தமிழ்நாடு

குடையை ரெடியா வச்சிக்கோங்க மக்களே.. வெளுத்து வாங்கப்போகும் கனமழை!

தமிழகத்தில் இன்று 3 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

குடையை ரெடியா வச்சிக்கோங்க மக்களே.. வெளுத்து வாங்கப்போகும் கனமழை!
TN Weather
தமிழகத்தில் கோடை வெயில் தொடங்குவதற்கு முன்னரே கடந்த சில வாரங்களாக வெய்யில் தாக்கம் வாட்டி வதைத்து வரும் நிலையில், இன்று 3 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் இன்று சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் சுமார் ஒரு மணி நேரம் கனமழை பெய்தது.

இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில், தெலங்கானா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகள் முதல் மன்னார் வளைகுடா வரை ராயலசீமா, தமிழகம் வழியாக ஒரு காற்றழுத்த தாழ்வு பாதை நிலவுகிறது.

கனமழைக்கு வாய்ப்பு

இதன் காரணமாக, இன்று தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

விருதுநகர், தேனி, ராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய (மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில்) கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

தொடர் மிதமான மழை

மேலும், நாளை (ஏப்.07) முதல் 10 ஆம் தேதி வரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

அதேபோல், 11 மற்றும் 12 ஆகிய தேதிகளில் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில்
லேசானது முதல் மிதமான மழையும், டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் மற்று காரைக்கால் பகுதிகளிலும் லேசான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகம் மற்று புதுவையில் வறண்ட வானிலை நிலவக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.