கடந்த சில நாட்களாகக் கடும் ஏற்ற இறக்கங்களைச் சந்தித்து வரும் தங்கம் விலை, நேற்று மாலையில் அதிரடியாக உயர்ந்த நிலையில் இன்று (ஏப்ரல் 7) மீண்டும் குறைந்துள்ளது. சர்வதேசச் சந்தை மாற்றங்களால் நிலவும் இந்த நிலையற்ற தன்மை நகைப்பிரியர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையில் நேற்று காலை தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,120 குறைந்திருந்த நிலையில், நேற்று மாலையே மீண்டும் ரூ. 1,440 உயர்ந்து அதிர்ச்சியளித்தது. இந்நிலையில், இன்று காலை ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 1,040 குறைந்து, ஒரு சவரன் ரூ. 1,10,880-க்கு விற்பனை செய்யப்படுகிறது. நேற்று மாலை ஒரு சவரன் ரூ. 1,11,920-க்கு விற்பனையானது குறிப்பிடத்தக்கது.
இன்றைய விலை நிலவரம்
22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு ரூ. 130 குறைந்து, ஒரு கிராம் ரூ. 13,860-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கடந்த வார இறுதியில் ஒரு கிராம் ரூ. 13,950-க்கு விற்ற தங்கம், தற்போது 14 ஆயிரம் ரூபாயைத் தொடாமல் சரிவைக் கண்டுள்ளது நுகர்வோருக்குச் சற்று ஆறுதலைத் தந்துயுள்ளது.
வெள்ளி விலை சரிவு
தங்கத்தைப் போலவே வெள்ளி விலையும் இன்று சரிவைச் சந்தித்துள்ளது. வெள்ளியின் விலை கிராமுக்கு ரூ. 5-ம், கிலோவுக்கு ரூ. 5,000-ம் குறைந்துள்ளது. இதன்படி, ஒரு கிராம் வெள்ளி ரூ. 255-க்கும், ஒரு கிலோ பார் வெள்ளி ரூ. 2,55,000-க்கும் இன்று விற்பனை செய்யப்படுகிறது.

LIVE 24 X 7