K U M U D A M   N E W S

சென்னை

கஜகஸ்தானில் சாம்பியன் பட்டம்.. உலக செஸ் சாம்பியன் ஷர்வானிகாவுக்கு பிரம்மாண்ட வரவேற்பு!

கஜகஸ்தானில் நடைபெற்ற உலக 'கேடட்' செஸ் சாம்பியன்ஷிப் தொடரில் 10 வயதுக்குட்பட்ட பெண்கள் பிரிவில் சாம்பியன் பட்டம் வென்ற அரியலூரைச் சேர்ந்த இளம் வீராங்கனை ஷர்வானிகாவுக்கு, சென்னை விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

35 கோடி ரூபாய் கோகைன் கடத்திய ‘ஸ்டூடண்ட் ஆஃப் தி இயர்’ பட நடிகர் சென்னையில் கைது!

பாலிவுட் நடிகர் ஒருவர் சென்னை விமான நிலையத்தில் 3.5 கிலோ கோகைன் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டார். சிங்கப்பூரில் இருந்து சென்னை வந்த நடிகர், தனது டிராலியில் ரகசிய அறை அமைத்து, ரூ.35 கோடி மதிப்புள்ள போதைப்பொருளைக் கடத்தியது விசாரணையில் தெரியவந்துள்ளது.

வங்கக் கடலில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலம்: தமிழகத்தில் அக்டோபர் 2 முதல் கனமழைக்கு வாய்ப்பு!

வங்கக் கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி, காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, அக்டோபர் 2 முதல் 4ஆம் தேதி வரை தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாகச் சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

மகன் மீது பொய் வழக்கு- டிஜிபி அலுவலகம் முன்பு ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் தீக்குளிக்க முயற்சி; பரபரப்பு!

திருவல்லிக்கேணி போலீஸ் தனது மகன் மீது பொய் வழக்குப் பதிவு செய்ததாகக் குற்றம்சாட்டி, சென்னை டிஜிபி அலுவலகம் முன் ராணி, மணி மற்றும் மணிமாறன் ஆகிய மூவர் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றித் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

அமராவதி உணவகத்தில் 2-வது நாளாக ED சோதனை: சட்டவிரோதப் பணப் பரிமாற்றம் குறித்து தீவிர ஆய்வு!

சட்டவிரோதப் பணப் பரிமாற்றம் தொடர்பாக எழுந்த புகார்களின் அடிப்படையில், சென்னை டிடிகே சாலையில் உள்ள பிரபலமான அமராவதி உணவகம் மற்றும் அதன் தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை (ED) அதிகாரிகள் இன்றும் இரண்டாவது நாளாக அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

சென்னை ஐஐடி-யும், ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனமும் ஒப்பந்தம்.. மின்சார வாகனத் தொழில்நுட்பத்தில் ஊழியர்களுக்குச் சிறப்புப் பயிற்சி!

மின்சார வாகனத் தொழில்நுட்பம், ஆராய்ச்சி மற்றும் ஊழியர் திறன் மேம்பாட்டை ஊக்குவிக்க, சென்னை ஐஐடி மற்றும் ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன.

சென்னை விமான நிலையக் கோவிலில் அதிர்ச்சி.. சாமி தரிசனம் செய்ய வந்த பெண் பலி!

சென்னை விமான நிலைய வளாகத்தில் உள்ள சக்தி சந்தியம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்ய வந்த கோமதி (49), திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்தார். இவர் இதய நோய்க்குச் சிகிச்சை பெற்று வந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.

“உலகின் மிகப்பெரிய செல்வம் கல்வி” – நடிகர் சிவகார்த்திகேயன்

எந்த பின்னணியும் இல்லாமல் ஒரு துறைக்குள் நுழைவதே அசாத்தியமான விஷயம் என நடிகர் சிவகார்த்திகேயன் பேச்சு

பெரம்பூரில் ரயில் கேரேஜில் தீ விபத்து - ஊழியர்கள் துரிதமாக செயல்பட்டதால் அசம்பாவிதம் தவிர்ப்பு

ஊழியர்களின் துரிதமாக செயலால் பெரும் அசாம்விதம் தவிர்க்கப்பட்டது

சென்னையில் லேசான மழை பெய்ய வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்

நீலகிரி, கோயம்புத்தூர், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய 5 மாவட்டங்களில் இன்று (செப்.25) கனமழைக்கு வாய்ப்பு

ஆன்லைன் டிரேடிங்: மூதாட்டியிடம் ரூ.2.49 கோடி மோசடி...2 பேர் கைது

ஆன்லைன் டிரேடிங் மூலம் மூதாட்டியிடம் ரூ.2.49 கோடி மோசடி செய்த வழக்கில் 2 பேர் கைது

நீலகிரி, கோவைக்கு கனமழை; பிற மாவட்டங்களில் வெயில் சுட்டெரிக்கும் - வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!

வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வுப் பகுதியால் தமிழகத்தில் நீலகிரி மற்றும் கோவை மாவட்டங்களில் கனமழை பெய்யும். மற்ற மாவட்டங்களில் வெப்பநிலையும் 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னையில் மர்ம காய்ச்சலுக்கு 6 வயது சிறுமி உயிரிழப்பு

சென்னை வடபழனியில் மர்ம காய்ச்சல் காரணமாக 6 வயது சிறுமி உயிரிழப்பு குறித்து போலீசார் விசாரணை

மாதம்பட்டி ரங்கராஜுக்கு போலீசார் சம்மன்

வருகிற 26ஆம் தேதி நீலாங்கரை காவல் நிலையத்தில் மாதம்பட்டி ரங்கராஜு விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என சம்மன் அனுப்பட்டுள்ளதாக தகவல்

அரசு மருத்துவமனை வளாகத்தில் மோதல்: கல்லூரி மாணவர்கள் வெறிச்செயல்!

சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனை வளாகத்தில் இரண்டு கல்லூரி மாணவர் குழுக்களிடையே மோதல் ஏற்பட்டது. ஒரு மாணவரிடம் இருந்து நகைகள் பறிக்கப்பட்ட நிலையில், இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

வீட்டில் புகுந்து தாக்குதல்: ஓய்வு பெற்ற அதிகாரி குடும்பத்தினர் மீது ரவுடி, திருநங்கைகள் கும்பல் வெறிச்செயல்!

சென்னை கோயம்பேட்டில் வாடகை வீட்டு விவகாரத்தில், ஓய்வு பெற்ற வணிக வரித்துறை அதிகாரியின் வீட்டில் புகுந்து தாக்கிய ரவுடி, வழக்கறிஞர்கள் மற்றும் திருநங்கைகள் உள்ளிட்ட 10 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சூளைமேடு விவகாரம்: 'பொறுப்பு அதிகாரி யார்? - மாநகராட்சிக்கு மீண்டும் கடிதம் அனுப்பிய போலீஸ்!

சென்னை சூளைமேட்டில் மழைநீர் வடிகாலில் விழுந்து பெண் உயிரிழந்த விவகாரத்தில், பொறுப்பு அதிகாரி யார் என விளக்கம் கேட்டு சென்னை மாநகராட்சிக்கு சூளைமேடு போலீசார் மீண்டும் கடிதம் அனுப்பியுள்ளனர்.

சுகுணா குழுமத்தில் வருமானவரித்துறை சோதனை- முக்கிய ஆவணங்கள் சிக்கியது?

சோதனையில் தங்கம், ரியல் எஸ்டேட் முதலீடு ஆவணங்கள் சிக்கி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது

கொளத்தூரில் பயங்கரம்: நண்பனுக்காகச் சண்டையிடச் சென்ற 16 வயது சிறுவன் அடித்துக் கொலை!

சென்னை கொளத்தூரில் நண்பனுக்காகச் சண்டையிடச் சென்ற 16 வயது சிறுவன், மற்றொரு கும்பலால் அடித்துக் கொலை செய்யப்பட்டார். இந்தச் சம்பவம் தொடர்பாக மேலும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வீட்டில் 9.7 கிலோ குட்கா பதுக்கல் - வடபழனியில் முதியவர் கைது; போலீசார் தீவிர விசாரணை!

வடபழனியில் வீட்டில் குட்கா பதுக்கி வைத்து விற்பனை செய்த 68 வயதான முதியவர் ஒருவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 9.7 கிலோ குட்கா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

இசைப் பிரியர்களுக்கு உற்சாகமான செய்தி! - சென்னையில் யுவன் சங்கர் ராஜாவின் ‘தி யு1னிவர்ஸ் டூர்’ உலக இசை நிகழ்ச்சி!

இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவின் 'தி யு1னிவர்ஸ் டூர்' இசை நிகழ்ச்சி, சென்னையில் வரும் டிசம்பர் 13-ல் பிரம்மாண்டமாகத் தொடக்கவுள்ள நிலையில், டிக்கெட் முன்பதிவு தொடங்கியது.

ப்ளூ கிராஸ் அமைப்பிற்கு தமிழக காவல்துறை டிஜிபி கடிதம்

தெரு நாய்களுக்கு உணவு அளிப்போருக்கு தொல்லை தொடர்பாக காவல் நிலையங்களுக்கு சுற்றறிக்கை அனுப்ப தேவையில்லை என பதில் கடிதம்

மாதம்பட்டி ரங்கராஜ் மீது நடவடிக்கை எடுப்பார்கள் - ஜாய் கிரிஸில்டா

சினிமா ஆடை வடிவமைப்பாளரான ஜாய் கிரிஸில்டா, பிரபல நடிகர் மற்றும் சமையல் கலைஞரான மாதம்பட்டி ரங்கராஜ் மீது சமீபத்தில் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் பரபரப்பு புகார் ஒன்றை அளித்திருந்தார்.

சென்னை திரும்பிய தனுஷை சூழ்ந்துக்கொண்ட ரசிகர்களால் பரபரப்பு

கோவையில் இருந்து தனி விமானத்தில் சென்னை திரும்பிய தனுஷ் ரசிகர்கள் சூழ்ந்து கொண்டு செல்ஃபி எடுத்தனர்.

சென்னையில் அரசு பஸ் மோதி இளம்பெண் உயிரிழப்பு – ஓட்டுநர் கைது

விபத்தை ஏற்படுத்தி மாநகர பேருந்து ஓட்டுனரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றன