K U M U D A M   N E W S

சென்னை

இன்ஸ்டாகிராமில் பெண்ணுக்கு ஆபாச மெசேஜ்.. வாலிபர் கைது

இன்ஸ்டாகிராமில் பெண்ணுக்கு ஆபாசமாக மெசேஜ் அனுப்பிய வாலிபரை சைபர் கிரைம் போலீசார் கைது செய்துள்ளனர்.

சித்தி கொடுமையால் பள்ளி மாணவி தூக்கிட்டு தற்கொலை.. தற்கொலைக்கு தூண்டியதாக தந்தை, சித்தி கைது!

சென்னை ஓட்டேரியில் சித்தியின் கொடுமை தாங்க முடியாமல் பள்ளி மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தற்கொலைக்கு தூண்டியதாக தந்தை, சித்தி கைது கைது செய்யப்பட்டுள்ளனர்.

முடிவுற்ற திட்டப் பணிகள்.. தொடங்கி வைத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

ஊட்டச்சத்து வேளாண்மை இயக்கம் சார்பில், ரூ.103.38 கோடியில் 52 வேளாண் கட்டிடங்கள் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் முடிவுற்ற திட்டப் பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

சென்னையில் நகை வியாபாரி கடத்தல்.. ரூ.31 லட்சம் நகைகள் மற்றும் பணம் கொள்ளை!

சென்னையில் நகை வியாபாரியை கடத்திச் சென்று ரூ. 31 லட்சம், தங்க, வெள்ளி நகைகளை கொள்ளையடித்துச் சென்ற கும்பல் கைது செய்யப்பட்டுள்ளனர். நம்பர் ப்ளேட்டை மாற்றி, வாகனத்தில் HEALTH டிப்பார்ட்மண்ட் ஸ்டிக்கர் வைத்து கொள்ளையடிப்பதை வாடிக்கையாக வைத்துள்ளதாக போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.

மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலுக்கு வெடிகுண்டு மிரட்டலால் பரபரப்பு

சோதனையின் முடிவில் வெடிகுண்டு மிரட்டல் புரளி என காவல்துறையினர் உறுதி செய்தனர்.

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி 4 நாள் டெல்லி பயணம்!

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி 4 நாள் பயணமாக சென்னையில் இருந்து டெல்லி சென்றுள்ளார். ஒரே வாரத்தில் 2-வது முறையாக ஆளுநர் டெல்லி செல்வது குறிப்பிடத்தக்கது.

சிறுவன் கடத்தல் வழக்கு.. ஜெகன் மூர்த்திக்கு முன்ஜாமின் வழங்கிய உச்ச நீதிமன்றம்

ஜெகன் மூர்த்தியின் முன்ஜாமின் மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்த நிலையில், உச்சநீதிமன்றம் அவருக்கு முன்ஜாமின் வழங்கி உத்தரவிட்டுள்ளது.

விஷ்ணு மற்றும் அஸ்மிதா மீது பங்குச்சந்தை மோசடி வழக்கு – மத்திய குற்றப்பிரிவு நடவடிக்கை!

பிரபல இன்ஸ்டாகிராம் பிரபலம் விஷ்ணு மற்றும் அவரது மனைவி, மேக்கப் ஆர்ட்டிஸ்ட் அஸ்மிதா ஆகியோர் ஆன்லைன் பங்குச்சந்தை மோசடியில் ஈடுபட்டதாக சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

வடசென்னை-2ல் சிம்பு? –வெற்றிமாறன் கொடுத்த புதிய அப்டேட்

நடிகர் சிலம்பரசன் இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகும் புதிய படத்தின் அறிவிப்பு வீடியோ குறித்து புதிய தகவல் வெளியாகி உள்ளது.

சென்னை விமான நிலையத்திற்கு இ-மெயிலில் வெடிகுண்டு மிரட்டல்..!

சென்னை விமான நிலையத்திற்கு மர்ம நபர்களால் இ-மெயில்கள் மூலம், அடுத்தடுத்து வெடிகுண்டு மிரட்டல்கள் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

சென்னையில் விமானம் இயந்திர கோளாறு காரணமாக ரத்து…தாய்லாந்து செல்ல இருந்த பயணிகள் தவிப்பு

தாய்லாந்து விமானத்தில் பயணிக்க இருந்த 164 பயணிகள் ஒட்டல்களில் தங்க வைப்பு

சென்னையில் முன்னாள் காவலர் செய்த காரியம் – சிசிடிவியை பார்த்து அதிர்ந்த போலீஸ்

பேங்கிங் என்ற கோடு வேர்டை பயன்படுத்தி ஹவாலா பணத்தைக் கொண்டு செல்லும் நபரிடம் பணம் பறிக்கும் கும்பல் கைது

விஜய் தலைமையில் தவெக மாநிலச் செயற்குழு கூட்டம்.. வெளியான அறிவிப்பு

தவெகவின் மாநிலச் செயற்குழுக் கூட்டம், விஜய் தலைமையில், ஜூலை 4 ஆம் தேதிபனையூரில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

சாகர் கவாச் பாதுகாப்பு ஒத்திகை: கடலோர ஊடுருவ முயன்ற ஒத்திகை வீரர்கள் உட்பட 13 கைது!

