மருத்துவ உபகரணங்கள் உற்பத்தி செய்யும் நிறுவனத்தில் பங்குதாரராகச் சேர்த்துக்கொள்வதாகக் கூறி, தொழிலதிபர் ஒருவரிடம் ரூ.1.25 கோடி மோசடி செய்த நபரை ஆவடி மத்திய குற்றப்பிரிவு போலீசார் அதிரடியாகக் கைது செய்துள்ளனர்.
ஆவடி பகுதியைச் சேர்ந்த வினோத்குமார் என்பவருக்கு, பூந்தமல்லி அடுத்த நும்பல் பகுதியைச் சேர்ந்த மொண்டம் ஸ்ரீனிவாசலு என்பவர் அறிமுகமாகியுள்ளார். இதனை தொடர்ந்து, 'Astromed Health Care India Pvt Ltd' என்ற நிறுவனத்தில் முதலீடு செய்தால் பெரும் பங்கு தருவதாக ஸ்ரீனிவாசலு ஆசை வார்த்தைகளைக் கூறியுள்ளார். இதனை நம்பிய வினோத்குமார், ஆன்லைன் மூலமாக சுமார் ரூ.97.50 லட்சமும், தனது கிரெடிட் கார்டைப் பயன்படுத்தி நிறுவனத்தின் செலவுகளுக்காக ரூ.25 லட்சமும் என மொத்தம் ரூ.1.25 கோடியைச் செலவு செய்துள்ளார். ஆனால், சொன்னபடி பங்குகளையோ அல்லது பணத்தையோ ஸ்ரீனிவாசலு வழங்காமல் இழுத்தடித்துள்ளார்.
பணத்தைத் திரும்பக் கேட்டு வினோத்குமார் அழுத்தம் கொடுத்ததால், கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் இருவருக்கும் இடையே ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. அதன்படி முதற்கட்டமாக ரூ.25 லட்சத்தைத் திருப்பி அளித்த ஸ்ரீனிவாசலு, மீதமுள்ள ஒரு கோடி ரூபாய்க்கு 9 தவணைகளாகக் காசோலைகளை வழங்கியுள்ளார். வினோத்குமார் அந்தக் காசோலைகளை வங்கியில் செலுத்தியபோது, ஸ்ரீனிவாசலு திட்டமிட்டு 'Stop Payment' கொடுத்திருப்பது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த வினோத்குமார், தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்து ஆவடி மத்திய குற்றப்பிரிவில் புகார் அளித்தார்.
போலீசார் நடத்திய தீவிர விசாரணையில், ஸ்ரீனிவாசலு ஒரு தொடர் மோசடியாளர் என்பது அம்பலமானது. ஏற்கனவே கடந்த 2021-ஆம் ஆண்டு கதிர்வேடு பகுதியைச் சேர்ந்த ஜெயக்குமார் என்பவரிடம் இடம் வாங்குவதாகக் கூறி ரூ.30 லட்சம் பெற்று ஏமாற்றியதாகப் புழல் காவல் நிலையத்தில் இவர் மீது வழக்கு நிலுவையில் உள்ளது. தலைமறைவாக இருந்த ஸ்ரீனிவாசலுவை நேற்று கைது செய்த ஆவடி மத்திய குற்றப்பிரிவு போலீசார், அவர் மீது நம்பிக்கை மோசடி உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர். விசாரணைக்குப் பிறகு அவர் நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்கப்பட்டார்.

LIVE 24 X 7