K U M U D A M   N E W S

சென்னையில் மேலும் 10 இடங்களில் ஸ்மார்ட் வாட்டர் ஏடிஎம்கள் வரவு - மெரினா, பெசன்ட் நகர் கடற்கரைகளிலும் விரிவாக்கம்!

பொதுமக்களுக்குச் சுத்தமான குடிநீர் வழங்கும் நோக்கில், சென்னை மெட்ரோ வாட்டர், மேலும் 10 புதிய இடங்களில் திறன்மிகு தானியங்கி குடிநீர் வழங்கும் இயந்திரங்களை (Smart Water ATM) அமைக்கத் திட்டமிட்டுள்ளது.

கரூர் விவகாரம்: விஜய் தவறு செய்திருந்தால் நடவடிக்கை உறுதி - சபாநாயகர் அப்பாவு கடுமையான விமர்சனம்!

கரூர் கூட்ட நெரிசல் விவகாரத்தில் விஜய்யின் காலதாமதமே விபத்துக்குக் காரணம் என்று சபாநாயகர் அப்பாவு காட்டமாகக் குற்றம் சாட்டிய நிலையில், இந்த விவகாரத்தில் விஜய் தவறு செய்திருந்தால் அரசு நடவடிக்கை எடுப்பது உறுதி என்றும் எச்சரித்தார்.

ஸ்டார்ட் அப் வளர்ச்சியில் தமிழ்நாடு முதலிடம் - அமைச்சர் அன்பரசன் பெருமிதம்!

புத்தொழில் நிறுவனங்களை (ஸ்டார்ட் அப்) ஊக்குவிப்பதில் தமிழ்நாடு முதலிடம் பெற்றுள்ளது என அமைச்சர் தா.மோ.அன்பரசன் பெருமிதம் தெரிவித்தார். அக். 9 மற்றும் 10 தேதிகளில் கோவையில் நடக்கும் உலகப் புத்தொழில் மாநாட்டை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.

CBSE 10, 12 பொதுத் தேர்வு அட்டவணை வெளியீடு: பிப்.17ல் தேர்வுகள் தொடக்கம்!

மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (CBSE) 2026ஆம் ஆண்டுக்கான 10 மற்றும் 12ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு அட்டவணையை வெளியிட்டுள்ளது. 10ஆம் வகுப்புக்கு இரண்டு கட்டத் தேர்வுகள் பிப். 17 முதல் தொடங்குகிறது.

ஏழை மக்களுக்கு நற்செய்தி: உஜ்வாலா திட்டம்: 25 லட்சம் புதிய இலவச LPG இணைப்புகள்!

உஜ்வாலா திட்டத்தின் கீழ் மத்திய அரசு 25 லட்சம் புதிய இலவச LPG இணைப்புகள் வழங்க உள்ளதாக மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் புரி தெரிவித்துள்ளார்.

கேள்வி கேட்பதை பாஜக விரும்பவில்லை.. ராகுல் காந்தி விமர்சனம்

"இந்தியாவின் ஏழைக் குழந்தைகள் ஆங்கிலம் கற்பதை பாஜக - ஆர்எஸ்எஸ் விரும்பவில்லை" என்று ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.

சாதி சான்றிதழ் தொடர்பாக அரசுக்கு உயர்நீதிமன்றம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!

சாதி சான்றிதழ்களில் சாதியின் பெயர்கள் தமிழ், ஆங்கிலம் இரண்டிலும் ஒரே மாதிரியாகவும், எழுத்து பிழைகள் இல்லாமலும் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.