தமிழகத்தில் 2026-ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு, வாக்காளர் பட்டியலைச் சீரமைக்கும் பணிகளைத் தேர்தல் ஆணையம் தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்த பெயர் சேர்த்தல், நீக்கல் மற்றும் திருத்தப் பணிகள் தற்போது நிறைவடையும் நிலைக்கு வந்துள்ளன.
குறைந்த வாக்காளர் எண்ணிக்கையும் திருத்தப் பணிகளும்
கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் நிலவரப்படி தமிழகத்தில் 6.41 கோடி வாக்காளர்கள் இருந்தனர். ஆனால், உயிரிழந்தவர்கள் மற்றும் இரட்டைப் பதிவுகளை நீக்கும் தீவிர நடவடிக்கைக்குப் பிறகு, டிசம்பர் 19-ல் வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலில் சுமார் 97.37 லட்சம் பெயர்கள் நீக்கப்பட்டன. இதனால் வாக்காளர் எண்ணிக்கை 5.43 கோடியாகக் குறைந்தது. இதனைத் தொடர்ந்து, விடுபட்டவர்கள் மற்றும் புதிய வாக்காளர்கள் விண்ணப்பிக்க இன்று (பிப்ரவரி 10) வரை கால அவகாசம் வழங்கப்பட்டது.
குவிந்த விண்ணப்பங்கள்
இந்த இடைப்பட்ட காலத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கவும், திருத்தம் செய்யவும் பொதுமக்கள் ஆர்வத்துடன் விண்ணப்பித்துள்ளனர். சுமார் 24.47 லட்சம் பேர் நேரடியாக அலுவலகங்களில் படிவங்களை வழங்கியுள்ளனர். இதில் பெயர் சேர்க்க மட்டும் 17.10 லட்சம் பேர் ஆர்வம் காட்டியுள்ளனர்.
டிஜிட்டல் முறையில் சுமார் 10.28 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். ஒட்டுமொத்தமாக தமிழகம் முழுவதும் 34 லட்சத்து 75 ஆயிரத்து 717 பேர் பல்வேறு கோரிக்கைகளுக்காக விண்ணப்பித்துள்ளனர். இந்த விண்ணப்பங்களைச் சரிபார்க்கும் பணிகளை வாக்காளர் பதிவு அலுவலர்கள் இன்றுடன் நிறைவு செய்கின்றனர்.
இறுதிப் வாக்காளர் பட்டியல்
தற்போது வந்துள்ள புதிய விண்ணப்பங்களின் அடிப்படையில், தமிழகத்தின் மொத்த வாக்காளர் எண்ணிக்கை சுமார் 5.65 கோடியாக உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சரிபார்க்கப்பட்ட தகவல்களின் அடிப்படையில், வரும் பிப்ரவரி 17-ஆம் தேதி தமிழகத்தின் அதிகாரப்பூர்வ இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட உள்ளது.

LIVE 24 X 7