தமிழகத்தின் தென் மாவட்டங்களில் பொது இடங்கள் மற்றும் சாலை ஓரங்களில் அனுமதியின்றி வைக்கப்படும் அரசியல் மற்றும் சாதிய அமைப்புகளின் கொடிக்கம்பங்கள் குறித்துத் தொடரப்பட்ட வழக்கில், மதுரை உயர்நீதிமன்றக் கிளை சம்பந்தப்பட்ட மாவட்ட நிர்வாகங்களுக்குக் கடும் உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளது.
பொதுமக்களுக்கு இடையூறாகும் பிளக்ஸ் பேனர்கள்
சிவகங்கையைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன் என்பவர் தாக்கல் செய்த மனுவில், புதுக்கோட்டை, திருச்சி, மதுரை, நெல்லை, தேனி உள்ளிட்ட 13 தென் மாவட்டங்களில் முறையான அனுமதி பெறாமல் கொடிக்கம்பங்கள் மற்றும் பிளக்ஸ் பேனர்கள் வைக்கப்படுவதாகக் குற்றம் சாட்டியிருந்தார். அரசு புறம்போக்கு நிலங்கள், மாநில நெடுஞ்சாலைகள் மற்றும் கிராமப்புற சாலைகளில் அரசியல் கட்சிகள் மற்றும் சாதிய அமைப்புகள் போட்டி போட்டுக்கொண்டு பேனர்களை வைப்பதால், பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுவதோடு தேவையற்ற மோதல்கள் உருவாகும் சூழல் நிலவுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியிருந்தார்.
நீதிபதிகளின் காட்டமான கேள்வி
இந்த மனு இன்று நீதிபதிகள் ஜெயச்சந்திரன் மற்றும் கே.கே. ராமகிருஷ்ணன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது, "நீதிமன்றம் ஏற்கனவே இது போன்ற விவகாரங்களில் பல உத்தரவுகளைப் பிறப்பித்திருந்தாலும், ஏன் தொடர்ச்சியாக இத்தகைய புகார்கள் வந்துகொண்டே இருக்கின்றன?" என்று நீதிபதிகள் அதிருப்தி வெளியிட்டனர்.
மாவட்ட நிர்வாகங்களுக்கு 4 வார கெடு
வழக்கை விசாரித்த நீதிபதிகள், தேனி, நெல்லை உள்ளிட்ட 13 மாவட்டங்களின் ஆட்சியர்கள் மற்றும் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர்கள் இந்த விவகாரம் குறித்து விரிவான பதிலளிக்க உத்தரவிட்டனர். முறையான அனுமதி இன்றி வைக்கப்பட்டிருக்கும் கொடிக்கம்பங்கள் மற்றும் பேனர்களை அகற்றுவது தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன என்பது குறித்து 4 வார காலத்திற்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டு, வழக்கை ஒத்திவைத்தனர்.

LIVE 24 X 7