சென்னை பெரம்பூரில் உள்ள ரயில் பெட்டி தொழிற்சாலை மிகவும் பழமையான மற்றும் முக்கியமான ஒன்றாகும்.இது இந்திய ரயில்வேயின் தெற்கு ரயில்வே மண்டலத்திற்குச் சேவை செய்யும் முக்கிய மையங்களில் ஒன்றாகும்.
பெரம்பூர் கேரேஜ் ஒர்க்ஸ்
தற்போது, இங்கு ரயில் பெட்டிகளை முழுமையாகப் பழுதுபார்த்தல் புதிய பெட்டிகளைச் சரிசெய்தல் போன்ற பணிகள் நடைபெறுகின்றன. இது தெற்கு ரயில்வேயின் முக்கிய பழுதுபார்க்கும் மையமாக செயல்படுகிறது.
பெரம்பூர் ரயில் பெட்டி தொழிற்சாலைக்கு அருகில், "பெரம்பூர் கேரேஜ் ஒர்க்ஸ்" என்ற பெயரில் ஒரு ரயில் நிலையமும், சற்று தொலைவில் "பெரம்பூர் லோகோ ஒர்க்ஸ்" என்ற பெயரில் மற்றொரு ரயில் நிலையமும் உள்ளன.
தீ விபத்து தவிர்ப்பு
சமீபத்தில், சென்னைக்கு நான்காவது ரயில் முனையம் அமைக்கும் திட்டத்தின் ஒரு பகுதியாக, பெரம்பூர் ரயில் பெட்டி தொழிற்சாலை மற்றும் இன்ஜின் தொழிற்சாலையை படிப்படியாக வேறு இடங்களுக்கு மாற்றுவது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் தான் சென்னை பெரம்பூர் ரயில் கேரேஜின் புதிய எல்.எச்.பி. (LHB) கார் சேட் பகுதியில் இன்று திடீரென தீ விபத்து ஏற்பட்டது. அங்கு பழுது பார்க்கும் பணிகள் நடைபெற்று கொண்டிருந்தபோது ஏற்பட்ட தீ வேகமாக பரவத்தொடங்கியது. அங்கு இருந்த ஊழியர்கள் துரிதமாக செயல்பட்டு தீயணைப்பாணைக் கொண்டு தீயை கட்டுப்படுத்தினர். அவர்களின் துணிச்சலான முயற்சியால் சில நிமிடங்களில் தீ அணைக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ரயில்வே நிர்வாகம் விளக்கம்
இந்த விபத்தில் எந்தவிதமான உயிரிழப்பு அல்லது காயமும் ஏற்படவில்லை என்றும் ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. பெரம்பூர் கேரேஜில் தினசரி நூற்றுக்கணக்கான ரயில் பெட்டிகள் பராமரிப்பு மற்றும் பழுது பார்க்கும் பணிகள் நடைபெறும் பகுதியில் ஏற்பட்ட இந்த தீ விபத்தினால் அப்பகுதியில் சிறிது நேரத்திற்கு பரபரப்பு ஏற்பட்டது. ஊழியர்கள் துரிதமான செயலால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.