K U M U D A M   N E W S

வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம்: தமிழகத்தில் 14 மாவட்டங்களுக்கு இன்று கனமழை எச்சரிக்கை!

வங்கக் கடலில் நிலைகொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால், இன்று (அக். 3) சென்னை உட்பட 14 மாவட்டங்களுக்குக் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. இது இன்று இரவுக்குள் ஒடிசா - ஆந்திரா கடலோரப் பகுதியில் புயலாகக் கரையை கடக்க வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

கரையை கடந்தது காற்றழுத்த தாழ்வு மண்டலம்.. தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு!

ஆந்திரா, தெற்கு ஒடிசா கடலோரப் பகுதிகளில் மையம் கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், கோபால்பூர் அருகே மணிக்கு 7 கிமீ வேகத்தில் கரையைக் கடந்ததால், ஆந்திரா மற்றும் தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.