்தகம் புக்கர் பரிசினை தட்டிச் சென்றுள்ளது.

இலங்கை போர் நினைவுநாள்: தமிழர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த அதிபரின் அறிவிப்பு

இலங்கையில் போரை முடிவுக்கு கொண்டு வந்த இறுதிகட்ட போரின் நினைவு நாளையொட்டி, 12,400 ராணுவ அதிகாரிகள் மற்றும் வீரர்களுக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.

இந்தியா - மாலத்தீவு இடையே ஒப்பந்தம் கையெழுத்து!

இந்தியா - மாலத்தீவு நாடுகளுக்கு இடையேயான உறவில் கடந்த ஆண்டு பிரச்னை ஏற்பட்ட நிலையில், இருநாடுகளும் பேச்சுவார்த்தையை ஈடுபட்டதையடுத்து இருநாட்டு உறவும் மீண்டும் சுமூக நிலை திரும்பியதால், இந்தியா - மாலத்தீவு இடையே 55 கோடி ரூபாய் மதிப்பிலான13 திட்டங்களை மேற்கொள்வதற்கான ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.

ஜோ பைடனுக்கு புற்றுநோய் உறுதி .. வெளியான மருத்துவ அறிக்கை!

முன்னாள் அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு (வயது 82) புரோஸ்டேட் புற்றுநோய் இருப்பது சமீபத்திய மருத்துவ பரிசோதனையில் கண்டறியப்பட்டுள்ளது. அவரது வழக்கமான உடல் பரிசோதனையின் போது, அவரது உடலில் கண்டறியப்பட்ட ஒரு கட்டியை சோதனை செய்தபோது, இது புரோஸ்டேட் புற்றுநோய் என உறுதிப்படுத்தப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

கத்தோலிக்க திருச்சபையின் 267 தலைவராக 14ஆம் லியோ பதவியேற்பு!

கத்தோலிக்க திருச்சபையின் 267-வது தலைவராக தேர்வு செய்யப்பட்ட 14 ஆம் லியோ புதிய போப்பாக வத்திகானில் இன்று (மே 19 ) பதவியேற்றார். வாடிகனில் நடைபெற்ற விழாவில் உலக நாடுகளின் தலைவர்கள் பங்கேற்று சிறப்பித்தனர்.

Food Crises: பசியில் வாடிய 300 மில்லியன் மக்கள்.. வெளியானது அதிர்ச்சி ரிப்போர்ட்!

உணவு நெருக்கடிகள் குறித்த உலகளாவிய அறிக்கை-2025 வெள்ளிக்கிழமை (மே 16,2025) வெளியிடப்பட்டுள்ளது. ஐ.நா.பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ் இந்த அறிக்கையை ’மனிதக்குலத்தின் தோல்வி’ என குறிப்பிட்டுள்ளார். அதற்கான காரணம் என்ன என்பதை ஆராய்வோம்.

எழுத்தாளர் சல்மான் ருஷ்டியை கத்தியால் குத்தியவருக்கு 25 ஆண்டுகள் சிறை!

கடந்த 2022 ஆம் ஆண்டு புகழ்பெற்ற எழுத்தாளர் சல்மான் ருஷ்டியை ஒருவர் விழா மேடையில் கத்தியால் குத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், தாக்குதலில் முயன்ற ஹாதி மாதாருக்கு 25 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவை தொந்தரவு செய்யும் டிரம்ப்... ஆப்பிள் CEO-விடம் டிரம்ப் பேசியது என்ன?

கத்தார் தலைநகர் டோகாவில் நடந்த ஒரு வணிக நிகழ்வில் பேசிய அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஆப்பிள் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி டிம் குக் உடனான உரையாடலின் போது, இந்தியாவில் ஆப்பிள் நிறுவன உற்பத்தியை விரிவுபடுத்த வேண்டாம் என்று கோரியதாக தெரிவித்துள்ளார். இது இந்தியாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது‌.

பகவத் கீதையுடன் அமைச்சராக பொறுப்பேற்பு- யார் இந்த அனிதா ஆனந்த்?

Anita Anand: கனடா- அமெரிக்கா இடையே ஒரு பதற்றமான சூழ்நிலை நிலவி வரும் நிலையில், இந்திய வம்சாவளியினைச் சேர்ந்த அனிதா ஆனந்த் கனடாவின் புதிய வெளியுறவுத்துறை அமைச்சராக பதவியேற்றுள்ளார்.