தமிழ்நாடு அரசு சார்பில், 'கல்வியில் சிறந்த தமிழ்நாடு' என்ற கல்வி எழுச்சிக் கொண்டாட்ட விழா இன்று சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில், தெலங்கானா மாநில முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார்.
அரசின் திட்டங்களால் பயன்
இந்த விழாவில், 2025-26ஆம் ஆண்டுக்கான 'புதுமைப் பெண்' மற்றும் 'தமிழ்ப் புதல்வன்' திட்டங்களின் கீழ் கல்வி உதவித்தொகை வழங்கும் திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது. இந்த திட்டங்களின் மூலம் சுமார் 2.57 லட்சம் மாணவர்கள் பயன் பெறுவார்கள் என்று கூறப்படுகிறது.
விழா பல்வேறு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு, தமிழ்நாடு அரசின் முக்கிய கல்வித் திட்டங்களான, காலை உணவுத் திட்டம், 'நான் முதல்வன்' திட்டம் மற்றும் அரசுப் பள்ளிகளில் இருந்து உயர்கல்வி நிறுவனங்களுக்குச் சென்ற மாணவர்களின் அனுபவங்கள் குறித்துப் பேசப்பட்டது.
பிரபலங்கள் பங்கேற்பு
இந்த நிகழ்ச்சியில், கல்வித்துறையில் சிறப்பாகச் செயல்பட்ட ஆசிரியர்கள், நிர்வாகிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் பாராட்டப்பட்டு கௌரவிக்கப்பட்டனர். தமிழ்நாட்டின் கல்வி வளர்ச்சிக்கு அரசு எடுத்துவரும் முயற்சிகளைப் பறைசாற்றும் வகையில் இந்த விழா நடைபெற்றது.
துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, நடிகர் சிவகார்த்திகேயன் மற்றும் திரைப்பட இயக்குநர்கள் மிஷ்கின், மாரிசெல்வராஜ், தியாகராஜன் குமாரராஜா, பிரேம் குமார், தமிழரசன் பச்சமுத்து மற்றும் கிரிக்கெட் வீரர் நட்ராஜ் மற்றும் பல்வேறு திரைபிரபலங்கள் கலந்து கொண்டனர்.
உலகின் மிகப்பெரிய செல்வம் கல்வி
பின்னர் நிகழ்ச்சியில் பேசிய நடிகர் சிவகார்த்திகேயன், “ உலகின் மிகப்பெரிய செல்வம் கல்வி. நான் சைக்கிள், ரிக்ஷா, பஸ்சில் ஆகியவற்றில் செல்வதற்கு நடந்து பள்ளிக்கு சென்ற எங்கள் அப்பா தான் காரணம். அவர் அன்று நடந்து சென்று படித்ததால் நாங்கள் இந்த வசதிகளை பெற முடிந்தது. நான் 2 டிகிரி படித்தேன். எனது அக்கா மூன்று டிகிரி படித்தார்.
குடும்பத்தில் ஒருவர் படித்தால் அது அடுத்த தலைமுறைகளையே மாற்றும். நான் படித்த துறைக்கும் இப்போது செய்து கொண்டிருக்கும் வேலைக்கும் சம்பந்தம் இல்லை. சினிமா துறை ரொம்ப, ரொம்ப சவாலானது. எந்த பின்னணியும் இல்லாமல் ஒரு துறைக்குள் நுழைவதே அசாத்தியமான விஷயம்.
சினிமா சவாலான துறை
அப்படி துறைக்குள் நுழைந்து, சவால் வரும்போதெல்லாம் நான் நினைத்துக்கொள்வது, என்கிட்ட இரண்டு டிகிரி இருக்கு. இங்கிருந்து அனுப்பினால்கூட ஏதாவது வேலை செஞ்சு பிழைச்சுக்குவேன்னு நினைச்சுக்குவேன்” என தெரிவித்தார்.