முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இல்லம், கிண்டி ஆளுநர் மாளிகை, பிரபல நடிகை த்ரிஷா மற்றும் நடிகரும் அரசியல் பிரமுகருமான எஸ்.வி. சேகர் ஆகியோரின் இல்லங்களுக்கு மர்ம நபர்கள் ஒரே நேரத்தில் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையில் உள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இல்லம், கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகை, நடிகை த்ரிஷா மற்றும் நடிகரும் அரசியல் பிரமுகருமான எஸ்.வி. சேகர் உள்ளிட்டோரின் இல்லங்களுக்கு ஒரே நேரத்தில் மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
சோதனைக்குப் பின் வெளியான உண்மை
வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதாகக் கூறப்பட்டதையடுத்து, சம்பந்தப்பட்ட அனைத்து இடங்களுக்கும் காவல்துறையினரும், வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்களும் உடனடியாக வரவழைக்கப்பட்டனர். தீவிர சோதனை நடத்தப்பட்டதில், இந்த மிரட்டல் போலியானது என்று தெரியவந்தது.
இதனைத் தொடர்ந்து, வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர்கள் தொடர்பாகக் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
வெளிநாட்டிலிருந்து வந்த மிரட்டல்கள்
சமீபகாலமாகத் தமிழ்நாட்டில் மின்னஞ்சல் வழியாகப் பல முக்கிய இடங்களுக்கும் பிரபலங்களுக்கும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்படும் கலாசாரம் அதிகரித்து வருகிறது.
குறிப்பாக, கடந்த ஓராண்டாகச் சென்னையில் கல்வி நிலையங்கள், அரசு அலுவலகங்கள், முதலமைச்சர் வீடு, அமைச்சர்களின் இல்லங்கள் போன்றவற்றுக்கு மின்னஞ்சல் வழியாகவே மிரட்டல்கள் வருகின்றன.
இந்த மின்னஞ்சல் மிரட்டல்கள் பெரும்பாலும் 'டார்க் வெப்சைட்' மூலம் வெளிநாடுகளில் இருந்து விடுக்கப்படுவதாகக் கூறப்படுகிறது. இதனால் இந்தச் செயலில் ஈடுபடுபவர்களைக் கண்டறிந்து கைது செய்வதில் போலீசாருக்குச் சவால்கள் நிலவுகின்றன.
சில நேரங்களில் மதுபோதை அல்லது பழிவாங்கும் நடவடிக்கைக்காகத் தொலைபேசி வாயிலாகவும் மிரட்டல் விடுக்கப்படுகிறது. அவ்வாறு மிரட்டல் விடுபவர்களை உடனடியாகக் கண்டறிந்து கைது செய்வது அல்லது எச்சரிக்கை செய்வது வழக்கம்.
முக்கியப் பிரமுகர்களின் வீடுகளுக்கு விடுக்கப்பட்டுள்ள இந்த மிரட்டல், சென்னை மக்களிடையே பரபரப்பைப் ஏற்படுத்தியுள்ளது.