சென்னை வடபழனி பகுதியைச் சேர்ந்த 20 வயது இளம்பெண் ஒருவர், தனது தந்தை காவலாளியாகப் பணியாற்றுவதால் பெரும்பாலும் தாயின் பராமரிப்பிலேயே இருந்து வந்துள்ளார். இந்நிலையில், அந்த இளம்பெண்ணின் தாயாருக்கும் தட்சணாமூர்த்தி (50) என்பவருக்கும் இடையே இருந்த பழக்கம் காரணமாக, அந்தப் பெண் தனது தாயுடன் பேசுவதைத் தவிர்த்து வந்துள்ளார்.
திட்டமிட்டு நடத்தப்பட்ட கொடூரம்
கடந்த ஜனவரி மாதம் அந்த இளம்பெண்ணுக்கு உடல்நிலை சரியில்லாமல் போனபோது, அவரது தாயார் மாத்திரை ஒன்றைக் கொடுத்துள்ளார். அந்த மாத்திரையைச் சாப்பிட்ட சிறிது நேரத்திலேயே இளம்பெண் மயக்கமடைந்துள்ளார். இந்தச் சூழலைப் பயன்படுத்திக் கொண்ட தட்சணாமூர்த்தி, அந்தப் பெண்ணைப் பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறப்படுகிறது. மயக்கம் தெளிந்து எழுந்த அந்தப் பெண், உடல் வலி குறித்துத் தனது தாயிடம் கேட்டபோது, அவர் அதனை அலட்சியப்படுத்தியுள்ளார்.
இதனைத் தொடர்ந்து அதே மாதத்தில் மீண்டும் ஒருமுறை அந்தப் பெண்ணுக்கு மயக்க மாத்திரை கொடுக்கப்பட்டு, தட்சணாமூர்த்தியால் அவர் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார்.
வெளியே வந்த உண்மை
தாயின் செயல்களால் ஆத்திரமடைந்த அந்தப் பெண், வீட்டை விட்டு வெளியேறி திருவண்ணாமலையில் உள்ள தனது பெரியம்மா வீட்டிற்குச் சென்றுள்ளார். அங்கு அவருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டதால் அரசு மருத்துவமனையில் பரிசோதனை செய்தபோது, அவர் கர்ப்பமாக இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனால் அதிர்ச்சியடைந்த அந்தப் பெண், நடந்த கொடுமைகளைத் தனது உறவினர்களிடம் கூறி செய்யாறு காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
போலீஸ் நடவடிக்கை
சம்பவம் நடந்தது சென்னை என்பதால், இந்த வழக்கு வடபழனி அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு மாற்றப்பட்டது. காவல்துறையினர் நடத்திய முதற்கட்ட விசாரணையில் புகாரில் உண்மை இருப்பது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து, அந்தப் பெண்ணின் தாயார் மற்றும் தட்சணாமூர்த்தி ஆகிய இருவர் மீதும் பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட பல்வேறு சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ள வடபழனி போலீசார், தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

LIVE 24 X 7