தமிழ்நாடு

சென்னையில் மேலும் 10 இடங்களில் ஸ்மார்ட் வாட்டர் ஏடிஎம்கள் வரவு - மெரினா, பெசன்ட் நகர் கடற்கரைகளிலும் விரிவாக்கம்!

பொதுமக்களுக்குச் சுத்தமான குடிநீர் வழங்கும் நோக்கில், சென்னை மெட்ரோ வாட்டர், மேலும் 10 புதிய இடங்களில் திறன்மிகு தானியங்கி குடிநீர் வழங்கும் இயந்திரங்களை (Smart Water ATM) அமைக்கத் திட்டமிட்டுள்ளது.

சென்னையில் மேலும் 10 இடங்களில் ஸ்மார்ட் வாட்டர் ஏடிஎம்கள் வரவு - மெரினா, பெசன்ட் நகர் கடற்கரைகளிலும் விரிவாக்கம்!
சென்னையில் மேலும் 10 இடங்களில் ஸ்மார்ட் வாட்டர் ஏடிஎம்கள் வரவு - மெரினா, பெசன்ட் நகர் கடற்கரைகளிலும் விரிவாக்கம்!
பொதுமக்களுக்குச் சுத்தமான குடிநீர் கிடைப்பதை உறுதி செய்யும் நோக்கில், சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் அகற்று வாரியம் (மெட்ரோ வாட்டர்), சென்னையில் மேலும் 10 இடங்களில் திறன்மிகு தானியங்கி குடிநீர் வழங்கும் இயந்திரங்களை (ஸ்மார்ட் வாட்டர் ஏடிஎம்) நிறுவத் திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

சென்னை பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீரகற்று வாரியம் பொதுமக்களின் தேவையைப் பொறுத்து, சென்னை முழுவதும் திறன்மிகு தானியங்கி குடிநீர் வழங்கும் இயந்திரங்களை (குடிநீர் ஏடிஎம்) அதிகப்படுத்த திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பொது இடங்களில் சுத்தமான குடிநீர் கிடைப்பதை உறுதிப்படுத்தும் நோக்கில், சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் அகற்று வாரியத்தின் சார்பில் கடந்த ஜூன் மாதம் சென்னையின் 50 முக்கிய இடங்களில் இலவச திறன்மிகு தானியங்கி குடிநீர் வழங்கும் இயந்திரங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இந்த திட்டத்தினை அண்ணா சதுக்கத்தில் கடந்த ஜூன் மாதம் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். திட்டம் தொடங்கப்பட்டதிலிருந்து தற்போது வரை சராசரியாக தினமும் குறைந்தது 40,000 லிட்டர் குடிநீர் பயன்படுத்தப்படுகிறது.

இந்த நிலையில் அதிக மக்கள் திரள் உள்ள பகுதிகளில் கூடுதலாக திறன்மிகு தானியங்கி குடிநீர் வழங்கும் இயந்திரங்களை நிறுவ திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. பிராட்வே, பாடி சந்திப்பு, ஜிகேஎம் காலனி, கொளத்தூர், தொல்காப்பியர் பூங்கா மற்றும் அரசு ஸ்டான்லி மருத்துவமனை உள்ளிட்ட 10 இடங்களில் தண்ணீர் ஏடிஎம்கள் நிறுவப்பட உள்ளவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும், திறன்மிகு தானியங்கி குடிநீர் வழங்கும் இயந்திரங்களை நிறுவ பொதுமக்களின் தேவைகள் மற்றும் கோரிக்கைகள் அடிப்படையில் கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டு இடங்ள் தேர்வு செய்யப்படுகின்றன. தற்போது திறன்மிகு தானியங்கி குடிநீர் வழங்கும் இயந்திரங்களுக்கு நல்ல ஆதரவு கிடைத்துள்ளதால் மெரினா கடற்கரையில் இன்னும் சில குடிநீர் ஏடிஎம்களை நிறுவ திட்டமிடப்பட்டுள்ளது.