தமிழ்நாடு

வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம்: தமிழகத்தில் 14 மாவட்டங்களுக்கு இன்று கனமழை எச்சரிக்கை!

வங்கக் கடலில் நிலைகொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால், இன்று (அக். 3) சென்னை உட்பட 14 மாவட்டங்களுக்குக் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. இது இன்று இரவுக்குள் ஒடிசா - ஆந்திரா கடலோரப் பகுதியில் புயலாகக் கரையை கடக்க வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம்: தமிழகத்தில் 14 மாவட்டங்களுக்கு இன்று கனமழை எச்சரிக்கை!
வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம்: தமிழகத்தில் 14 மாவட்டங்களுக்கு இன்று கனமழை எச்சரிக்கை!
வங்கக் கடலில் நிலவி வரும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலத்தின் காரணமாக, இன்று (அக்டோபர் 3, 2025) தமிழகத்தில் 14 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள மாவட்டங்கள்

மத்திய மேற்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலைகொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலத்தின் தாக்கத்தால், இன்று வெள்ளிக்கிழமை பின்வரும் 14 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது:

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், அரியலூர், மயிலாடுதுறை, திருவாருர், நாகை, சேலம், நாமக்கல், தஞ்சாவூர்

பொதுவாகச் செப்டம்பர் முதல் டிசம்பர் வரை வடகிழக்குப் பருவமழைக் காலத்தில் தமிழகத்தில் அதிக மழை பெய்யும். விடுமுறை முடிந்து இன்று சென்னை திரும்பிய பல மக்கள், நள்ளிரவு முதல் விடிய விடியப் பெய்த கனமழையால் அவதிக்குள்ளாகினர்.

காற்றழுத்த தாழ்வு மண்டலத்தின் நிலை

மத்திய மேற்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவி வந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுப்பெற்று, அக்டோபர் 2, 2025 அன்று இரவு சுமார் 11.30 மணியளவில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியுள்ளது. இது தற்போது கோபல்பூரில் இருந்து தென்கிழக்கே சுமார் 160 கி.மீ தொலைவிலும், விசாகப்பட்டினத்தில் இருந்து 250 கி.மீ தொலைவிலும் நிலை கொண்டுள்ளது.

இது தொடர்ந்து வடக்கு மற்றும் வடமேற்கு திசையில் நகர்ந்து, இன்று இரவு ஒடிசா மற்றும் அதனை ஒட்டிய ஆந்திரா கடற்கரைப் பகுதிகளில், குறிப்பாக கோபல்பூர் மற்றும் பாராதீப் இடையே கரையை கடக்கும் வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக, தமிழகத்தில் அக்டோபர் 2 முதல் அக்டோபர் 8, 2025 வரை மழை பெய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. பொதுமக்கள், குறிப்பாக வேலைக்குச் சென்றுள்ளவர்கள், பாதுகாப்பாக வீடு திரும்புமாறும் எச்சரிக்கையாக இருக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.