சென்னை சைதாப்பேட்டை, ஸ்ரீநகர் காலனி, தெற்கு மாடவீதியில் வசித்து வரும் தொழில்அதிபர் ரஜினி ரெட்டி என்பவரது வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். இவர் EXEMPLARR WORLDWIDE LIMITED என்று நிறுவனத்தை நடத்தி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. ரஜினி ரெட்டி கணவர் ராகிருஷ்ணா ரெட்டி. இவர் Marg group நிறுவனம் நடத்தி வருகிறார்.
அமலாக்கத்துறை சோதனை
இதே போல, சென்னை புரசைவாக்கம் தம்புசாமி தெருவில் வசித்து வரும் நகைக்கடைஅதிபர் லால் காத்ரி என்பவரது வீட்டிலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். இவர் சவுகார்பேட்டையில் நகைக்கடை வைத்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
சென்னை சவுகார்பேட்டையில் நகைக்கடை உரிமையாளர் மோகன்லால் கோத்தாரி என்பவர் வீட்டிலும் சிஆர்பிஎப் வீரர்கள் பாதுகாப்போடு சோதனை நடந்து வருகிறது. இன்று காலை முதல் சென்னையில் உள்ள நகைக்கடை அதிபர்களில் வீடுகளில் அமலாக்கத்துறை அதிகாரிகள் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர்.
வரி ஏய்ப்பு புகார்?
முன்னதாக சென்னையில் நேற்று வரி ஏய்ப்பு புகார் தொடர்பாக நகைக்கடை அதிபர்கள் மற்றும் நகைக்கடைகளில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தியது குறிப்பிடத்தக்கது.