2025-ஆம் ஆண்டுக்கான இலக்கியத்திற்கான நோபல் பரிசு, ஹங்கேரி நாட்டைச் சேர்ந்த புகழ்பெற்ற எழுத்தாளர் லாஸ்லோ கிராஸ்னாஹோர்காய்க்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
நோபல் பரிசுக் குழு இந்த அறிவிப்பை இன்று (அக். 9) வெளியிட்டது. பயங்கரவாதத்துக்கு மத்தியிலும் கலையின் சக்தியை உறுதிப்படுத்தும் எழுத்தாளரின் தொலைநோக்குப் பார்வை கொண்ட பணிக்காக இந்தப் பரிசு வழங்கப்படுவதாக நோபல் பரிசுக் குழு தெரிவித்துள்ளது.
லாஸ்லோவின் பின்னணி
லாஸ்லோ கிராஸ்னாஹோர்காய் 1954ஆம் ஆண்டு ஹங்கேரியின் தென்கிழக்கு பகுதியில் உள்ள கியூலா என்ற சிறிய நகரத்தில் பிறந்தார். இவரது முதல் நாவல் 'சாட்டன்டாங்கோ' (Satantango) 1985ஆம் ஆண்டு வெளியானது.
இவர் எழுதிய 'ஹெர்ஷ்ட் 07769' (Herscht 07769) என்ற நாவல், சமூக அமைதியின்மையை மிகவும் துல்லியமாகச் சித்தரிப்பதால், இது ஒரு சிறந்த சமகால நாவலாகக் கருதப்படுகிறது. நோபல் பரிசுக் குழு அவரை "ஐரோப்பாவின் ஒரு சிறந்த எழுத்தாளர்" என்று பாராட்டியுள்ளது.
அடுத்த அறிவிப்புகள்
கடந்த அக்டோபர் 6-ஆம் தேதி முதல் நோபல் பரிசுகள் ஒவ்வொரு துறையாக அறிவிக்கப்பட்டு வருகின்றன. மருத்துவம், இயற்பியல், வேதியியல் ஆகிய துறைகளுக்கான பரிசுகள் அறிவிக்கப்பட்ட நிலையில், நாளை (அக். 10) அமைதிக்கான நோபல் பரிசும், நாளை மறுநாள் (அக். 11) பொருளாதாரத்துக்கான நோபல் பரிசும் அறிவிக்கப்படவுள்ளன.
நோபல் பரிசுகள் வழங்கும் நிகழ்ச்சி, ஆல்ஃபிரட் நோபல் மறைந்த நாளான டிசம்பர் 10ஆம் தேதி ஸ்வீடன் தலைநகர் ஸ்டாக்ஹோம் மற்றும் நார்வே தலைநகர் ஓஸ்லோவில் நடைபெறவுள்ளது.