உலகம்

சீனாவுக்கு எதிராக டிரம்ப் அதிரடி.. நவம்பர் 1 முதல் கூடுதலாக 100% வரி விதிப்பு அறிவிப்பு!

நவம்பர் 1-ஆம் தேதி முதல் சீனாவுக்குக் கூடுதலாக 100 சதவீதம் வரி விதிக்கப்படும் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார்.

சீனாவுக்கு எதிராக டிரம்ப் அதிரடி.. நவம்பர் 1 முதல் கூடுதலாக 100% வரி விதிப்பு அறிவிப்பு!
Announcement of additional 100% tariffs from November 1st
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் சீனாவுக்கு எதிராக மீண்டும் வர்த்தகப் போரைத் தீவிரப்படுத்தும் வகையில் அதிரடி நடவடிக்கைகளை அறிவித்துள்ளார். நவம்பர் 1-ஆம் தேதி முதல் சீனாவுக்குக் கூடுதலாக 100 சதவீதம் வரி விதிக்கப்படும் என்று அவர் அறிவித்துள்ளார். ஏற்கனவே 30 சதவீத வரி விதிக்கப்படும் நிலையில், நவம்பர் 1ம் தேதி முதல் சீனாவுக்கு வரி 130 சதவீதமாக உயருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இது குறித்து அதிபர் டிரம்ப் தனது ட்ரூத் சோசியல் சமூக வலைதள பதிவில் வெளியிட்டுள்ள விவரம்:

சீனாவின் "விரோதமான நிலைப்பாடு"

"நவம்பர் 1-ஆம் தேதி முதல், தாங்கள் தயாரிக்கும் ஒவ்வொரு பொருளின் மீதும் பெரிய அளவிலான ஏற்றுமதி கட்டுப்பாடுகளை விதிக்கப் போவதாக, உலகிற்கு மிகவும் விரோதமான கடிதத்தை அனுப்புவதன் மூலம் சீனா வர்த்தகத்தில் அசாதாரணமான ஆக்கிரமிப்பு நிலைப்பாட்டை எடுத்துள்ளது. இது விதிவிலக்கு இல்லாமல் அனைத்து நாடுகளையும் பாதிக்கிறது. அதிக வரி விதித்தால் அமெரிக்காவில் மின்சாதனங்களின் தயாரிப்பு பாதிக்கும் அபாயம் இருக்கிறது.

இந்த திட்டம் பல ஆண்டுகளுக்கு முன் அவர்களால் வகுக்கப்பட்டு உள்ளன. இது சர்வதேச வர்த்தகத்தில் முற்றிலும் கேள்விப்படாதது, பிற நாடுகளுடன் கையாள்வதில் ஒரு தார்மீக அவமானம்.

அதிரடி வரி உயர்வு அறிவிப்பு

சீனா இந்த முன்னோடியில்லாத நிலைப்பாட்டை எடுத்துள்ளது. நவம்பர் 1-ஆம் தேதி முதல், சீனாவுக்கு மேலும் 100 சதவீத வரி விதிக்கப்படும். அனைத்து முக்கியமான மென்பொருட்களிலும் ஏற்றுமதி கட்டுப்பாடுகளை விதிப்போம். வர்த்தகத்தில் நியாயமற்ற நடைமுறைகளை சீனா கையாள்கிறது" என்று டிரம்ப் குறிப்பிட்டுள்ளார்.