உலகம்

'நீங்கள் அழகாக உள்ளீர்கள்'.. இத்தாலி பிரதமர் மெலோனி குறித்து டிரம்ப் கலகல பேச்சு!

எகிப்தில் நடைபெற்ற காசா அமைதி உச்சிமாநாட்டில், அமெரிக்க அதிபர் டிரம்ப், இத்தாலி பிரதமர் மெலோனியை அழகான பெண் என்று கூறியது விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது.

'நீங்கள் அழகாக உள்ளீர்கள்'.. இத்தாலி பிரதமர் மெலோனி குறித்து டிரம்ப் கலகல பேச்சு!
American President Trump And Italy Prime Minister Meloni
எகிப்தில் நடைபெற்ற காசா அமைதி உச்சிமாநாட்டில், அமெரிக்க அதிபர் டிரம்ப், இத்தாலி பிரதமர் மெலோனியை அழகான பெண் என்று கூறியது விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது.

அமெரிக்க அதிபர் டொனாலடு டிரம்ப் தலைமையில் எகிப்தின் ஷர்ம் அல்-ஷேக்கில் நடந்த வரலாற்றுச் சிறப்புமிக்க அமைதி உச்சிமாநாட்டில் காசா போர் நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்தானது.

இதில் அமெரிக்க அதிபர் டிரம்ப்புடன் எகிப்து அதிபர் அப்துல் ஃபத்தா அல்-சிசி, துருக்கி அதிபர் ரெசெப் தையிப் எர்டோகன் மற்றும் கத்தார் அமீர் ஷேக் தமீம் பின் ஹமாத் அல் தானி ஆகியோர் கையெழுத்திட்டனர்.

இந்த மாநாட்டில் அமெரிக்க அதிபர் டிரம்ப் உரையாற்றினார். அப்போது அவருக்கு பின்னால் இருந்த இத்தாலி பிரதமர் மெலோனியை பார்த்து, "நீங்கள் அழகாக உள்ளீர்கள் என்று சொன்னால் கோபப்பட மாட்டீர்கள்தானே? உண்மையில் நீங்கள் ஒரு அழகான பெண் என்று கூறினார். இதற்குப் பதிலளிக்கும் விதமாக மெலோனி புன்னகையை வெளிப்படுத்தினார்.

தொடர்ந்து பேசிய டிரம்ப், "பொதுவாக இதைச் சொல்லக்கூடாது. அமெரிக்காவில் ஒரு பெண்ணைப் பற்றி 'அழகானவர்' என்ற வார்த்தையைப் பயன்படுத்தினால், அது உங்கள் அரசியல் வாழ்க்கையின் முடிவாகிவிடும். நான் பேசியிருந்தாலும் என்னுடைய அரசியல் வாழ்க்கையே முடிந்திருக்கும் எனவும் டிரம்ப் கிண்டலாக தெரிவித்தார்.

மேலும், இத்தாலி பிரதமர் மொலோனியை பாராட்டிய டிரம்ப், "அவர் மிகவும் வெற்றிகரமான அரசியல்வாதி. அனைவரும் மதிக்கும் தலைவராக மொலோனி இருக்கிறார்" என்றார்.