பாகிஸ்தானின் தலைநகர் இஸ்லாமாபாத்தில் உள்ள நீதிமன்ற வளாகத்திற்கு வெளியே இன்று நடந்த சக்திவாய்ந்த குண்டுவெடிப்புச் சம்பவத்தில் 12 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 27 பேர் காயமடைந்தனர். இது ஒரு தற்கொலைத் தாக்குதல் என அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இஸ்லாமாபாத் நீதிமன்றத் தாக்குதல்
இந்தத் தற்கொலைத் தாக்குதல் நடத்திய நபர், முதலில் நீதிமன்றக் கட்டடத்திற்குள் நுழைய முயன்றுள்ளார். ஆனால், அவர் உள்ளே செல்லாமல் அங்கேயே 10 முதல் 15 நிமிடங்கள் காத்திருந்துள்ளார். பின்னர், திட்டமிட்டபடி நீதிமன்றத்திற்கு வெளியே நிறுத்தப்பட்டிருந்த ஒரு போலீஸ் வாகனத்தின் அருகில் தனது வெடிகுண்டை வெடிக்கச் செய்துள்ளார். இது ஒரு கார் குண்டுவெடிப்பு என அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். வழக்குகளுக்காக நூற்றுக்கணக்கானோர் கூடும் நேரத்தில் இந்தத் தாக்குதல் நடந்ததால், அதிக உயிரிழப்பு ஏற்பட்டது.
தாக்குதலின் பின்னணி
இந்தத் தாக்குதலுக்கு உடனடியாக எந்தக் குழுவும் பொறுப்பேற்கவில்லை. பாகிஸ்தானில் புத்துயிர் பெற்றுள்ள பாகிஸ்தான் தலிபான் குழுவின் தீவிரவாதத் தாக்குதல்கள் அங்குப் பாதுகாப்புப் பதற்றத்தை அதிகரித்து வருகின்றன. மேலும், சமீப மாதங்களாகப் பாகிஸ்தானுக்கும் ஆப்கானிஸ்தானுக்கும் இடையே எல்லைப் பதற்றமும் நீடித்து வரும் நிலையில், இந்தக் குண்டுவெடிப்புச் சம்பவம் பதற்றத்தை மேலும் அதிகப்படுத்தியுள்ளது.
டெல்லி செங்கோட்டைக் குண்டுவெடிப்பு
இதற்கு ஒரு நாள் முன்னதாக, இந்தியாவின் தலைநகர் டெல்லியிலும் ஒரு குண்டுவெடிப்பு நிகழ்ந்தது. டெல்லி செங்கோட்டை மெட்ரோ ரயில் நிலையம் அருகே நேற்று (நவம்பர் 10) நிகழ்ந்த கார் குண்டுவெடிப்புச் சம்பவத்தில், 12 பேர் பலியாகினர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் குறித்து, தேசியப் பாதுகாப்புப் படையினரும் (NSG) தேசியப் புலனாய்வு முகமை (NIA) அதிகாரிகளும் விசாரணை நடத்தி வருகிறார்கள். இரண்டு அண்டை நாடுகளின் தலைநகரிலும் குறுகிய இடைவெளியில் நிகழ்ந்துள்ள இந்தச் சம்பவங்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

LIVE 24 X 7