சாகர் கவாச் கடலோர பாதுகாப்பு ஒத்திகை காவல்துறை கண்காணிப்பில் மீன்பிடி துறைமுகம் உள்ளிட்ட கடலோர பகுதிகளில் ஊடுருவ முயன்ற மேலும் 11 ஒத்திகை வீரர்கள் உட்பட 13 நபர்கள் 2 டம்மி வெடிகுண்டு பெட்டிகளுடன் பிடிப்பட்டனர்.

"ஒரு நாள் பழக்கத்தால் இந்த நிலைமைக்கு வந்து விட்டேன்"- ‘தீங்கிரை’யால் போதைக்கு இரையான நடிகர் ஸ்ரீகாந்த்

போதைப்பொருள் வழக்குகளில் திரைத்துறையைச் சேர்ந்தவர்கள் கைது என்ற செய்தியை நாம் பிற மாநிலங்களில் நிகழ்ந்ததாக அடிக்கடி பார்த்து இருப்போம், படித்து இருப்போம். ஆனால் முதல் முறையாக தமிழகத்தில் குறிப்பாக சென்னையில் தமிழ் திரைப்பட நடிகர் ஸ்ரீகாந்த் கைதான செய்தி வைரலாகி உள்ளது. தமிழ் திரை உலகில் போதைப்பொருள் நடமாட்டம் இருப்பதாக பலரது தரப்பில் இருந்து குற்றச்சாட்டுகள் எழுந்தது.

ஏடிஎம் மையங்களில் நூதனக் கொள்ளை.. வட மாநில இளைஞரின் புகைப்படம் வெளியீடு..!

சென்னையில் பல்வேறு பகுதிகளில் சினிமா பாணியில் ஏ.டி.எம் மையங்களில் நூதன முறையில் கொள்ளையடித்த வட மாநில ஆசாமியின் சிசிடிவி காட்சிகள் வெளியிடப்பட்டன. சம்பந்தப்பட்ட வட மாநில நபர் குறித்து பொதுமக்கள் அடையாளம் காண்பதற்காக சிசிடிவி காட்சிகள் வெளியிடப்பட்டுள்ளது.

போதைப்பொருள் வழக்கு – அதிமுக முன்னாள் நிர்வாகியை போலீஸ் காவலில் எடுக்க திட்டம்

போதைப்பொருள் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள நடிகர் ஸ்ரீகாந்த் தொடர்புடைய வழக்கின் முதல் தகவல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ள தகவல்கள் வெளியாகி உள்ளன.

முறைகேடுகளின் மறுபெயர் தான் திராவிட மாடல் அரசா?- அன்புமணி சரமாரி கேள்வி

கட்டி முடிக்கப்பட்ட கட்டிடத்திற்கு ஒப்பந்தப்புள்ளி விவகாரத்தில் மாநகராட்சிக்கே தெரியாமல் கட்டிக் கொடுத்தது யார்? என அரசுக்கு அன்புமணி கேள்வி எழுப்பி உள்ளார்.

இஸ்ரேல் - ஈரான் போர் பதற்றம் எதிரொலி: சென்னை விமானங்கள் ரத்து

இஸ்ரேல் - ஈரான் இடையே போர் பதற்றம் நிலவு வரும் நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மத்திய கிழக்கு பகுதிகளில் வான்வழி மூடப்பட்டுள்ளது. இதனால், சென்னை விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

கால் டாக்ஸி விபத்து: தந்தை, கர்ப்பிணி உயிரிழப்பு-மதுபோதையால் நடந்த சோகம்

சென்னையில் கால் டாக்ஸி விபத்தில் தந்தை மற்றும் கர்ப்பிணி பெண் பரிதாபமாக உயிரிழப்பு. தாய் மற்றும் கார் ஓட்டுநர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதி

சாருகேசி படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா!

சாருகேசி படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்றது. இதில், படத்தில் நடித்த நடிகர் மற்றும் நடிகைகள் அனைவரும் கலந்து கொண்டு, தங்களது அனுபவத்தை பகிர்ந்துகொண்டனர்.

சொத்து குவிப்பு வழக்கு: திமுக MP ஆ.ராசா நீதிமன்றத்தில் ஆஜர்!

சொத்து குவிப்பு வழக்கில் திமுக எம்.பி ஆ.ராசா சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜரான நிலையில், குற்றச்சாட்டுப் பதிவும் வழக்கின் விசாரணையும் வரும் 30-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

போதைப்பொருள் வழக்கில் சிக்கிய நடிகர் ஸ்ரீகாந்த் கைது.. போலீசார் தீவிர விசாரணை!

சென்னையில் போதைப் பொருள் வழக்கில் பிரபல நடிகர் ஸ்ரீகாந்தை கைது செய்த போலீசார் தீவிர அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அவருக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

பீக் ஹவர்சில் தண்ணீர் லாரிகளுக்கு தடை.. காவல்துறை உத்தரவு

காலை 7:30 மணி முதல் 9 மணி வரை தண்ணீர் லாரிகள் இயங்க தடை விதித்து சென்னை காவல் ஆணையர் அருண் உத்தரவிட்டுள்ளார்.

விமானத்தில் ஒலித்த அலாரம்.. சென்னை விமான நிலையத்தில் பரபரப்பு

கொல்கத்தா செல்லும் விமானத்தில் அவசரகால கதவை திறக்க கூடிய பட்டனை அழுத்திய கல்லூரி மாணவரால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.