தமிழ்நாடு

நகை பிரியர்களுக்கு இனிப்பான செய்தி.. தங்கம் விலை கடும் சரிவு!

சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.2160 குறைந்துள்ளது.

நகை பிரியர்களுக்கு இனிப்பான செய்தி.. தங்கம் விலை கடும் சரிவு!
Gold Rate
கடந்த சில நாட்களாக தங்கம் தொடர்ந்து சரிவை சந்தித்து வருகிறது. இதனால் நகைப்பிரியர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர். இன்றைய தினம் தங்கம் சவரனுக்கு ரூ.2160-க்கு குறைந்து உள்ளது.

சர்வதேச சந்தையில் டாலர் குறியீட்டின் வலுவே தங்கத்தின் வீழ்ச்சிக்கு முக்கிய காரணம் என்று கூறப்படுகிறது. ஈரான், இஸ்ரேல் போர் காரணமாக தங்கம் கடுமையாக உயரும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அதற்கு நேர் மாறாக நாள்தோறும் தங்கம் விலை வீழ்ச்சி அடைந்து வருகிறது. வெள்ளி விலையும் தொடர்ந்து சரிவை சந்தித்து வருகிறது.

நேற்றைய தினம் தங்கம் சவரனுக்கு ரூ.640 குறைந்து, ஒரு சவரன் தங்கம் ரூ.1,16,560-க்கு விற்பனை செய்யப்பட்டது. கிராமுக்கு ரூ.80 குறைந்து, ஒரு கிராம் தங்கம் ரூ.14,570-க்கு விற்பனை செய்யப்பட்டது. இதே போன்று வெள்ளியும் கிராமுக்கு ரூ. 5 குறைந்து, ஒரு கிராம் வெள்ளி ரூ.275-க்கு விற்பனை செய்யப்பட்டது. கிலோவிற்கு ரூ.5 ஆயிரம் குறைந்து, ஒரு கிலோ வெள்ளி ரூ.2,75,000-க்கு விற்பனை செய்யப்பட்டது.

இன்றைய தினம் தங்கம் சவரனுக்கு ரூ.2160 குறைந்து, ஒரு சவரன் தங்கம் ரூ.1,14,400-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.270 குறைந்து, ஒரு கிராம் தங்கம் ரூ.14,300-க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளியும் கிலோவிற்கு ரூ.10 ஆயிரம் குறைந்து, ஒரு கிலோ தங்கம் ரூ.2,65,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் வெள்ளி ரூ.10 குறைந்து, ஒரு கிராம் வெள்ளி ரூ.265-க்கு விற்பனை செய்யப்படுகிறது.