சென்னையில் கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கங்களுடன் காணப்பட்ட தங்கத்தின் விலை, இன்று (மார்ச் 24) அதிரடியாகக் குறைந்துள்ளது. மேற்காசிய நாடுகளில் நிலவி வரும் போர்ச் சூழல் மற்றும் தற்காலிக அமைதிப் பேச்சுவார்த்தைகள் சர்வதேசச் சந்தையில் தங்கத்தின் விலையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன.
கடந்த சில தினங்களாகவே தங்கத்தின் விலை பெரும் ஏற்ற இறக்கங்களைச் சந்தித்து வருகிறது. மார்ச் 21 அன்று சவரனுக்கு ரூ. 2,640 குறைந்த நிலையில், வாரத்தின் முதல் நாளான இரண்டு முறை விலை குறைந்து பின்னர் மாலையில் மீண்டும் உயர்ந்தது. இந்த நிலையில், இன்று சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 2,720 குறைந்து, ஒரு சவரன் ரூ. 1,04,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
சென்னையில் இன்று ஒரு கிராம் ஆபரணத் தங்கம் ரூ. 340 குறைந்து ரூ. 13,000-க்கு விற்பனையாகிறது. வெள்ளியின் விலையும் இன்று சரிவைச் சந்தித்துள்ளது. ஒரு கிராம் வெள்ளி ரூ. 10 குறைந்து ரூ. 240-க்கும், ஒரு கிலோ கட்டி வெள்ளி ரூ. 10,000 குறைந்து ரூ. 2.40 லட்சத்திற்கும் விற்பனை செய்யப்படுகிறது. கடந்த சில நாட்களாக நிலவி வந்த விலை உயர்விலிருந்து இது வாடிக்கையாளர்களுக்குச் சற்று ஆறுதலைத் தந்துள்ளதாகத் தெரிகிறது.

LIVE 24 X 7