சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (மார்ச் 28) மீண்டும் அதிரடியாக உயர்ந்துள்ளது. சர்வதேசப் பொருளாதாரச் சூழல் மற்றும் போர் பதற்றங்களால் தங்கம் விலை தொடர்ந்து ஏறுமுகமாகவே இருப்பது நகைப்பிரியர்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த சில நாட்களாக நிலையற்ற தன்மையுடன் காணப்பட்ட தங்கத்தின் விலை, வார இறுதி நாளான இன்று இரண்டாவது நாளாக உயர்ந்துள்ளது. மேற்காசிய நாடுகளில் நிலவும் போர் பதற்றம் மற்றும் கச்சா எண்ணெய் விலை மாற்றங்களால் முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடாகத் தங்கத்தைத் தேர்ந்தெடுப்பதே இந்த விலை உயர்வுக்கு முக்கியக் காரணமாகக் கூறப்படுகிறது. நேற்று சவரனுக்கு ரூ. 640 உயர்ந்த நிலையில், இன்று மீண்டும் மிகப்பெரிய உயர்வைக் கண்டுள்ளது.
இன்றைய விலை நிலவரம்
சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 1,840 உயர்ந்துள்ளது. இதன் மூலம் ஒரு சவரன் தங்கம் ரூ. 1,09,280-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல், ஒரு கிராம் தங்கம் ரூ. 230 உயர்ந்து ரூ. 13,660-க்கு விற்பனையாகிறது. கடந்த திங்கள்கிழமை ரூ. 1,01,360-க்கு விற்ற தங்கம், இந்த வார இறுதியில் ஒரு லட்சத்து பத்தாயிரம் ரூபாயை நெருங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.
வெள்ளி விலையும் உயர்வு
நேற்று கணிசமாகக் குறைந்திருந்த வெள்ளியின் விலை இன்று மீண்டும் ஏற்றம் கண்டுள்ளது. சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் வெள்ளி விலை கிராமுக்கு ரூ. 5 உயர்ந்து ரூ. 250-க்கும், கிலோவுக்கு ரூ. 5,000 உயர்ந்து ஒரு கிலோ கட்டி வெள்ளி ரூ. 2,50,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் மற்றும் வெள்ளி என இரண்டுமே இன்று விலை உயர்ந்துள்ளதால் நடுத்தர மக்கள் மற்றும் நகைப்பிரியர்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.

LIVE 24 X 7