வங்கக் கடல் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியால் தமிழகத்துக்கு மழை குறைந்து, வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் நீலகிரி, கோவை, தேனி, தென்காசி ஆகிய நான்கு மாவட்டங்களைத் தவிர, பிற மாவட்டங்களில் வெப்பநிலை சற்று அதிகரித்து காணப்படும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வரும் நாட்களில் இயல்பான வெப்பநிலையை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை உயரக்கூடும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தென்மேற்கு பருவமழையின் காரணமாக நீலகிரி, கோவை உள்ளிட்ட சில மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. இதற்கிடையே, வங்கக் கடலில் அடுத்தடுத்து இரண்டு காற்றழுத்த தாழ்வுப் பகுதிகள் உருவாகியுள்ளன. அவற்றில் ஒன்று நாளை (செப். 26) காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, செப். 27ஆம் தேதி தெற்கு ஒரிசா மற்றும் வடக்கு ஆந்திரா கடலோரப் பகுதிகளில் கரையை கடக்கக்கூடும். இவை தமிழகத்துக்கு எந்தவித நேரடி தாக்கத்தையும் ஏற்படுத்தாது என வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இதன் அடிப்படையில், இன்று (செப். 25) கோவை மற்றும் நீலகிரி மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. நாளை (செப். 26) கோவை, நீலகிரி, தேனி மற்றும் தென்காசி மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும். அதைப்போல், செப். 27ஆம் தேதி கோவை மற்றும் நீலகிரி மாவட்டங்களில் கனமழை பெய்யும் என கணிக்கப்பட்டுள்ளது. வரும் செப். 30 வரை சில மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், தமிழகத்தில் நீலகிரி, கோவை, தேனி, தென்காசி தவிர மற்ற மாவட்டங்களில் வெப்பநிலை சற்று அதிகரித்துக் காணப்படுகிறது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்பட்டாலும், அதிகபட்ச வெப்பநிலை 36 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும். இது கடந்த சில தினங்களுக்கு முன்பு இருந்த 32 முதல் 33 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையை விட அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக மதுரையில் 37 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது. அதைத்தொடர்ந்து தொண்டியில் 36.6 டிகிரி செல்சியஸ், தூத்துக்குடியில் 36.4 டிகிரி செல்சியஸ், திருச்சியில் 35 டிகிரி செல்சியஸ், தஞ்சாவூரில் 35 டிகிரி செல்சியஸ் மற்றும் கரூரில் 35 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது.