தமிழ்நாடு

"நகை பிரியர்கள் ஹேப்பி அண்ணாச்சி.." தங்கம் விலை கடும் சரிவு!

சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.2,640 குறைந்துள்ளது.


Gold Rate
சென்னையில் கடந்த சில நாட்களாக ஊசலாட்டத்தில் இருந்து வரும் ஆபரணத் தங்கத்தின் விலை, இன்று அதிரடியாகப் பெரும் சரிவைச் சந்தித்துள்ளது. சர்வதேசச் சந்தையில் நிலவும் பொருளாதார மாற்றங்கள் மற்றும் மத்திய கிழக்கு நாடுகளின் போர் சூழல் காரணமாக, தங்கம் மற்றும் வெள்ளி விலையில் இந்த அதிரடி மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன.

தங்கம் விலை சரிவு

தங்கத்தின் விலை கடந்த வார இறுதியில் சவரனுக்கு ரூ.5,360 வரை குறைந்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இடையில் நேற்று (மார்ச் 20) சவரனுக்கு ரூ.400 எனச் சற்று உயர்ந்திருந்த நிலையில், இன்று மீண்டும் விலை வீழ்ச்சியடைந்துள்ளது. இன்றைய நிலவரப்படி, சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.2,640 குறைந்து, ஒரு சவரன் ரூ.1,08,960-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல் ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.330 குறைந்து ரூ.13,620-க்கு விற்பனையாகிறது.

வெள்ளி விலை கடும் வீழ்ச்சி

தங்கத்தைப் போலவே வெள்ளியின் விலையும் இன்று மிகக் கடுமையான சரிவைச் சந்தித்துள்ளது. நேற்று கிலோவுக்கு ரூ.5,000 குறைந்திருந்த நிலையில், இன்று ஒரே நாளில் மேலும் ரூ.10,000 சரிந்துள்ளது. இதன் மூலம் ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூ.2.50 லட்சம் என்ற நிலைக்கு வந்துள்ளது. இந்தத் தொடர் சரிவு நகை வாங்கத் திட்டமிட்டுள்ள நடுத்தர மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தியாக அமைந்துள்ளது.